Ayudha Ezhuthu Serial: அநியாயமா இருக்கே... ஊருக்குள்ளே பள்ளிகூடம் கூடாதா?
சென்னை: விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியலில் சப் கலெக்டர் இந்திரா, தான் வேலைப் பார்க்கும் ஊரில் பள்ளிக்கூடம் நடக்க மாட்டேங்குதே, ஆசிரியர்கள் சும்மா உட்கார்ந்து சம்பளம் வாங்கறாங்களேன்னு கவலையில் இருக்கிறாள்.
பள்ளிக் கூடத்துக்கு பிள்ளைகள் வராமல் போனதற்கு அந்த ஊரின் ரவுடி அம்மா காளி அம்மாதான் காரணம் என்று இந்திராவுக்கு தெரிந்து போகிறது.
எப்படியாவது பள்ளிக்கூடத்துக்கு பிள்ளைகளை சேர்த்தே ஆக வேண்டும் என்று முடிவு எடுக்கிறாள் சப் கலெக்டர் இந்திரா.முதலில் வீடு வீடாக சென்று பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப கோரிக்கை வைக்க புறப்படுகிறாள்.

ஒரே முடிவில்
அந்த ஊரில் யாருமே தங்கள் பிள்ளைகளை காளி அம்மா சொல்லாமல் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்கிறார்கள்.அவங்க என் பிள்ளைக்கு உசிர் குடுத்த தெய்வம்..அதனால முடியாதுங்கன்னு சொல்லிடறாங்க. காடு மேடு என்று சுற்றி திரிந்த இந்திரா கால் வலியுடன் வீட்டுக்கு திரும்புகிறாள்.

கூட்டம் போட்டு
கோயில் முன்னால் மக்களை கூட்டி, சப்கலெக்டர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புமாறு கோரிக்கை வச்சுக்கிட்டு இருக்கா. திடீர்னு காளி அம்மா கார் வந்து நிற்க, மக்கள் நொடியில் காணாமல் போயிடறாங்க. ஏம்ப்பா எல்லாருமே ஓடிப் போயிட்டாங்க.ஒரு சப்கலெக்டர் பேசிகிட்டு இருக்கும்போது இப்படி போகலாமா? கூப்பிடு அவங்களைன்னு காளி அம்மா சொல்றாங்க.

புருஷன் சக்தி
காளி அம்மா புருஷன்,அதாவது சக்தியின் அப்பா சக்தியை கூப்பிட்டு, என்னடா நீ...உன்னை காதலிக்கற சப்கலெக்டர் பள்ளி கூடத்துக்கு பசங்க வரணும்னு போராடிக்கிட்டு இருக்காங்க. பேசாம இருந்தா எப்படின்னு கேட்கறார். நான்தான் அப்பா அவங்களை காதலிக்கிறேன்.. அவங்களா என்னை காதலிக்கறாங்கன்னு கேட்கறான்.

பதில் சொல்லு
சரி அதை விடுடா.. இப்போ சப்கலெக்டருக்கு நீ என்ன உதவி செய்யப்போறேன்னு கேட்கறார். அப்பா இந்த விஷயத்துல நான் அம்மா கட்சிதான்.என்னதான் இந்திராவை நான் காதலிச்சாலும், அம்மா மேலதான் எனக்கு விசுவாசம் அதிகம். அம்மா இந்த ஊரையே கட்டமைச்சவங்கப்பா..அவங்களுக்கு எதிரா என்னால நடக்க முடியாதுன்னு சொல்றான்.
இப்போ அந்த ஊரில் பள்ளிக் கூடம் நடக்குமா? நடக்காதா?
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications