azhagu serial: ஆலய தீபம் பட பாணியில் இருந்துச்சுங்க அழகு சீரியல்!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகு சீரியலில், ரேவதிதான் அழகம்மை. இப்படி பார்க்கும்போது ரேவதி, காயத்ரி ஜெயராம், சுருதி, சங்கீதா என்று எல்லாருமே கதைக்கு முக்கியமாக இருக்கிறார்கள். எல்லாரும் சேர்ந்த கூட்டணியால் அழகு சீரியல் மக்களால் விரும்பிப் பார்க்கப்படுகிறது.
ஸ்டார் காஸ்ட் அப்படி இப்படி என்று கதைக்கு வெயிட்டான கதாபாத்திரங்களை சேர்த்து சீரியலை நகர்த்தினால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சீரியலுக்கு பிளஸ் சேர்ப்பது போல இணைந்து இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் இல்லாவிட்டாலும் கதையை நகர்த்துவது கஷ்டம் என்பது போல இருக்கிறது கதை.
நடிகை ரேவதி மட்டும் அவ்வப்போதுதான் வருவார். இது ரசிகர்களுக்கு தெரிந்த ஒன்றாகிவிட்டதால், இவர் சீரியலுக்கு ஸ்டார் காஸ்ட் மட்டும்தான் என்கிற கேட்டகிரியில் வருகிறார், அழகு சீரியலின் கடந்த எபிசோட், மறைந்த நடிகை சுஜாதா, நடிகர் ராஜேஷ்குமார், நடிகை இளவரசி நடிப்பில் அப்போது வெற்றி பெற்ற ஆலய தீபம் படத்தின் கிளைமேக்ஸை நினைவு படுத்தியது.

அழகு ஆலய தீபம்
ஆலய தீபம் படத்தில் நடிகை சுஜாதா நடிகையாகவே படத்தில் நடிச்சு இருப்பார். இவரது கணவராக நடித்து இருப்பவர் ராஜேஷ். இவருக்கு மனைவி நடிப்பது பிடிக்காது. எனவே பெண் குழந்தையுடன், மனைவியைப் பிரித்து தனியாக வாழ்ந்து வருவார். பெண் குழந்தைக்கு நடிகை சுஜாதாதான் அம்மா என்று சொல்லாமல் வளர்ப்பார். வளர்ந்த பெண்தான் நடிகை இளவரசி.இவர் கல்லூரியில் படித்து வரும்போது புகழின் உச்சியில் இருக்கும் அம்மாவை நடிகையாகவே பார்க்க போவார். ஒரு கட்டத்தில் சுஜாதாவுக்கு இளவரசி தனது மகள் என்று தெரிந்துவிடும்.

இளவரசிக்கும் சுஜாதாதான்
இளவரசிக்கும் சுஜாதாதான் தனது அம்மா என்று ஒரு கட்டத்தில் தெரிய வருகிறது. ஆனல், அப்பா நீதான் பொண்ணுன்னு அவங்ககிட்டே போகக் கூடாது, பழகக் கூடாதுன்னு சத்தியம் வாங்கிக்கறார். பெண்ணை பார்த்துவிட்ட சந்தோஷத்தில், அவளுக்கு அம்மா என்று சொல்ல முடியவில்லையே என்கிற ஏக்கத்தில் சுஜாதா உடல்நிலை சரி இல்லாமல் போயி, இறந்தும் விடுகிறார். அவரின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும். அப்பாவும், பெண்ணும் கையில் மாலையோடு சுஜாதாவைப் பார்க்க வரிசையில் நிற்கிறார்கள்.

அப்பா அம்மான்னு
கடைசியில் சுஜாதாவின் உடல் அருகே வந்துவிடுவார்கள். இளவரசி கண்ணீரோடு நகர்ந்து நகர்ந்து வந்துக்கொண்டு இருந்தவர். உடல் அருகில் வந்தவுடன் அப்பா.. இவங்களை நான் அம்மான்னு கூப்பிடலாமா என்று அழுதுகொண்டே கேட்பார். ராஜேஷ் சம்மதம் சொல்ல, அம்மாவின் உடல் மீது விழுந்து அம்மா என்று அலறுவார். அத்துடன் படம் முடிந்துவிடுகிறது. அனைவரும் கண்ணீரோடு எழுந்து போவார்கள். இந்த உணர்வை அழகு சீரியலில் கொண்டு வந்து இருக்கார் இயக்குநர் செல்வம்.

சகுந்தலாதேவி சுதா
சுதா சகுந்தலாதேவியின் மகள் தான்தான் என்று தெரிந்தும், பூர்ணாவுக்கு பயந்து காண்பித்துக்கொள்ளாமல் இருக்கிறாள். பூர்ணா செய்யும் கேவலமான செயல்களால் வெறுப்படைந்த சகுந்தலா தேவி, தற்கொலை செய்துக்க போறாங்க. காப்பாற்ற சுதா, மற்றும் சகுந்தலா தேவியின் புருஷன் இருவரும் போகிறார்கள். மேடம் மேடம் என்று கூப்பிட்டும் காதில் வங்கிக்காத சகுந்தலா தேவி பாறையின் மேலிருந்து கீழே விழப் போறாங்க. அப்போது, மேடம் மேடம் என்று கூப்பிட்ட பூர்ணா அம்மா என்று கூப்பிட ஷாக்காகி அசையாமல் நிற்கிறார் சகுந்தலா தேவி. இந்த ஒரு சீன் பார்ப்பவர்களை ரொம்பவே கவர்ந்துவிட்டது. கண்களில் நீர் துளிக்க வைத்துவிட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications