கோபி போலவே மாறிய செழியன்.. ராதிகா கேள்வியால் அதிர்ச்சியில் பாக்கியா.. விறுவிறுப்பின் உச்சம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கான எபிசோடு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி இருக்கிறது.
அதில் இனியா விசயத்தில் ராதிகா கோபியிடம் தன்னுடைய கோபத்தை காட்ட கோபி இனியாவிற்கு அதிர்ச்சியான பதிலை கொடுக்கிறார்.

அதே நேரத்தில் செழியன் மாலினியிடம் நெருங்கி பழகிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக காணலாம்.
இந்த நிலையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மயூ வயதுக்கு வந்ததால் நாளைக்கு பங்க்ஷன் பண்ணனும் அதனால இனியா கூட ட்ரிப்புக்கு போக வேண்டாம் என்று ராதிகா சொல்ல, அதைக் கேட்டு கோபி ராதிகாவை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். ஆனால் அதற்கு ராதிகா ட்ரிப் போனால் அப்படியே போயிடுங்க என்று திட்ட கோபி என்ன செய்வது என்று யோசிக்கிறார்.
பிறகு இனியாவுக்கு போன் செய்து மையூ வயதுக்கு வந்து விட்ட விஷயத்தை சொல்லி ட்ரிப் போக முடியாது ட்ரிப் ஒரு வாரம் தள்ளி வைப்போமா? என்று கேட்க, இனியா அதிர்ச்சி அடைந்து அவங்க சொல்ற டைமுக்கு தான் நாம போக முடியும். நம்ம இஷ்டத்துக்கு எல்லாம் போக முடியாது என்று சொல்கிறார். பிறகு கோபி, நீ நாளைக்கு ட்ரிப் போறதுக்கு நான் எப்படியாவது ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
அதை தொடர்ந்து வீட்டிற்கு வந்த கோபி ராதிகாவிடம் நான் ட்ரிப்புக்கு போகல என்று சொல்ல, அதற்கு ராதிகா நீங்க போகாமல் இருப்பது தான் உங்களுக்கு நல்லது என்று திட்டி விட்டு விட்டு போகிறார். பிறகு கோபி செழியனுக்கு போன் போட்டு இனியாவை ட்ரிப்புக்கு கூட்டிட்டு போக முடியுமா? என்று கேட்க, அப்போது செழியன் மாலினி உடன் மது அருந்தி கொண்டு இருப்பதால் தன்னால் போக முடியாது. ஆபீஸ்ல லீவ் தர மாட்டாங்க என்று பொய் சொல்லி விட்டு போனை கட் பண்ணி விடுகிறார்.

அதைத்தொடர்ந்து வீட்டில் எல்லாரும் பேசிக் கொண்டிருக்கும்போது இனியா நடந்த விஷயத்தை பற்றி சொல்ல, ஈஸ்வரி கோபியை திட்டிக் கொண்டிருக்கிறார். பிறகு எழில் வந்ததும் இனியாவை கூட்டிட்டு போக முடியுமா? என்று அனைவரும் கேட்க, அதற்கு எழில் எனக்கு இரண்டு நாள் சூட்டிங் இருக்கு அது முடிச்சிட்டு போவோமா? என்று கேட்க அப்படி எல்லாம் போக முடியாது என்று இனியா கோபப்படுத்தோடு சொல்ல எல்லோரும் இனியாவுக்கு ஆறுதல் கூறுகின்றனர்.
பிறகு பாக்கியாவும் எழியனும் இனியா ட்ரிப்புக்கு போகவில்லையே அதனால அவ கவலையாய் இருக்கா அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து, பிறகு செழியனுக்கு போன் பண்ணி இனியாவை கூட்டிட்டு போக முடியுமா என்று கேட்க, அப்போது செழியன் எனக்கு முக்கியமான வேலை இருக்கு போக முடியாது என்று சொல்லிவிட பாக்கியா என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications