பரபரப்பான கட்டத்தில் பாக்கியலட்சுமி.. கோபியை அவமானப்படுத்திய மாமியார்..பாக்யா பதிலடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஆகஸ்ட் 30ம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது.
அதில் இனியாவை பாக்யாவுடன் அனுப்பக்கூடாது என்று கோபி சொன்னதற்கு ஈஸ்வரி அவமானப்படுத்தி அனுப்புகிறார்.

அதே நேரத்தில் கோபியிடம் ராதிகா கோவப்பட அதனால் ராதிகாவின் அம்மாவும் கோபியை திட்டுகிறார்.
இனியா தான் ட்ரிப்புக்கு அம்மா மட்டும் பாட்டியுடன் போக போறேன் என்று சொல்ல, கோபி நீ அந்த இடியட் கூட போக வேண்டாம். பிரின்ஸ்பல் கிட்ட பேசு ஒரு வாரம் கழித்து நானே உன்னை கூட்டிட்டு போகிறேன் என்று சொல்ல, அதற்கு இனியா அப்படி போக முடியாது இது முக்கியமான டூர் என்று சொல்கிறார்.
இதனால் கோபம் அடைந்த கோபி வீட்டிற்கு வந்த ஈஸ்வரி இடம் பாக்கியாவை நம்பி இனியாவை அனுப்ப வேண்டாம் என்று சொல்ல, அதற்கு எழில் அதுதான் உங்களால் கூட்டிட்டு போக முடியலையே அப்புறம் யாரு கூட்டிட்டு போனா உங்களுக்கு என்ன? என்று கேட்க இனியா என்னுடைய பொண்ணு என்னை நம்பாமல் யாரை நம்புவா என்று கேட்கிறார்.
அதற்கு ஈஸ்வரி சரிப்பா நாங்க பாக்கியாவை நம்பல நீ கூட்டிட்டு போறியா? என்று கேட்க, கோபி என்ன சொல்வது என்று தெரியாமல் யோசித்து கொண்டு இருக்க, அதற்கு பாக்கியா நாங்க சரியா போயிட்டு வருவோமா இல்லையா என்பது பற்றி வீட்டில் இருக்கிறவங்க கவலைப்படுவாங்க நீங்க கிளம்புங்க என்று சொல்ல கோபி கோபத்தில் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
பிறகு வீட்டிற்கு போன கோபி இது பற்றி ராதிகாவிடம் புலம்ப கோபமான ராதிகா கோபியை திட்டி விடுகிறார். அத்தோடு நீங்கள் உங்க அம்மா அப்பாவை கூப்பிடவில்லையா? இனியா டூர் பத்தி தான் பேச போனீங்களா? என்று திட்ட, அதற்கு கோபி ராதிகாவின் அம்மாவிடம் போய் கம்ப்ளைன்ட் பண்ணுகிறார். அதற்கு ராதிகாவின் அம்மா நாங்க உங்க மூத்த மனைவியை கூப்பிட சொல்லல. உங்க அம்மா அப்பாவை தான் கூப்பிட சொல்லி இருக்கோம். அதனால தான் ராதிகா கோவிச்சுட்டு போயிட்டா என்று கோபி இடம் கோபத்தை காட்டுகிறார்.
இதனால் மீண்டும் பாக்கியா வீட்டிற்கு வந்த கோபி ஈஸ்வரியிடம் மயூ ஃபங்ஷனுக்கு வர சொல்லி கேட்க, ஈஸ்வரி நாங்க எதற்கு அங்கு வரவேண்டும் என்று அவமானப்படுத்தி அனுப்புகிறார். பிறகு ராமமூர்த்தி நாம மயூக்காக போகணும்னு சொல்லி பாக்கியா சொல்றா என்று சொல்ல பாக்கியாவும் ஆமா அத்தை நீங்க மயூக்காக போக வேண்டும் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications