பாக்கியலட்சுமி: பாக்யா போட்ட கண்டிஷன்.. பரிதாப நிலையில் கோபி.. ஈஸ்வரிக்கு இது தேவைதான்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஆம் ஆண்டுக்கான ஜனவரி 1ஆம் தேதி எபிசோடில் ராதிகாவை மீண்டும் கோபி பாக்யா வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வருகிறார். அதை பார்த்து ஈஸ்வரி அதிர்ச்சியில் இருக்கிறார். அப்போது கோபிக்கு மீண்டும் நெஞ்சு வலி வருகிறது. மேலும் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இதுக்கு இல்லையா சார் எண்டு என்பது போலத்தான் பாக்கியலட்சுமி சீரியலே ரிப்பீட் மோடில் பாக்கியா வீட்டிற்கு கோபியும் ராதிகாவும் அடிக்கடி விசிட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் கோபி வீட்டிற்குள் வரும்போது ஒரு பஞ்சாயத்து நடக்கிறது.

கோபியிடம் சபதம் போட்டு பாக்கியாவும் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார். ஆனால் லூப் மோடில் பாக்கியலட்சுமியில் கதை மட்டும் சுற்றிக்கொண்டே இருக்கிறது. நெஞ்சு வலியில் துடித்த கோபியை மனமிறங்கி ஈஸ்வரி வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார்.
ஆனால் இனி என்னுடைய மகன் என்னை விட்டு பிரியக்கூடாது என்று சத்தியமும் வாங்கி இருக்கிறார். ஆனால் கோபி பாக்கியா கேட்ட கேள்வியால் ராதிகாவை புரிந்து கொண்டு ராதிகாவை தேடி போயிருக்கிறார். அங்கு ராதிகாவையும் மயூவையும் தன்னோடு இருக்க கூப்பிடுகிறார். அப்போது ஈஸ்வரி போன் போட்டு நீ இப்போ வீட்டுக்கு வராமல் அந்த வீட்டில் இருந்தா.. கடைசி வரைக்கும் என் முகத்தில் முழிக்க முடியாது என்று செண்டிமெண்ட் அட்டாக் பண்ணுகிறார்.
ஆனால் கோபி ராதிகாவையும் மயூவைம் பாக்யா வீட்டுக்கே மீண்டும் கூப்பிடுகிறார். மறுபக்கத்தில் ஈஸ்வரி எப்படா தன் மகன் வருவான் என்று வீட்டு வாசலை எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருக்கிறார். அதோடு ராதிகா கோபியை அங்கேயே பிடித்து வைத்து விடுவாரோ என்று முனங்கி கொண்டிருக்கிறார்.

ஆனால் ராதிகா நான் மீண்டும் பாக்யா வீட்டிற்கு வரவே மாட்டேன். நான் பட்ட அவமானம் போதாதா? கடைசி வரைக்கும் வரமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது கோபி கைகாலில் விழுந்து அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார். பிறகு தனக்கு நெஞ்சுவலி வந்தது போல நாடகமாடுகிறார். இதனால் ராதிகாவும் சம்மதிக்கிறார்.
அடுத்ததாக வீட்டு வாசலில் கோபி வந்து நின்று கொண்டிருக்கிறார். அதை பார்த்ததும் ஈஸ்வரி சந்தோஷப்படுகிறார். அப்போது ஈஸ்வரி இடம் அம்மா நீங்க சொன்ன மாதிரியே நான் வந்துட்டேன் என்று இன்பஅதிர்ச்சி கொடுக்க, சந்தோசத்தில் இருந்த ஈஸ்வரிக்கு ஒரு பெரிய ஏமாற்றமும் கிடைக்கிறது.

கோபியோடு ராதிகாவும் மயூவும் நிற்கிறார்கள். அவர்களை பார்த்ததும் ஈஸ்வரி கோபப்பட அதற்கு கோபி இவங்க என்கூட தான் இருப்பாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே மீண்டும் நெஞ்சு வலி வந்தது போல பாக்யா வீட்டிலும் நாடகம் ஆட அவரை பார்த்ததும் ஈஸ்வரி பதறிப்போய் நான் எதுவும் சொல்ல மாட்டேன் இனி இவ உன் கூடவே இருக்கலாம் என்று சொல்லி விடுகிறார்.
ஒரு வழியாக கோபி போட்ட நாடகம் இப்போது அவருக்கு வெற்றி கொடுத்திருக்கிறது. இனி ராதிகா வீட்டிற்குள் வந்ததால் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம். நாளைக்கான ப்ரோமோவில் கோபி அவர் குடும்பத்தோடு இந்த வீட்டில் தங்கணும் என்றால் எனக்கு வாடகை தரணும் என்று பாக்கியா புது ரூல்ஸ் போட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications