Ayudha Ezhuthu Serial: காளி அம்மா நல்லவுகளா கெட்டவுகளா? தெரியலையேப்பா!
சென்னை: விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியலில் ஊருக்கே பெரும் தலையாக இருக்கும் காளி அம்மா நல்லவங்களா கெட்டவங்களா? ஊர் பிள்ளைகள் படிக்க கூடாது என்று பள்ளியை நடத்த விடாமல் செய்வதற்கு காரணம் என்ன?
பள்ளி வாத்தியார் மட்டும் இன்றி யார் பணம் கேட்டாலும், உதவி செய்கிறார். எல்லாருக்கும் நல்லது செய்கிறார். ஆனால், வீட்டில் மட்டும் அன்றி, ஊர் மக்களும் தனது பேச்சை கேட்டுத்தான் வாழ வேண்டும் என்று உத்தரவு போடுகிறார்.
பசி என்று கேட்பவர்களுக்கு சாப்பாடு, இன்ன பிற உதவிகள் செய்கிறார். ஆனால், தன் பேச்சை மீறினால் அவர்களை கொன்றே போட்டு விடுகிறார்.இவங்க நல்லவங்களா கெட்டவங்களா?

சரவணன் வாத்தியார்
சரவணன் வாத்தியார்தான் இந்திரா கலெக்டர் பேச்சை கேட்டுகிட்டு.ஊருக்குள் பள்ளிக் கூடம் நடக்க வேண்டும் என்று டவுனுக்கு போயி போலீசில் காளி அம்மாள் மேல் புகார் கொடுத்துட்டு சரவணன் வருவதற்குள் அந்த புகார் காளி அம்மா கைக்கே வந்துடுது. சரவணன் வரும் பஸ்ஸை இடை மறிச்சு, அவனை மட்டும் இறக்கிடறாங்க.

என் பிள்ளை
சரவணா.. நீ இந்த ஊருக்கு ஒத்தை வாத்தியாரா வந்தே. அப்போது காலில் செருப்பு கூட இல்லை. உனக்கு எல்லாம் வாங்கிக் கொடுத்து, பள்ளிக்கு கூடம் மட்டும் நடத்த வேணாம். உனக்கு தங்க இடம் தரேன்..அந்த வீட்டை உன் பேருக்கே எழுதியும் வச்சேன்.நீ ஆசைப்பட்ட பெண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சேன்.

மாசா மாசம்
இன்னி வரைக்கும் மாசாமாசம் நான்தான் பணம் கொடுக்கறேன். உன் குடும்பம் என்னாலதான் பிழைச்சுகிட்டு இருக்குது.பேசாம இருந்துடு சரவணன்னு சொன்னேன். அன்னிக்கு கூட உன் பொண்ணை கடத்தி வச்சு சும்மா பயம் காட்டினேன். இவ்ளோ செய்திருக்கேன் உனக்கு.நன்றி மறந்துட்டியே...

பிள்ளை பொண்டாட்டியை
வேணாம் சரவணா..உன் பெண்டாட்டி பிள்ளையை நான் ஒரு குறையும் இல்லமாப் பார்த்துக்கறேன்.நீ இருக்காதே செத்துப் போன்னு சொல்லி ஆள் வச்சு அடிச்சு சாகடிச்சுடறாங்க. இவளோ செய்யரேன்னு சொல்றாங்க. ஆனா,கொலையும் செய்யறாங்க.தன் வீட்டு பிள்ளைகள் கூட படிக்க கூடாதுன்னு நினைக்கறாங்க. இவங்க நல்லவங்களா கெட்டவங்களா?
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications