அஞ்சலி உங்களுக்கு புரியிலியாங்க... நீங்க பொண்ணா பொறந்ததே தப்புன்னு சொல்றாங்க!
சென்னை: சன் டிவியில் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும் சந்திரகுமாரி சீரியலில் ராதிகாவுக்கு பதில் விஜி சந்திரசேகர் நடிச்சு இருந்தாலும் நல்லாவே இருக்கு.
காணாம போன சந்திரா கிடைச்சுட்டாங்கன்ற உண்மை, அஞ்சலிக்கும், கிராமத்திலிருந்து வந்திருக்கும் சத்யாவுக்கு மட்டும் தெரியுது. சத்யாவும், அஞ்சலிக்கு முறைப்பையன்தான்.
அஞ்சலி ஜெயிலில் இருந்து வெளியில் வரவும், அவ அம்மா ஏக்கத்திலிருந்து விடுபடவும் இந்த சத்யாதான் காரணம். இருவரும் பேசிக்கிட்டு இருக்காங்க.அந்த சமயத்துல அஞ்சலியின் அத்தை வர்றாங்க.

போன பதட்டம்
வாங்க அத்தேன்னு அஞ்சலி சொல்ல, உன்கிட்ட தனியா கொஞ்சம் பேசணும் அஞ்சலின்னு அத்தை சொல்றாங்க. சத்யா நகரப்போக, நீங்க இருங்க சத்யான்னு அஞ்சலி சொல்லிட்டு, சொல்லுங்க அத்தைன்னு சொல்றா. அம்மா காணாம போன பதட்டம் உன் முகத்துல கொஞ்சம் கூட தெரியலையேன்னு அத்தை கேட்கறாங்க.

இவ்ளோ தூரம்
இதை கேட்கத்தான் இவ்ளோ தூரம் வந்தீங்களான்னு அஞ்சலி கேட்டுவிட்டு, சரி சரி உட்காருங்க அத்தைன்னு சொல்றா. இல்லை அஞ்சலி நான் உட்கார வரலை. உங்கிட்ட உதவி கேட்கத்தான் வந்தேன். முகுந்தனை அடுத்த வாரம் கோர்ட்டுக்கு கொண்டு வர்றாங்கன்னு சொல்றா.. தெரியும் அத்தைன்னு அஞ்சலி சொல்ல, நீ கேஸை வாபஸ் வாங்கிடு அஞ்சலின்னு கேட்கறாங்க அத்தை..

தப்பு உன்மேலேயும்
முகுந்தன் உன்மேல அளவுக்கு அதிகமா ஆசைப்பட்டுட்டான்னு அத்தை சொல்ல, எப்படி அத்தை.. என்னை கடத்தி, ரூம்ல அடைச்சு வச்சு அடிச்சு கொடுமை படுத்தினது ஆசையாலதானான்னு கேட்கறா அஞ்சலி.ஏதோ தப்பா நடந்து போச்சு.. தப்பு அவன் மேல மட்டும்தானா.. உன் மேலயும் இருக்கு அஞ்சலின்னு அத்தை சொல்றாங்க.

தப்பு என்ன
என்மேல என்ன தப்பு இருக்கு அத்தைன்னு அஞ்சலி கேட்க, அஞ்சலி உங்களுக்கு புரியிலியாங்க.. நீங்க பொண்ணா பொறந்ததே தப்பு. அதுவும் முகுந்தனுக்கு முறைப் பொண்ணா பொறந்தது தப்பு. அதனாலதான் முகுந்தன் உரிமையில அப்படி செய்துட்டான்னு சொல்றாங்க அஞ்சலின்னு நச்சுன்னு கேட்கறான். அதோட இந்த மாதிரி அம்மாக்கள் தங்கள் புள்ளைங்க செய்யற தப்பை எதிர்த்து கேட்காம இருக்கறதுனாலதான் பொண்ணுங்களுக்கு நாட்டுல பாதுகாப்பு இல்லாம போகுதுன்னும் சொல்றான்.
காலத்துக்கு ஏற்ற இந்த வசனம் ரொம்ப நச்சுன்னு இருந்துச்சு. யோசிக்க வேண்டிய விஷயமாவும் இருந்துச்சு.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications