Ayyana Mane Review: கன்னடத்தின் முதல் வெப் சீரிஸ் "அய்யனே மனே"! எப்படி இருக்கிறது இந்த மர்மத் தொடர்?
பெங்களூர்: ஜீ5 ஒடிடி தளத்தில் புதிதாக வெளியாகியுள்ள கன்னட மர்மத் தொடர் அய்யனே மனே (Ayyana Mane) ஒன்று தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. பிரபலமான தொலைக்காட்சி சேனலான ஜீ டிவியின் டிஜிட்டல் தளமான ஜீ5 இல் ரமேஷ் இந்திரா இயக்கத்தில், அவரது மனைவி ஸ்ருதி நாயுடு தயாரிப்பில் இந்தத் தொடர் வெளியாகியுள்ளது. தமிழ் டப்பிங்கிலும் சீரிஸை பார்க்க முடியும்.
தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிப்பதில் நீண்ட அனுபவம் கொண்ட இந்தத் தம்பதியினர், வலைத் தொடர் வடிவத்திலும் தங்கள் திறமையை வெளிப்படுத்த முயற்சித்துள்ளனர். கன்னடத்தில் வெளியாகியுள்ள முதல் ஓடிடித் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 18 நிமிடங்கள் ஓடும் ஆறு எபிசோட்களைக் கொண்ட இந்தத் தொடர், ஒரு மினி-சீரிஸ் போன்ற உணர்வை அளித்தாலும், ஓரளவுக்கு பார்க்கும்படியாக உள்ளது.

அய்யன மனே விமர்சனம்
1990-களில் சிக்கமகளூர் பின்னணியில் கதை நகர்கிறது. ஜாஜி (குஷி ரவி) என்பவர் துஷ்யந்த் (அக்ஷய் நாயக்) என்பவரை மணந்து ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள அவரது பழைய குடும்ப வீட்டிற்கு வருகிறார். அந்த வீட்டின் தலைவியாக அவரது மாமியார் நாகலாம்பிகை (மானசி சுதிர்- காந்தாராவில் ஹீரோவுக்கு அம்மாவாக வருவாரே அவர்) இருக்கிறார். ஜாஜி அந்த வீட்டிற்கு வந்த அன்றே அவரது மாமனார் காலமானதால், அவரது திருமண வாழ்க்கை ஒரு துரதிர்ஷ்டவசமான தொடக்கத்தைக் காண்கிறது.
ஜாஜி மீது லக் இல்லை என்ற குற்றச்சாட்டு வந்தாலும், அவரது கணவர் மற்றும் மாமியார் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஆனால், அந்த வீடு ஒரு "சாபத்திற்கு" உள்ளான வீடு என்பதை ஜாஜி உணரத் தொடங்குகிறார். அந்த வீட்டில் அடுத்தடுத்து மருமகள்கள் மர்மமான முறையில் உயிரிழக்க, தனது நிலை என்னவாகுமோ என்ற அச்சம் ஜாஜியை ஆட்கொள்கிறது.
ஏன் நடக்கிறது?
கொலையாளி யார் என்ற கேள்வியை எழுப்பும் வகையில் பல கதாபாத்திரங்கள் சந்தேகத்திற்குரியவர்களாகக் காட்டப்படுகிறார்கள். ஜாஜியின் கணவர் துஷ்யந்த் உண்மையில் நல்ல குணமுடையவரா? துஷ்யந்தின் சகோதரர்களுக்கு வேறு ஏதேனும் உள்நோக்கங்கள் இருக்கின்றனவா? நாகலாம்பிகை ஏதேனும் ரகசியங்களை மறைக்கிறாரா? போன்ற கேள்விகளை பார்வையாளர்களுக்குள் எழுப்பி தொடர் ஆர்வத்தைத் தூண்டுகிறது. இருப்பினும், பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் அளவுக்கு அதிர்ச்சியூட்டும் திருப்பங்கள் சற்று குறைவாகவே உள்ளன. ஒரு சிறந்த மர்மக் கதையில் இருக்க வேண்டிய அதிகப்படியான பதற்றம் இந்தத் தொடரில் முழுமையாக உணரப்படவில்லை. அதேநேரம் பரபரப்பை கிளப்பவும் தவறவில்லை.
எப்படி இருக்கிறது?
யார் குற்றவாளி என்று தெரிந்து கொள்ளும் ஒரு கதையை பார்க்க விரும்புவோருக்கு இந்தத் தொடர் ஒரு முறை பார்க்கலாம் என்ற அளவில் இருக்கும். வழக்கமான தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பவர்களுக்கு, இது சற்று மேம்பட்ட அனுபவமாக இருக்கலாம். ஏனெனில் இதில் தொலைக்காட்சித் தொடர்களில் காணப்படும் அதிகப்படியான ஜூம்-இன், ஜூம்-அவுட் காட்சிகள், உரத்த பின்னணி இசை மற்றும் மிகைப்படுத்தப்பட்ட கதாபாத்திரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
ஒளிப்பதிவு அருமை
ஒளிப்பதிவாளர் ராகுல் ராய், குறைவான வெளிச்சம் மற்றும் சற்று மாறுபட்ட கோணங்கள் மூலம் கதைக்கு ஏற்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளார். குறிப்பிட்ட அளவிலான பாத்திர வார்ப்புகளாக இருந்தாலும், குஷி ரவி மற்றும் மானசி சுதிர் உள்ளிட்ட நடிகர்கள் தங்கள் பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர்.
ஆபாசம் இல்லை
வெப் சீரிஸ் என்றாலே வலிந்து திணிக்கப்படும் ஆபாசம் அய்யனே மனே வெப் சீரிசில் இல்லை. வெப் சீரிஸ் முதல் ஐந்து எபிசோட்களும் முடிவை அறியும் எதிர்பார்ப்பை தூண்டினாலும், கடைசி எபிசோட் இன்னும் சிறப்பாக நிறைவு செய்யப்பட்டிருக்கலாம். கொண்டய்யா எனப்படும் அவர்களது குல தெய்வத்தின் கோபம் குறித்த அச்சம், இயற்கைக்கு அப்பாற்பட்ட சில நகர்வுகள், நகரத்திலிருந்து வரும் மருமகளால் ஏற்படும் கலாச்சார மோதல், ஜாஜியின் பொறுமை, கணவன்-மனைவி காதல் போன்ற பல விஷயங்கள் மேலோட்டமாகத் தொடப்பட்டு, முழுமையடையாத உணர்வை ஏற்படுத்துகின்றன.
காந்தாரா எதிர்பார்ப்பு
கடைசி எபிசோடில் காந்தாரா கிளைமேக்ஸ் போன்ற ஒரு எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. குல தெய்வம் பற்றிய எதிர்பார்ப்பை தூண்டிய காட்சிகள் அதற்கு ஒரு காரணம். குல தெய்வம் கடைசி எபிசோடில் நின்று விளையாடியது உண்மைதான். ஆனால், அதை பிரமாண்டமாக காட்டியிருக்க வேண்டும். பெரும்பாலானோருக்கு யார் குற்றவாளி என்பதை கடைசி அல்லது கடைசிக்கு முந்தைய எபிசோட் வரை கண்டுபிடிக்க முடியாதது தொடருக்கு வலு சேர்க்கிறது. மலைநாடு என்று அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த இடங்கள், அத்துடன் வீடு அமைந்துள்ள சூப்பரான லொகேசன், கூடவே கொஞ்சம் த்ரில் ஆகியவற்றை அனுபவிக்க விரும்புவோர் தவறாமல் பார்க்கலாம் அய்யனே மனே வெப் சீரிஸை.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications