பிரசவ வலியில் ஜெனி.. தற்கொலை முயற்சி செய்தும் மாலினி.. பாக்யாவுக்கு தெரிய வந்த ஆடியோ
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அக்டோபர் இரண்டாம் தேதி முதல் 7ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஜெனிக்கு பிரசவ வலி ஏற்பட்டு அவருக்கு பெண் குழந்தை பிறக்கிறது.

அதே நேரத்தில் செழியனை மாலினி பிளாக்மெயில் செய்து மிரட்டுகிறார். இந்த விஷயம் பாக்கியாவிற்கு தெரிய வருகிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் ஏற்கனவே பாக்யாவிற்கு பிரச்சினை மேல பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. பெரும் போராட்டத்திற்கு பிறகு ராதிகாவின் ஆபீஸில் பாக்கியாவிற்கு கேண்டினில் கேட்டரிங் ஆர்டர் கிடைத்தது. ஆனால் இப்போது ராதிகாவின் சூழ்ச்சியால் பாக்கியா அந்த கேண்டினில் இருந்து துரத்தி விடப்பட்டிருக்கிறார்.

ஏற்கனவே பாக்யாவை பழிவாங்க வேண்டும் என்று கோபி கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்து கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் பாக்யாவிடம் ஒவ்வொரு முறையும் ராதிகாவும் அவமானப்பட்டு கொண்டிருப்பதால் ராதிகாவும் தன்னுடைய பங்குக்கு பாக்யாவை அவமானப்படுத்த வேண்டும் என்று காத்திருந்தார். இப்போது கோடீஸ்வரன் வெளிநாட்டிற்கு கிளம்பி போய்விட்டதால் ஆபீஸின் மொத்த நிர்வாகமும் ராதிகாவிற்கு கிடைக்க அதை வைத்து பாக்கியாவை பழி வாங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் இத்தனை நாட்களாக பாக்கியாவிற்க்கு ஆதரவாக இருந்த ஈஸ்வரியும் பாக்கியா கேண்டீன் விஷயத்தில் தோற்றுப் போய் நிற்க அதை வைத்து அவமானப்படுத்தி பேசுகிறார். இப்படியாக பிரச்சனை மேல் பிரச்சனைகள் தவித்துக் கொண்டிருக்கும் பாக்யாவிற்கு தற்போது புது பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது புது பிரமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
அதில் ஜெனி பிரசவ வலியில் கதறி துடிக்க ஜெனியை ஹாஸ்பிடலில் சேர்க்கின்றனர். அப்போது அவருக்கு அங்கு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் செழியனை கோபி தூக்கி கொண்டாடி சந்தோஷத்தில் இருக்கின்றனர். அந்த நேரத்தில் மாலினி செழியனுக்கு போன் செய்து கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து செழியன் தன்னுடைய குழந்தை மற்றும் ஜெனியை பார்த்துக்கொண்டு இருக்க அப்போது எழில் செழியனுக்கு வாழ்த்துக்கள் கூறிக் கொண்டிருக்கிறார். அப்போதும் மாலினி போன் செய்கிறார்.
அதைத்தொடர்ந்து ஹாஸ்பிடலில் ரூமிற்கு வெளியே செழியா இங்கே உக்காரு. நான் இப்ப வந்துருவேன் என்று சொல்லிவிட்டு பாக்கியா கிளம்பி போயிருக்கும் நேரத்திலும் மாலினி போன் செய்ய செழியன் அப்போதும் போனை கட் பண்ணி விடுகிறார். அதனால் மாலினி வாட்ஸ் அப்பில் நீங்கள் இப்போ என்ன பார்க்க வரவில்லை என்றால் நான் கைய அறுத்துக்கிட்டு செத்துப் போயிருவேன் என்று ஆடியோ அனுப்பி இருக்கிறார். அதை செழியன் கேட்டுக் கொண்டிருக்க பின்னாடிக்கு நின்று பாக்கியா அந்த ஆடியோவை கேட்டு விடுகிறார். இப்படியாக பரபரப்பான ப்ரொமோ வெளியாகி இருக்கிறது.
-
சிறகடிக்க ஆசை: ஒரு வழியாக மாறிய கதைக்களம்.. வீட்டை மீட்ட கையோடு நடந்த தரமான சம்பவம்! மனோஜுக்கு புதிய அதிர்ச்சி! -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications