Ayudha Ezhuthu Serial: கத்துக் குட்டியை நம்பி காளி அம்மாவை எதிர்த்து .. அநியாயமா ஆள் காலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியலில் காளி அம்மான்னா காளி அம்மன் மாதிரி குல சாமி. அந்த அம்மா என்ன சொன்னாலும் மக்கள் கேட்பார்கள்.அதே மாதிரி மக்களுக்கு உதவி செய்வதிலும் குறை வைப்பதில்லை.

பிள்ளைகளுக்கு பள்ளிக்கு கூடடம் தேவையில்லை, படிப்பு தேவையில்லை என்பது அவர் நினைப்பு. அதே மாதிரி பள்ளி வாத்தியார்கள் சும்மா உட்கார்ந்து பொழுதைக் கழித்து சம்பளம் வாங்குகிறவர்கள்.

அந்த ஊருக்கு சப் கலெக்டராக இந்திரா என்கிற சின்ன பெண் வருகிறாள்.இந்தியாவுக்கும், காளி அம்மாவுக்கும் மோதல் நேரடியாக இன்னும் ஆரம்பிக்கவில்லை.

ஆசிரியர் சரவணன்

ஆசிரியர் சரவணன்

சரவணன் ஒரு ஆசிரியர் மட்டும் பள்ளிக்கு பிள்ளைகள் வந்து படிக்க வேண்டும் என்று, கலெக்டருடன் சேர்ந்து ஆசைப்படுகிறான். கமிஷனர் ஆஃபீசில் போயி புகார் குடுத்துட்டு வாங்க சரவணன்னு கலெக்டர் சொல்ல, இதை தெரிஞ்சுக்கிட்ட காளி அம்மா சரவணன் குழந்தையை கடத்திடறாங்க. குழந்தையை காணலைன்னு தேடினால், காளி அம்மாகிட்டே இருந்து போன் வருது.

தனியாக குழந்தையை

தனியாக குழந்தையை

குழந்தையை தனியாக இப்படித்தான் விட்டுட்டு புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் பேசிகிட்டு இருப்பீங்களா? நான் பார்த்ததால் ஆச்சு. இல்லேன்னா இந்நேரல் ஜீப்புல அடிபட்டு செத்து போயிருக்குமேன்னு காளி அம்மா சொல்றாங்க. என்ன சரவணா இந்த காளி அம்மா செய்த நல்லது எல்லாம் இனிச்சுது. இப்போ காட்டிக்கொடுக்க நினைக்கிறியளோன்னு கேட்கறாங்க.

பொண்டாட்டி சொல்றதில்லையா?

பொண்டாட்டி சொல்றதில்லையா?

ஏம்மா சரவணன் பொண்டாட்டி புருஷனுக்கு இதை எல்லாம் எடுத்து சொல்றதில்லையா? நான் எவ்ளோ பணம் குடுத்து, உதவி செய்யறேன்...உன் புருஷன் என்னடான்னா எனக்கு எதிரே புகார் குடுக்க போறானான்னு மிரட்டறாங்க. இல்லம்மா நான் சொன்னேன் கேட்கலைன்னு பொண்டாட்டி இழுக்கறாங்க. புள்ளை கண் ஆபரேஷனுக்கு பணம்கேட்டு இருந்தியே.. இந்தா முப்பதாயிரம் பணத்தை வாங்கிக்கோன்னு சொல்லி அனுப்பி வைக்கறாங்க.

புகார் கொடுக்க

புகார் கொடுக்க

மறுநாள் கலெக்டரைப் பார்த்து, நிச்சயமா நான் போயி புகார் குடுத்துட்டு வரேன் மேடம். என் பொண்டாட்டியும், குழந்தையும் மட்டும் உங்க வீட்டில் இருக்கட்டும்.வந்து அழைச்சுட்டு போறேன்னு சொல்றான். டவுனுக்கு போயி கமிஷனர் அலுவலகத்தில் புகார் குடுத்துட்டு ஒரு மணி பஸ்ஸில் வந்துகிட்டு இருந்த சரவணனை பஸ்ஸை இடைமறித்து கொன்னே போட்டுட்டாங்க காளி அம்மாள்.

இது ஒரு விழிப்புணர்வு சீரியல்தான்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+