பாக்கியலட்சுமி: கோபி வீட்டிற்கு வந்து அசிங்கப்படுத்தும் ஆகாஷ் அப்பா.. செல்வி வீட்டிற்கு போன இனியா!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 22ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இனியா செல்வியின் வீட்டிற்கு சென்று ஆகாஷை சந்தித்திருக்கிறார். அதை பார்த்து ஆகாஷின் அப்பா கோபத்தில் கோபியின் வீட்டிற்கு வந்திருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவின் காதல் வீட்டிற்கு தெரிய வந்த பிறகு எதிர்பார்க்காத பல சம்பவங்கள் நடந்தது. இனியாவிற்கு அவசர அவசரமாக எங்கேஜ்மென்ட் நடத்துவதற்காக கோபி மற்றும் ஈஸ்வரி இருவரும் ஏற்பாடுகள் செய்திருந்தனர். ஆனால் இனியா அம்மா உதவி இல்லை இப்போது தன்னுடைய எங்கேஜ்மென்டை நிறுத்துவதற்காக தைரியமாக போலீசுக்கு போன் செய்து பேசியிருந்தார்.

உடைபட்ட காதல்
அதுபோல பாக்கியா சொன்னதால் இனி ஆகாஷிடம் பேசமாட்டேன், என்னுடைய படிப்பை முடிப்பதில் கவனமாக இருப்பேன் என்று சத்தியம் செய்து இருந்தார். அதுபோல ஆகாஷும் பாக்யாவிற்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் தாங்கள் பார்த்த மாப்பிள்ளையை இனியா வேண்டாம் என்று சொல்லிவிட்டதால் கோபி முக்கிய முடிவெடுத்து இருந்தார்.
கோபி எடுத்த முடிவு
அதாவது குடும்பத்தினர் எல்லாரையும் கூப்பிட்டு வைத்து, பாக்கியா இந்த வீட்டை விட்டு கிளம்ப சொன்ன பிறகு கூட இருப்பதற்கு காரணம் என்னுடைய பிள்ளைகள் மற்றும் அம்மா தான். அதிலும் இனியாவிற்காக தான் இந்த வீட்டில் இருக்க சம்மதித்தேன். ஆனால் இனியாவிற்கு இப்போது நான் முக்கியமாக படவில்லை. அதனால் இனி நான் இங்கு இருப்பதில் பிரயோஜனம் இல்லை அதனால் நான் இன்று மாலையே வீட்டை விட்டு கிளம்புகிறேன் என்று சொல்லி இருந்தார்.
இதனால் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருந்தனர். அதிலும் ஈஸ்வரி தான் ரொம்பவும் அதிர்ச்சியில் இருந்தார். இப்படியான நிலையில் நாளைக்கு என்று வெளியான ப்ரோமோவில் ஆகாஷ் எக்ஸாமுக்கு கிளம்பி கொண்டிருக்கிறார். அப்போது எழில் செல்வியின் வீட்டிற்கு போய் ஆகாஷுக்கு வாழ்த்துக்கள் சொல்கிறார். பிறகு இனியா வா என்று சொல்ல இனியாவும் ஆகாஷ் வீட்டிற்குள் போகிறார்.
ஆகாஷின் அப்பா மிரட்டல்
ஆகாஷிடம் ஆல் த பெஸ்ட் நல்லா எக்ஸாம் எழுது என்று சொல்லிவிட்டு வீட்டு வாசலில் நின்று அழுது கொண்டிருக்கிறார். அப்போது ஆகாஷின் அப்பா அங்கு வந்து நீ எதுக்கு மறுபடி எங்க வீட்டுக்கு வந்த என்று திட்டுகிறார். அப்போது கோபி மற்றும் ஈஸ்வரி இருவரும் தான் இருக்கிறார்கள். இவர்களிடம் இனி உங்க பொண்ணு இனியா என் வீட்டுக்கு வரக்கூடாது என்று வாக்குவாதம் செய்கிறார்.
இதை எதிர்பார்க்காத கோபியும் ஈஸ்வரியும் அதிர்ச்சியில் நிற்கிறார்கள். ஆகாஷ் போன் பண்ணுனான் என்ற காரணத்திற்காக ஆகாஷ் வீட்டிற்கு சென்று ஆகாஷை அடித்து கையை உடைத்து விட்டு வந்த செழியன் மற்றும் கோபி இனியாவை என்ன செய்யப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.
தொடரும் பஞ்சாயத்து
அதே நேரத்தில் இனியாவை ஆகாஷ் வீட்டிற்கு கூட்டிட்டு போனது எழில்தான் என்ற விஷயம் தெரியும் போது மொத்த குடும்பமும் எழில் மற்றும் பாக்கியா மீது தான் கோபப்படுவார்கள். கடந்த வாரத்தில் இனியாவின் காதல் விஷயம் வீட்டிற்கு தெரிந்தது. இப்போது அடுத்த பஞ்சாயத்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. இனி இந்த பஞ்சாயத்தை முடிக்க பாக்கியா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications