பாக்கியாவால் கோபிக்கு கிடைத்த அதிர்ச்சி... திட்டும் ஈஸ்வரி.. கட்சி மாறிய இனியா.. பரபரப்பான திருப்பம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இனியா தற்கொலை முயற்சி செய்தது தெரிந்த ஈஸ்வரி கடும் கோபத்தில் ராதிகாவையும் கோபியையும் திட்டுகிறார்.
இனியா இனி யார் பக்கம் இருக்கப் போகிறார் என்று பரபரப்பான திருப்பங்கள் இன்று நடைபெற்றிருக்கிறது.
பாக்கியா கோபிக்கு பணத்தால் பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஈஸ்வரிக்கு கிடைத்த அதிர்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் நான்காம் தேதி எபிசோடின் ஆரம்பத்தில் ஈஸ்வரி மற்றும் செழியன் இருவரும் வேக வேகமாக ஹாஸ்பிடலுக்கு ஓடி வருகின்றனர். இனியாவிற்கு என்ன ஆச்சு என்று கேட்க, கோபியும் ராதிகாவும் பதில் சொல்ல முடியாமல் நிற்கின்றனர். அங்கு வரும் எழில் நடந்த விஷயத்தை கூறுகிறார். உடனே இனியாவை பார்க்க வேண்டும் என்று இருவரும் உள்ளே சென்று கண் கலங்கி கதறி அழுகின்றனர். இப்படி இங்கே சத்தம் போடக்கூடாது என்று ஈஸ்வரியை அங்கிருந்த நர்ஸ் திட்டுகிறார்.

திட்டும் ஈஸ்வரி
பிறகு செழியன் உனக்கு அம்மா பாட்டி தாத்தா, நான் என எல்லோரும் இருக்கோம் இப்படியெல்லாம் பண்ணலாமா? என்று இனியாவிடம் கேட்க இனியா அதற்கு சாரி கேட்கிறார். பிறகு வெளியே வந்த ஈஸ்வரி கோபியை சரமாரியாக கேள்வி கேட்கிறார் ராதிகா அவ தப்பு பண்ணுனா அதனால கண்டித்தோம் என்று சொல்ல, அதற்கு அவளை கண்டிக்க நீ யாரு? கோபியை கல்யாணம் பண்ணிக்கிட்டா இனியாவிற்கு அம்மா ஆகிவிடுவா? என்று கேள்வி கேட்க ராதிகா கோபத்தில் அதிர்ச்சி அடைகிறார்.

பணத்தை கட்டும் பாக்கியா
பிறகு நர்ஸ் பில் கட்ட சொல்ல கோபி நான் கட்டுகிறேன் என சொல்ல, பாக்யா பைலை வாங்கி நான் தட்டுகிறேன் என சொல்லி பணத்தை கட்டுகிறார். அடுத்து இன்னும் கொஞ்ச நேரத்தில் இனியாவை டிஸ்டார்ச் செய்து விடுவார்கள் என்று சொல்ல, கோபி நீங்க எல்லாரும் வீட்டுக்கு கிளம்புங்க நான் இனியாவை வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் என்று சொல்ல பாக்கிய இனி இனியா என்கூட தான் இருப்பா .உங்க கூட அனுப்ப முடியாது என்று தீர்க்கமாக சொல்கிறார் அதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியாகின்றனர்.

இது நல்ல ஐடியா தான்
பிறகு இனியாவை இனி கோபியோடு அனுப்ப முடியாது என்று எல்லோரும் சொல்ல, கோபி அதெல்லாம் முடியாது இவ்வளவு நாள் என் பொண்ணு என் கூட தான் இருந்தா. இனிமேலும் என்கூட தான் இருப்பா என்று சொல்ல, பாக்கியா, நான் உங்களை கண்டித்தது தப்புன்னு சொல்லல. ஆனா இனி இனியாவை எப்பவும் என் கூடத்தான் இருக்கணும் என்று சொல்ல, ராதிகா எதுக்கு தேவையில்லாத பிரச்சனை இனியா கிட்டையே கேளுங்க என்று சொல்கிறார். இதுவும் நல்ல ஐடியாவாக தான் இருக்கு என்று கோபி சொல்கிறார்.

கோபிக்கு கிடைத்த அதிர்ச்சி
செழியன், எழில், ஈஸ்வரி எங்களோடு வந்துவிடு என்று இனியாவிடம் சொல்ல கோபி நீங்க யாரும் போர்ஸ் பண்ணாதீங்க. இனியாவே நல்ல முடிவா சொல்லுவா என சொல்லி, நீ டாடி கூட வந்துடு, இனிமே நான் உன்னை எதுவும் சொல்ல மாட்டேன் திட்டவே மாட்டேன் என்று சொல்லி கையைப் பிடித்துக் கூப்பிட இனியா அப்படியே இருக்கிறார். அதை பார்த்து கோபி அதிர்ச்சி அடைகிறார்கள்.












Click it and Unblock the Notifications