பழனிச்சாமி சொன்ன வார்த்தை.. கதறி அழுத பாக்கியா.. குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரைக்குமான பிரமோ வெளியாகி இருக்கிறது.
அதில் பாக்கியா தன்னுடைய வேலையை பார்ப்பதற்காக முக்கியமான முடிவை எடுத்து இருக்கும் நிலையில் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அதே நேரத்தில் பாக்யா எடுத்த முடிவுக்கு பழனிச்சாமி தன்னுடைய ஆதரவை தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் டிஆர்பி யில் முன்னணி இடத்தில் இருந்து தொடர்ச்சியாக விஜய் டிவியில் முதலிடத்தில் இருந்து வந்தது. கடந்த இரண்டு வாரங்களாக இந்த சீரியல் இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் சீரியலில் திடீர் திருப்புமுனை வந்தால் டிஆர்பி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

அதே நேரத்தில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ பல்வேறு கருத்துக்களையும் பெற்று வருகிறது. ஏற்கனவே பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் மற்றும் காலேஜ் இரண்டையும் படித்துக் கொண்டிருப்பதால் கேண்டிலில் கவனத்தை செலுத்த முடியாமல் இருக்கிறார். அதேபோல வீட்டிலும் தொடர்ச்சியாக வேலை இருக்கும் நிலையில் கேண்டினில் வேலையை பார்க்காததால் செல்வி தான் அங்கு எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
ஆனால் செல்வியின் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக செல்வி அதில் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கும்போது சமையலில் சொதப்பி விட அதை வைத்து ராதிகா பெரும் பிரச்சனை செய்து இருக்கிறார். இந்த நிலையில் கோடீஸ்வரனிடம் கெஞ்சி கூத்தாடி மீண்டும் தனக்கு கேண்டீன் ஆர்டர் கிடைக்க வைத்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியான, இங்கிலீஷ் கிளாசை விட்டுவிடலாம் என்று இருக்கிறேன் என வீட்டில் அனைவரிடமும் பாக்கியா சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அதற்கு ராமமூர்த்தி, நீ ரொம்ப ஆசையா சேர்ந்தியேம்மா என்று கேட்க அதற்கு ஆமாம் மாமா ரெண்டு கிளாசையும் நான் பாத்துக்கிட்டா நம்ம வீட்ட கவனமா பாத்துக்க முடியல மாமா என்று சொல்கிறார். அதைத்தொடர்ந்து ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசில் அனைவரிடமும் தான் இனி கிளாசுக்கு வரப்போவதில்லை என்று சொல்ல, நோவிட்டா நாளையிலிருந்து உங்களை பார்க்க முடியாதுல்ல மேடம் என்று கேட்ட, அங்கிருந்தவர்களும் எங்களை எல்லாம் மறந்துடாதீங்க மேடம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து பாக்யா கதறி அழ பழனிச்சாமி என்ன இதுக்கெல்லாம் நீங்க அழுறீங்க? ஒரு பெரிய விஷயம் நடக்க போறதுன்னா இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் விட்டுக் கொடுத்துதான் ஆக வேண்டும் என்று சொல்கிறார். அதற்கு பாக்யா நான் இங்க கத்துக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு சார் என்று சொல்ல, நீங்க இந்த கிளாஸ் பத்தி கவலையே படாதீங்க. நீங்க படிக்க வேண்டிய விஷயத்தை நீங்க படிப்பீங்க என்று ஆறுதல் கூறுகிறார். இப்படியாக பிரமோ முடிவு அடைந்து இருக்கிறது.

-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications