Ayudha ezhuthu serial: மொட்டாகவே இருந்த காதல் பூக்கும் தருணம்!
சென்னை: பூ பூப்பதை யார் பார்த்தது காதல் கூட பூவை போன்றது என்று ஒரு பாடல் உண்டு. இதுவரை மொட்டாகவே இருந்த காதல் பூ பூக்கும் தருணத்துக்கு வந்துள்ளது. விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியலில்தான் இந்த காதல்.
கலெக்டர் இந்திரா தன்னை எதிரியாக நினைக்கும் காளி அம்மாவின் கடைசி மகன் சக்தியை அவன் யார் என்று தெரியாமலே பழகறது, மனதுக்குள் காதல் கொள்வது, அதை சொல்லாமல் இருப்பது என்று கதை ஆரம்பித்தது.
சக்தியும் அப்படித்தான்.. படிக்காதவன். தான் காளி அம்மாவின் மகன் அல்ல, இந்திராவுக்காக அவரிடம் ஸ்பை போல் இருப்பதாக பாவனை காட்டுகிறான். இவனுக்கும் இந்திரா மீது காதல்.இவனும் சொல்லாமலே இருக்கிறான்.

மிஸ்டுகால் இந்திரா
இந்திராவுக்கு சக்தி நினைவு வந்து போன் கால் செய்து கட் செய்து விடுகிறாள். உடனே இவன் அழைக்கிறான்.என்ன சக்தின்னு இவள் கேட்கிறாள்.இல்லை கலெக்டர் நீங்கதான் போன் பண்ணி இருந்தீங்கன்னு சொல்கிறான். அப்படியா இல்லையே நான் பண்ணலையேன்னு இந்திரா சொல்கிறாள். கழுவும் மீனில் நழுவும் மீனாக இந்திரா சொல்கிறாள்.

என்ன பண்றீங்க கலெக்டர்
அப்படியா..உங்க போன்லேர்ந்து கால் வந்துச்சு கலெக்டரே என்கிறான் சக்தி.தூங்கிட்டு இருந்தேன்.அதான் தெரியாம கை பட்டு போன் கால் வந்திருக்கும்னு சொல்றா.அப்படியா இப்போ என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க கலெக்டரேன்னு கேட்க, சும்மா போரடிக்குதுன்னு நின்னுகிட்டு இருக்கேன்னு சொல்றா. கலெக்டரே இப்போதுதான் தூங்கிட்டு இருக்கேன்னு சொன்னீங்கன்னு கேட்கறான். கண்டுப்பிடிச்சுட்டியா.. சரி நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கேன்னு கேட்கறான்.

உங்க போட்டோவை
உண்மையை சொல்லனும்னா உங்க போட்டோவை பார்த்துகிட்டு இருக்கேன் கலெக்டரேன்னு சொல்றான். என் போட்டோ உன்கிட்டே ஏதுன்னு இவள் கேட்க, உங்க வாட்சப் ஸ்டேட்டஸ்ல பார்த்துக்கிட்டு இருக்கேன்னு சொல்றான். உங்க கிட்டே சொல்லணும்னு தோணுது.ஆனா, கதை கந்தலாகிடும் வேணாம்னு சொல்றா.

நாளைக்கு சொல்றேன்
எனக்கும் அப்படித்தான் சொல்லணும்னு தோணுது. ஆனா,இன்னொரு நாளைக்கு சொல்றேன்னு சொல்றான்.ஆமாம் அப்படியே கிடப்பில் போடுவதுதான் நல்லதுன்னு சொல்றா இந்திரா. இப்படிப்பட்ட பண்பான காதல் இருவரிடமும் உள்ளது. ஆனால், இருவர் தரப்பிலும் தவறு உள்ளதே...
அவன் காளி அம்மாவின் மகன் என்பதை மறைக்கிறான்.இவள் கலெக்டராக இருந்தும் அவன் காளி அம்மாவின் மகன் என்று தெரியாமல் பழகுகிறாள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications