கோபி செய்த செயலால் ராதிகா அம்மா செய்த பிரச்சனை.. பாக்கியா எடுத்த முடிவு.. பரபரப்பான திருப்பம்
சென்னை: மது போதையில் நடக்க முடியாமல் இருந்த கோபியை செழியன் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வருகிறார்.
ஈஸ்வரி, கோபி இனி நம்ம வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.
கோபி வீட்டிற்கு வராததால் ராதிகாவும் அவருடைய அம்மாவும் புது முடிவு எடுக்கின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில் குடிபோதையில் இருந்த கோபியை செழியன் காரில் கூட்டிக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். அப்போது நான் தான் தப்பு பண்ணிட்டேன். நீங்க எல்லோரும் நல்லவங்க. நான் கல்யாணம் பண்ணி இருக்கக் கூடாது என்று புலம்பி கொண்டிருக்கிறார்.

பிறகு செழியனிடம் என்னை எங்க கூட்டிட்டு போற என கேட்க, உங்க வீட்டுக்கு தான் என்று சொல்ல, அய்யய்யோ என்னை எங்க வேணா கூட்டிட்டு போ ஆனால் ராதிகா கிட்ட மட்டும் கூட்டிட்டு போகாதே. இனிமே நான் குடிக்க மாட்டேன் என்று ப்ராமிஸ் பண்ணி இருக்கிறேன். ஆனா இப்ப குடிச்சிட்டு வருவதை பார்த்தால் என்ன க்ளோஸ் பண்ணிடுவா, நாளைக்கு காலைல உயிரோடவே என்னை நீ பார்க்க முடியாது என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.
வேறு வழி இல்லாமல் செழியன் கோபியை தனது வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போகிறார். குடிபோதையில் கோபி தள்ளாடி கொண்டு வருவதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். கோபியை உட்கார வைக்க அவர் தன்னுடைய அப்பா அம்மா இனியாவிடம் புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது எழில் இவரை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த, அந்த வீட்டுக்கு கூட்டிட்டு போய் விட வேண்டியது தானே என்று சத்தம் போட ஈஸ்வரி எழிலை அமைதியாக இரு என்று திட்டுகிறார்.

எழில் திட்டியதற்கு ஈஸ்வரி உனக்கு ஒன்னுனா உங்க அம்மா எப்படி ஓடி வரா? அந்த மாதிரி தான் நான். அவன் என்ன தான் தப்பு பண்ணி இருந்தாலும் அவன் என்னுடைய புள்ள இப்படி ஒரு நிலைமையில் அவனை விட்டுட்டு வீட்டை விட்டு அனுப்ப முடியாது என்று ரூம்பிற்கு அழைத்து செல்கின்றனர். இந்த பக்கம் ராதிகா போன் செய்தும் கோபி போனை எடுக்காமல் இருக்க ராதிகா பயந்து கொண்டே இருக்கிறார்.
அப்போது இன்னைக்கு மட்டும் அவர் குடிச்சிட்டு வரட்டும் ஒரு வழி பண்ணிடுறேன். நீ ஒன்னும் கவலைப்படாத ராதிகா, உனக்கு நாங்க இருக்கோம் என்று ராதிகாவின் அம்மா கூறிக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் பாக்யா வருத்தத்தோடு உட்கார்ந்திருக்க, ஈஸ்வரி இங்க இருக்கிற வரைக்கும் கோபி இப்படி கிடையாது, அங்க போனதுக்கு அப்புறம் ஏன் இப்படி ஆகிவிட்டான். அவ கொடுமை படுத்துகிறாளா? என கேட்கிறார்.

ராதிகா வீட்டுக்கு மட்டும் கூட்டிட்டு போக வேண்டாம் என்று கோபி அழுததை செழியன் சொல்கிறார். உடனே இனியாவும் அவங்க என்னையும் அப்பாவையும் திட்டிக்கிட்டே தான் இருப்பாங்க. இனிமேல் டாடியையும் அங்கு அனுப்ப வேண்டாம் என்று சொல்ல, ஈஸ்வரியும் இனிமேல் கோபி இங்கே தான் இருப்பான் என்று கூறுகிறார்.
கோபமாக இருக்கும் எழிலை ஜெனியும், அமிர்தாவும் சமாதானப்படுத்த பிறகு சோகமாக இருக்கும் பாக்யாவிற்கு எழில் ஆறுதல் கூறுகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications