சின்ன ரோல் நடிக்க கூட அட்ஜஸ்ட்மென்ட் கேட்கிறாங்க! அதுவும் எப்படி தெரியுமா? அய்யனார் துணை நடிகை ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் ரேஷ்மா பேசிய வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எல்லாத்துறைகளிலும் வேலை பார்க்கும் பெண்களுக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை இருக்கிறது. ஆனால் அதைவிட சினிமாவில் ஒரு படி மேலே இருக்கிறது, அதுவும் சின்ன கேரக்டரில் நடிக்க கூட ஓபன் ஆக அட்ஜஸ்ட்மென்ட் கேப்பாங்க என்று அவர் பேசி இருக்கிறார்.

சினிமாவாக இருந்தாலும் சரி சீரியல் ஆக இருந்தாலும் சரி அதில் நடிக்கும் நடிகைகள் பலரும் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒரு சிலர் தங்களுக்கு இதுபோல அட்ஜஸ்ட்மெண்ட் செய்து நடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் சிலர் தாங்கள் பட்ட கஷ்டங்கள் வேதனைகள் குறித்து வெளியே செல்லும்போதுதான் இப்படியும் நடந்ததா என்று நினைக்கத் தோன்றும்.

Reshma Ayyanar Thunai serial vijay tv

சீரியல் நடிகை ரேஷ்மா பேட்டி

அதேபோலத்தான் இப்போ விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா, அய்யனார் துணை உட்பட பல சீரியல்களில் நடித்த நடிகை ரேஷ்மாவும் தான் சினிமா துறையில் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும்போது நான் முதலில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் எனக்கு ஒரு சின்ன கேரக்டரில் நடிக்க கூட அட்ஜஸ்ட்மென்ட் பண்ண முடியுமா? என்று கேட்டிருக்காங்க. அதை கேட்டு எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியமாக இருந்தது.

அட்ஜஸ்மென்ட் பிரச்சனை

ரெஸ்யூம் கொடுக்கும் போது கூட அதில் அட்செஸ்மென்ட் ஓகேவா என்று ஒரு கேள்வி வைத்திருக்கிறார்கள். அதற்கு நாம் வேண்டாம் என்று சொன்னாலும் மேனேஜர் ஃபோன் செய்து நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஓகேவா என்று ஓபனாகவே கேட்பார். எந்த ஒரு குற்ற உணர்ச்சியோ, அல்லது பயமோ, வருத்தமோ இல்லாம அவங்க கேட்பாங்க.

Reshma Ayyanar Thunai serial vijay tv

மேனேஜரின் கேள்வி

அப்போ நான் ரெஸ்யூமில் இல்லை முடியாது என்று சொல்லி இருக்கேனே என்று சொன்னால், அவங்க அப்படியா நாங்க வேலை பிசில கவனிக்கல எங்களுக்கு மேல் இடத்துல இருந்து கேட்டாங்க அதை சொல்றதுக்காகத்தான் உங்ககிட்ட பேசுறோம் என்று மீண்டும் கேட்பாங்க. நாம முடியாதுன்னு சொன்னா போனை வச்சுடுவாங்க. பிறகு வாய்ப்பே இல்லாமல் போயிடும்.

மீண்டும் கிடைத்த வாய்ப்பு

இப்படி ரொம்ப நாள் ஆச்சு அந்த சமயத்தில் என்னுடைய அம்மா தான் எனக்கும், என்னுடைய குடும்பத்தின் செலவுகளையும் மொத்தமாக கவனித்துக் கொண்டாங்க. ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் வர ஆரம்பித்தது வெப் சீரிஸ், ஷார்ட் பிலிம், சீரியல்கள் என அடுத்தடுத்து வர தொடங்கியது. அதற்கு பிறகு இப்போது சீரியல்களில் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தாலும் ஆரம்பத்தில் இந்த அட்ஜஸ்மென்ட் பிரச்சனை எனக்கு பெரிய மன நெருக்கடி கொடுத்தது என்று அவர் பேசி இருக்கிறார்.

ரசிகர்கள் அட்வைஸ்

ஏற்கனவே இதே போல பல நடிகைகள் தாங்கள் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனையை சந்தித்ததாக பல வருடங்கள் கழித்து சொல்லி இருக்கிறார்கள். அதே நேரத்தில் இதை பார்க்கும் ரசிகர்கள் சினிமா துறையாக இருந்தாலும் சரி வேறு எந்த துறையாக இருந்தாலும் சரி பெண்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை இருக்கிறது என்றால் அதை உடனே சொல்லி விட வேண்டும், அப்படி சொன்னால் தான் மற்ற பெண்களுக்கும் இதுபோல தொந்தரவு ஏற்படாமல் இருக்கும் என்று அட்வைஸ் செய்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+