Ayudha Ezhuththu Serial:இந்த சப் கலெக்டர் காளி அம்மா குட்ட குட்ட குனியறாய்ங்களே... ஏன்?
சென்னை: விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியலில் சப் கலெக்டர் திவ்யா, மாமியார் வீட்டில் குட்ட குட்ட குனிஞ்சுக்கிட்டு இருக்காங்க. அதுவும் மாமியார் அநியாயத்துக்கு அடாவடி பண்றவங்க. எதுக்கு இந்த கலெக்டர் குட்ட குட்ட குனியனும்?
கலெக்டர் எப்போது தன் அதிகாரத்துக்கு தக்கபடி வாழப் போறாங்கன்னு சீரியல் பார்க்கறவங்க எதிர்பார்க்கும்படி சீரியலை கொண்டு போறாங்களாம். அதனாலதான் இன்னும் இன்னும் என்று சீரியலை இப்படியே நீட்டிச்சுகிட்டே இருக்காங்க போல!
கலெக்டர் காளி அம்மா மருமகளாகிட்ட பின்னர் கலெக்டர் வேலையும் பார்க்கறதில்லை. அதோடு அவங்க செய்யும் அநியாயத்தை சகிச்சுக்கிட்டு வீட்டிலேயே இருக்காங்க.

ஒரு சீரியல் ஒரு நாட்
விஜய்டிவியின் சீரியல்களில் ஒரு நாட் வச்சுக்கிட்டு, ஒரு சீரியலா பயணிப்பாங்க. அப்படித்தான் இருக்குது இந்த ஆயுத எழுத்து சீரியலும், இதில் காளி அம்மாவா நடிகை மவுனிகா நடிச்சு இருக்காங்க. ஒரு அதிகாரம் மிக்க கிராமத்து பெண்மணியா நடிச்சு இருக்கும் மவுனிகாவின் கெட்டப் கொஞ்சம் வித்தியாசமா நல்லா இருக்கு. ஆனால், இவருக்கான நடிப்பு என்று பார்த்தால், தனக்கு மருமகளாகிவிட்ட கலெக்டரை எப்போதும் பழி வாங்கிக்கிட்டே இருப்பதுதான்.

சப் கலெக்டர் இந்திரா
சப் கலெக்டர் இந்திரவாக நடிகை சரண்யா நடிக்கிறார். இந்த சப் கலெக்டர், சக்தி, காளி அம்மாள் மகன் என்று தெரியாமலே காதலிப்பதும், அதே காளி அம்மா செய்யும் அநீதிக்கு எதிராக களம் இறங்குவதும் என்று ஆரம்பத்தில் செய்து வருகிறார். சக்தி யார் என்று தெரியாமலே அவரை கல்யாணம் செய்துகொள்ள மணமேடை வரை சென்று தாலி கட்டிய பின்னர்தான் சக்தி காளி அம்மாவின் மகன் என்று தெரிகிறதாம். நாட்டில் இப்படி சப் கலெக்டர் இருந்தால் என்னாகும்?

எப்படி இருந்த சப்கலெக்டர்
எப்படி இருந்த சப்கலெக்டர் இப்படி ஆகிட்டாங்க என்று நினைக்கும்படி காளி அம்மா குட்ட குட்ட குனியும் சப் கலெக்டராக இந்திரா மாறிப்போறாங்க. எப்போதும் வீட்டில் இருந்துகொண்டு, காளி அம்மா, தனக்கும் தனது குடும்பத்துக்கும் செய்யும் அநீதிகளை பொறுத்துக்கொண்டு வெறுமனே கண்ணீர் விடும் கதாபாத்திரமாக மாறிப் போகிறார் சப் கலெக்டர்.

சப்கலெக்டரா? மருமகளா?
சப்கலெக்டரா மருமகளா என்று வரும்போது, அங்கு மருமகள்தான் நிக்கறாங்க போலும். எல்லா பணத்தையும் செலவு செய்ய வைப்பதும், அப்பா அம்மா பணத்தை திருட்டு போக வைப்பதும் என்று எல்லா வேலைகளையும் மாமியார் காளி அம்மா செய்தால், அத்தையையும் பொறுத்துப் போகும் சப் கலெக்டர் இந்திரா, அடிக்கடி கண்ணீர் விடுகிறார். என்றைக்கு கலெக்டராக இந்திரா வீறு கொண்டு எழுவார் என்றே கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக சீரியலின் எதிர்பார்ப்பு கதையாக இருக்கிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications