ஜீ தமிழ் ‘அண்ணா’ சீரியலில் என்ட்ரியாகும் பாக்கியலட்சுமி சீரியல் ஹீரோ.. மாறிய கதைகளம்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ், இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று அண்ணா சீரியல்.
திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஷண்முகம் என்ற கதாபாத்திரத்தில் மிர்ச்சி செந்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக நித்யா ராம் நடித்து வருகிறார். மேலும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியலுக்கு போட்டியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்யலட்சுமி. இந்த சீரியலில் ராமமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஸாரி அண்ணா சீரியலில் வைகுண்டம் என்ற கதாபாத்திரத்தில் சண்முகத்துக்கு அப்பாவாக நடிக்கிறார்.
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து மேலும் ஒரு நடிகர் அண்ணா சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விகாஸ் தான்.
இவர் வரும் நாட்களில் அண்ணா சீரியலில் அறிவழகன் என்ற கதாப்பாத்திரத்தில் வாத்தியாராகவும் ரத்னாவின் பள்ளி பருவ காதலனாகவும் நடிக்க இருக்கிறார். இவருடைய காட்சிகள் இன்று முதல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ரத்னா தன்னுடைய கணவரின் உண்மையான சுய ரூபத்தை புரிந்து அவரை வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டு வந்திருக்கிறார். அவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழும் ரத்னாவிற்கு வாத்தியாராக வரும் அறிவழகனால் நன்மைகள் ஏற்பட போகிறதா? அல்லது பிரச்சனைகள் ஏற்படப் போகிறதா என்பது இனிவரும் எபிசோடில் தெரியவரும்.
அதே நேரத்தில் இந்த சீரியலில் பல புரட்சிகரமான செயல்கள் நடந்து இருக்கிறது. கணவன் வீட்டில் கொடுமைகள் நடந்தால் அதில் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு வாழ வேண்டும் என்று இல்லாமல் துணிச்சலாக தாய் வீட்டுக்கு வரவேண்டும், அதை பெண் வீட்டினரும் சோகத்தோடு அவர்களை குறை சொல்லாமல் மகிழ்ச்சியோடு வரவேற்க வேண்டும் என்பதற்காக இந்த சீரியலில் பல காட்சிகள் காட்டப்பட்டன.

அதுபோல ரத்னாவிற்கு மறு திருமணம் செய்து வைப்பதற்காக சண்முகம் யோசிக்க போகிறாரா? என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஆனாலும் இனி அறிவழகனாக வரும் விகாஷின் என்ட்ரியால் இந்த சீரியலில் பல மாற்றங்கள் நடக்கப்போகிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications