Ayudha Ezhuthu Serial: 2 பேரும் பேசாம கைக்கோர்த்து இப்படியே இருக்கலாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியலில் கலெக்டர் இந்திரா காதலில் விழுந்து விட்டாள் போலும். காளி அம்மாள் மகன் சக்தியுடன் நட்பாக இருக்கிறாள் என்று மட்டுமே வீட்டார் எண்ணிக் கொண்டு இருக்க, இன்று கதையே மாறி விட்டது.

சரவணன் வாத்தியார் கலெக்டர் இந்திரா பேச்சை கேட்டு, போலீசில் புகார் குடுத்தான்னு அவனை கொலை செய்துட்டாங்க காளி அம்மாள். காரணம், அந்த ஊரில் பள்ளிக்கூடமே நடக்கக் கூடாது என்பது காளி அம்மா எழுதாத சட்டம்.

அதை மீறி கலெக்டர் சொல் பேச்சை கேட்ட சரவணனுக்கு உயிர் போனதும், பொண்டாட்டி ,குழந்தை அனாதையானதும்தான் மிச்சம். பாவம் பார்த்து காளி அம்மா பணம் குடுத்துவிட, அவள் திரும்பி வந்து தனக்கு பணம் வேண்டாம் என்று திருப்பி கொடுத்துவிட்டு போகிறாள்.

தலைமறைவாய் இந்திரா

தலைமறைவாய் இந்திரா

கலெக்டர் இந்திரா தலையில் துப்பட்டாவைப் போர்த்திக் கொண்டு,தனது உதவியாளர் ஆடியபாதத்துடன் வந்து, கோயிலுக்கு வந்திருக்கும் சரவணனின் பெண்டாட்டியை பார்த்து பணம் கொடுக்கலாம் என்று வருகிறாள். அப்போது, திடீரென்று ஒருத்தர் வந்து, அம்மா நீங்கதான் சரவணன் மனைவியான்னு கேட்க, ஆமாம் என்று சொல்கிறாள், குழந்தை மார்பில் தூங்குகிறது.

பத்து லட்சம்

பத்து லட்சம்

உங்க வீட்டுக்காரர் மதுரையில் வீடு வாங்கிக்கறேன்னு பத்து லட்சம் பணம் குடுத்து இருந்தார்.அதில் அஞ்சு லட்சம் ரூபாய் பணம் செலவாயிருச்சு.இப்போ இதை வாங்கிக்கோங்க. இன்னும் ஒரு வாரத்தில் மீதி அஞ்சு லட்சம் ரூபாய் பணம் குடுத்துடறேன்னு சொல்ல, நிஜமாதானா?அவர்கிட்டே இவ்ளோ பணம் ஏதுன்னு தெரியலை. என்கிட்டேயும் இது பத்தி சொல்லலைன்னு சொல்லி வாங்கிக்கறா.

காளி அம்மா மகன்

காளி அம்மா மகன்

கொஞ்ச நேரம் அப்படியே நிற்கிறாள் இந்திரா.என்னடா நாம் பணம் கொடுக்கலாம்னு வந்தால் இப்படி ஆகிப் போச்சேன்னு நிற்க திடீர்னு பணம் குடுத்தது சக்திதான்னு தெரிய வருது.அங்கே ஒளிஞ்சு இருந்த சக்தி அவன்கிட்டே வந்து சந்தேகம் வராதபடி சொல்லி கொடுத்துட்டே இல்லேடான்னு கேட்கிறான்.

இந்திரா சிம்பதி

இந்திரா சிம்பதி

சக்தியின் சிம்பதியால் இந்திரா அழுதுகொண்டே நிற்க, சக்தி பார்த்து விடுகிறான். ஆடியபாதம் வீட்டுக்கு போயிடறார். எனக்காக சரவணன் உயிர் வீணா போச்சுன்னு இந்திரா அழ, என்ன கலெக்டரே நீங்க. அப்படி இல்லேன்னா உங்க வீட்டில் யார் உயிருக்காவது ஆபத்து வந்து இருக்கும்...விடுங்க கலெக்டரே..அதையே நினைச்சு ஃபீல் பண்ணாதீங்கன்னு சொல்றான்.

சக்தி சந்தோசம்

சக்தி சந்தோசம்

உங்க கூட இருக்கற வரைக்கும்தான் எனக்கு சந்தோஷமா தைரியமா இருக்கு சக்தி. நீங்க இல்லேன்னா தைரியம் போயிருது நம்பிக்கை போயிருது சக்தின்னு சொல்லிட்டு சரி வரேன்னு எழுந்து போறா. அவன் மெதுவாக அவளின் கையை பிடிக்கிறான்.அவன் தப்புன்னு நினைச்சு கையை விட்டுட்டான், அவள் கையை நீட்டிக்கிட்டு அப்படியே நிற்கிறாள்.

ரேவதி மாதிரி

ரேவதி மாதிரி

தேவர் மகன் படத்தில் ரேவதி கையை கமல் பிடிக்கணும்னு வச்சுக்கிட்டு இருப்பாங்களே அதே போல வச்சுக்கிட்டே நிக்கிறாள். அவனும் அவள் கையைப் பிடிச்சு உட்காருங்க. நீங்களும் பேச வேணாம், நானும்பேச வேணாம். ரெண்டு பேரும் இப்படியே உட்கார்ந்து இருக்கலாம்னு சொல்றான். அவளும் பக்கத்தில் உட்கார்ந்து, கைக்கோர்த்து அவனின் தோளில் சாய்ந்துக் கொள்கிறாள். கடைசியில் இவளின் எதிரியான காளி அம்மாவின் கடைசி பையன்தான் சக்தின்னு இன்னும் இந்திராவுக்கு தெரியலை. என்னத்தை சொல்றது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+