ராதிகாவை விட்டுட்டு வர சொல்லும் ஈஸ்வரி..கோபியின் பதில்.. கதறி அழும் ராதிகா..வீட்டுக்கு வரும் வில்லி!
சென்னை: கோபியிடம் அவருடைய அம்மா ராதிகாவை விட்டுவிட்டு நம்ம வீட்டுக்கு மீண்டும் வந்து விடு என்று கூறுகிறார்.
கோபி பதில் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார் இதை பார்த்து ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.
ராதிகாவுக்காக அவருடைய அம்மா வீட்டிற்கு வருகிறார்.

போன் பண்ணும் செழியன்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் 11ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் கோபிக்கு போன் போட்டு ஏதாவது ஒரு இடத்துக்கு வர சொல்லு என்று சொல்ல, சரி என செழியன் கோபிக்கு போன் போடுகிறார். அப்போது செழியன் போன் பண்ணுவதை பார்த்து ராதிகா இப்ப எதுக்கு இவன் போன் பண்றான் என கேட்க, எனக்கு என்ன தெரியும் என்று கோபி பயந்தபடியே போனை எடுத்து பேசுகிறார்.
கோவிலுக்கு கிளம்பும் கோபி: அதில் பாட்டி உங்ககிட்ட பேசணுமாம். நேர்ல வர சொன்னாங்க என்று சொல்ல, கோபி எங்கே என கேட்ட பக்கத்தில் உள்ள மாரியம்மன் கோவில் என ஈஸ்வரி சொல்கிறார். பிறகு கோபி 10 நிமிஷத்தில் வரேன் என்று சொல்லி போனை வைக்கிறார். பிறகு ராதிகா என்ன விஷயம் என்று கேட்க, அம்மா பேசணுமாம் என சொல்ல, இப்ப அந்த வீட்டுக்கு போறீங்களா? என கேட்க இல்ல பக்கத்துல இருக்க கோயிலுக்கு போறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

ஏத்திவிடும் அம்மா: கோபி கிளம்பி சென்றதும் ராதிகா தன்னுடைய அம்மாவுக்கு போன் போட்டு நடந்த விஷயங்கள் எல்லாம் சொல்லி அழுகிறார். நான் வீட்டை விட்டு கிளம்ப போகிறேன் என்று சொல்ல, அப்படி எந்த முடிவும் நீ எடுக்கக்கூடாது நான் அந்த வீட்டுக்கு வருகிறேன். நீ எதுக்காக கோபியை தனியாக அம்மாவை பார்க்க அனுப்பின, அவரை அவங்க குடும்பத்தோடு பேச விடாத உடனே கிளம்பி நீ கோவிலுக்கு போ என்று சொல்ல ராதிகா கோவிலுக்கு வருகிறார்.
திட்டும் அம்மா: இந்த பக்கம் கோவிலில் ஈஸ்வரி உனக்கு என்ன ஆச்சு? என்ன பிரச்சனை? இப்படி குடிச்சிட்டு ரோட்டில் விழுந்து கிடக்குற, அந்த விஷயம் கேட்டதும், நான் நொறுங்கி போயிட்டேன். அதுக்குள்ளவா இப்படி ரோட்ல சண்டை போடுறீங்க. எல்லோரும் வேடிக்கை பார்க்குறாங்க நாளைக்கு நாங்க எப்படி ரோட்டில் தலை காட்டி நடக்கிறது. இதற்கு முன்னாடி இப்படி நீ இருந்ததே கிடையாது என்று ஃபீல் பண்ணி பேசிக் கொண்டிருக்க, கோபி இனி நான் சத்தியமா குடிக்க மாட்டேன் என்று அம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறார்.

கோபி பதில் என்ன: கோபியும் ஈஸ்வரியும் பேசிக் கொண்டிருப்பதை மறைந்திருந்து ராதிகா பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது இதற்கு எல்லாத்துக்கும் ஒரே தீர்வு தான் இருக்கு நீ நம்ம வீட்டுக்கு வந்துடு, இது சரியில்லாத வாழ்க்கை எதற்கு? உனக்காக இந்த வீட்டில் எல்லார்கிட்டயும் பேசுறேன். நீ வீட்டுக்கு வந்துட்டு பழைய கோபியா எங்களுடன் இரு என்று சொல்ல, கோபி அதிர்ச்சி அடைகிறார். அதேபோல ராதிகாவும் அதிர்ச்சி அடைகிறார்.

ஈஸ்வரியின் முடிவு: ஈஸ்வரி கேட்கும் கேள்விகளுக்கு கோபி பதில் எதுவும் சொல்லாமல் இருக்க, ஈஸ்வரி எப்ப வர போற எனக்கேட்க? அப்பவும் அமைதியாகவே இருக்க, யோசித்து முடிவு எடு என்று சொல்ல மாட்டேன். உன்னுடைய வாழ்க்கைக்கு நல்ல முடிவு இது மட்டும்தான் என்று சொல்லி செழியனை கூட்டிக்கொண்டு கிளம்புகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
அதிர்ச்சி கொடுத்த ராதிகா: அதைத் தொடர்ந்து வெளியான ப்ரோமோவில் கோபி காரில் ஏற, ராதிகாவும் ஓடி வந்து காரில் ஏற, இங்கு என்ன நடக்குது? எனக்கு தெரிஞ்சாகணும். எனக்கு உங்க அம்மா பேசியது கூட பயம் கிடையாது ஆனால் நீங்க அமைதியா இருந்தது தான் பயமா இருக்கு என்று கேட்கிறார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் கோபி தவித்துக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications