Azhagu Serial: அழகு.. அப்பப்போ ரேவதி! இதுவும் மார்க்கெட்டிங் யுக்திதானோ...?
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் நடிகை ரேவதியை மார்க்கெட்டிக் யுக்திக்காக நடிக்க வைத்து இருப்பார்கள் போலும். சீரியலில் டைட்டில் கேரக்டரே ரேவதிக்குத்தான்.
என்னதான் டைட்டில் கதாபாத்திரம் என்றாலும் கூட அவர் மாதத்தில் மூன்று அல்லது நான்கு எபிசோட்களில் வந்தாலே அதிகம்தான்.
அந்த அளவுக்கு ரேவதி அழகு சீரியலில் ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் என்பார்களே அது போலத்தான் தலையை காண்பிப்பார்.

சன் டிவி 6:30 ஸ்லாட்
சன் டிவியின் மாலை 6:30 மணி நேர ஸ்லாட் என்பது அவ்வளவாக யாரும் விரும்பிப் பார்க்காத ஒரு நேரம்தான். இந்த நேரத்தில் விளம்பரம் வருவதும் கம்மியாகத்தான் இருக்கும். இதையும் நல்ல ரேட்டிங் டைமாக கொண்டுவரத் திட்டமிட்ட சன் டிவி, சரியான கதைக்காக காத்து இருந்தது. ராதிகா சரகுமாரின் சந்திரகுமாரி சீரியலை அந்த நேரத்தில் ஒளிபரப்பிப் பார்த்த போதும் கூட சரியான ரெஸ்பான்ஸ் இல்லைதான்.

குமரன் செல்வம்
இந்த நேரத்தில்தான் விகடன் டெலிவிஸ்டாஸ் சீரியல்களை தொடர்ந்து 8 மணி நேர ஸ்லாட்டில் வழங்கி வரும் இயக்குநர் குமரன் அவர்களின் அசோசியேட்டாக பணிபுரிந்த செல்வம் அவர்களின் கதை சன் டிவிக்குப் பிடித்துப் போக, அழகு சீரியலுக்கு 6:30 மணி நேர ஸ்லாட்டை வழங்கியது. இதன் மார்க்கெட்டிங் யுக்தியே ஸ்டார் காஸ்ட் நடிகை ரேவதிதான். ஆரம்பத்திலேயே புரடக்ஷன் கம்பெனி சன் டிவியுடன் ரேவதியை எப்படி நடிக்க வைப்பது எனபது குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறது.

அழகு நடிகை ரேவதி
நடிகை ரேவதி தினம் தினம் எபிசோடில் வரவில்லை என்றாலும், அவ்வப்போது வந்தால் போதும். ஒரு நாள் கால்ஷீட்டில் சில எபிசோடுகளுக்குத் தேவையான காட்சிகளை எடுத்து வைத்துக்கொண்டு அவ்வப்போது எபிசோட்களில் ஒளிபரப்பினால் போதும் என்கிற நிலைமைக்கு புரடக்ஷன் நிறுவனமும் சன் டிவியும் பேசிக்கொண்டு அழகு சீரியல் ஒளிபரப்பாகத் துவங்கியது என்றுதான் சொல்ல வேண்டும்.

ரேவதி பிளஸ்
நடிகை ரேவதிதான் 6:30 மணி நேர ஸ்லாட்டுக்கு மார்க்கெட்டிங் யுக்தி என்று நினைத்து, செயல்பட்டது அழகு டீம். ஆரம்பத்தில் தினமும் ரேவதியை சீரியலில் பார்க்க முடியும். அப்படியான நேரத்தில் நல்ல ரேட்டிங் பிடித்துவிட்ட அழகு சீரியல், இப்போது அந்த சீரியல் கதைக்காக எப்போதும் போல அதே ரேட்டிங்கில் உள்ளது. இதனால், ரேவதி அவ்வப்போது வந்தால் போதும், மார்க்கெட் டல்லடிக்கும் நேரத்தில் அடுத்த சில எபிசோட்களில் ரேவதியை காண்பித்து விடுவார்கள். நல்ல யுத்தி... இதையே மற்றவர்கள் ஃ பாலோ செய்தால்...ரசிகர்களை ஏமாற்றுவது போல ஆகிவிடாதா?
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications