அவள் பெயர் தமிழரசி.. நடிகை மனோசித்ரா பட்னு சொல்லிட்டாங்க.. சினிமாவிலிருந்து ஒதுங்க வீரம் படம் காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அவள் பெயர் தமிழரசி படத்தில் நடித்த மனோசித்ரா, வீரம், நீர்ப்பறவை உள்ளிட்ட படங்களில் நடித்த அனுபவம் பற்றி சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில், திரையுலகிலிருந்து ஒதுங்கியதற்கான காரணத்தையும் கூறியிருக்கிறார்.

நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான, அவள் பெயர் தமிழரசி என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் மனோசித்ரா... இந்த படத்தில் நடித்து, ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.. நிறைய படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன..

manochithra veeram

அந்தவகையில், சுனைனா மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான நீர்ப்பறவையில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவும், நடிகர் இமான் அண்ணாச்சியின் சகோதரி கதாபாத்திரத்தில் நடித்தார். அதேபோல, அஜித்தின் "வீரம்" படத்தில் அனிதா கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களில் நடித்தார்.. இன்னும் ஏராளமான படங்கள் வரிசைக்கட்டி குவிந்தன.

ஆனால் இதில் பல படங்கள் முழுமையடையாமல் போகவே பாதியில் நின்றுவிட்டன.. அதேபோல, எதிர்பார்த்த அளவுக்கும், உச்ச நடிகையாக மனோசித்ராவால் வளர முடியவில்லை..

என்ன காரணம்: சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார் என்றாலும் ஒருகட்டத்தில் திடீரென சினிமாவிலிருந்தே காணாமல் போனார். இந்நிலையில், தான் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருப்பது குறித்து, மனோசித்ரா, பேட்டி ஒன்றில் வெளிப்படையாகவும், சற்று மனம் வேதனையுடன் கூறியிருக்கிறார்.

Aadhan Cinema என்ற யூடியூப் சேனலுக்கு மனோசித்ரா அளித்த பேட்டியில், "அவள் பெயர் தமிழரசி" படத்தில் நடித்தபோதே, நல்ல பெயர் எனக்கு கிடைத்தது.. நடிப்பிலும் பலரது பாராட்டை பெற்றேன். அந்த நேரத்தில்தான் நீர்ப்பறவை படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.. அவார்டு வாங்கிய அத்தனை நடிகர்களையும் வைத்து எடுக்கப்பட்ட படம் நீர்ப்பறவை. அந்தவகையில் நானும் ஏற்கனவே கவர்னரிடம் அவார்டு வாங்கியிருந்தேன். அந்த அடிப்படையில் என்னை நீர்ப்பறவை படத்திற்காக அணுகினார்கள்.

நீர்ப்பறவை: ஆனாலும், நான் ஹீரோயினாக நடித்து கொண்டிருப்பதாக கூறியும், சிறிய கேரக்டர் என்றாலும் என்னை சமாதானம் செய்து நடிக்க வைத்தார்கள்.. தப்பான முடிவு எடுத்துட்டோமோ என்று நினைத்து கொண்டேதான் நடித்தேன்.. நானும் யாரிடமும் சரியாக தொடர்பு வைத்து கொள்வதில்லை. இது என்னிடத்திலுள்ள மைனஸ்.. பரதநாட்டியம், வீணை, வீடு, கோவில், புத்தகம் இதுதான் என்னுடைய பழக்கம்.

வீரம் படத்திலும் அப்படித்தான் நடித்தேன்.. சினிமாவிலிருந்து விலக காரணமானதும், இந்த வீரம் படத்தால்தான். எப்போதுமே தமிழ் சினிமாவை பொறுத்தவரை, ஒருத்தர் வில்லேஜ் கேரக்டர் நடித்தால், அடுத்த படத்திலும் அதே கேரக்டர்தான் தருவார்கள்.. 2வது ஹீரோயின், அதே கேரக்டரில்தான் நடிக்க கூப்பிடுவார்கள்.

கேரக்டர்கள்: ஆனால், நடிக்க வந்துவிட்டால், எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடிக்கவே அனைவரும் விரும்புவார்கள். அவர்களின் மென்டல் ஹெல்த்தும் அப்படித்தான் இருக்கும். ஆனால், இதை சினிமாவில் பலர் புரிந்து கொள்வதில்லை. நிறைய நடிகைகளின் நடிப்பை சரியாக பயன்படுத்தி கொள்வதில்லை.

"வீரம்" படத்தில் தமன்னா இறந்துடுவாங்க, அஜித்துக்கு அடுத்த ஹீரோயின் நீங்கதான் என்று தான் அதில் என்னிடம் சொன்னார்கள்.. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

போர் அடித்தது: அதேபோல, அதிகமான மேக்கப் போடக்கூடாது, காஸ்ட்யூம் பிரச்சனையும் எழுந்தது.. எனக்கு எப்போது சீரியஸாக வேலை பார்த்து பழக்கம். ஆனால், வீரம் படத்தில் செட்டில் எல்லாரும் பாயாசம் சாப்பிட்டு, ஜாலியா இருந்தாங்க. எப்போ ஷூட் நடக்கும், எப்போ செட் போடுவாங்கன்னு தெரியாது.. அதனால நான் கேரவனில் உட்கார்ந்து அழ ஆரம்பிச்சிட்டேன்" என்றெல்லாம் விலாவரியாக அதில் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+