பாக்கியாவால் தெருவுக்கு வந்த கோபி.. அவமானப்படுத்தும் ராதிகா.. எதிர்பாராத திருப்பம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா பெயருக்கு வீடு மாறிவிட்டதால் கோபி கடும் கோபத்தில் இருக்கிறார்.
அதே நேரத்தில் கோபியும் ராதிகாவும் ரோட்டில் நிற்கும்போது பாக்யா வீட்டில் புதிதாக மாட்டப்படும் போர்ட் பார்த்து கோபி மேலும் கோபமடைகிறார்.
இதனால் பாக்கியவை பழி வாங்குவதற்காக ராதிகா ஆபீஸில் கேண்டீன் விஷயத்தில் மிரட்டுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 15 ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் கோபி பெயரில் இருக்கும் வீட்டை பாக்கியா பெயரில் மாற்றுவதற்காக எழில், ராமமூர்த்தி, பாக்யா, கோபி என எல்லோரும் ரிஜிஸ்டர் ஆபீஸில் காத்திருக்கின்றனர். பிறகு கோபி பாக்கியாவின் பெயரில் வீடு மாறுவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
பாக்யா ரெஜிஸ்டர் ஆபீஸில் வைத்தும் இப்போது கூட உங்க பெயருக்கு பத்திரத்தை மாத்திரலாம் மாமா என்று சொல்ல, அதற்கு ராமமூர்த்தி பாக்யாவை திட்ட பிறகு வேறு வழி இல்லாமல் பாக்கியா வீடு தன்னுடைய பெயருக்கு மாறுவதற்கு சம்மதம் தெரிவிக்கிறார். இந்த நிலையில் பாக்கியா பெயருக்கு மாற்றி கொடுப்பதற்கு விருப்பமே இல்லாமல் கோபி கையெழுத்து போட்டு கொடுக்கிறார்.
பிறகு ரிஜிஸ்டர் முடிந்து வெளியே வந்ததும் எழில் கோபி இடம் இனிமேல் அந்த வீட்டுக்கும் உங்களுக்கு சம்பந்தம் இல்லை. நீங்கள் அங்கே வரக்கூடாது என்று மிரட்டி விட்டு போகிறார். அதைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்ததும் எழில் தான் வாங்கி வைத்திருந்த பாக்கியலட்சுமி என்று போர்டு எழுதப்பட்ட போர்டை வாசலில் மாட்டுகிறார்.
அந்த நேரம் தெருவிற்கு வந்த ராதிகாவும் கோபியும் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இவர்கள் இருவரையும் பார்த்த பாக்கியா இவர்களை மேலும் வெறுப்பேத்துவதற்காக போர்டு பக்கத்தில் நின்று போட்டோ எடுக்கிறார். இதை பார்த்து கோபி கடுப்பாகி சண்டைக்கு போக முயல, ராதிகா வேண்டாம் என்று தடுத்து வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போகிறார்.
அதைத்தொடர்ந்து வீட்டில் எல்லோரும் சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அமிர்தாவின் அப்பா அம்மா வர அவர்களிடம் நலம் விசாரித்து கொண்டிருக்கும் போது ராமமூர்த்தி எழிலுக்கு போன் போட்டு அவரை வரச் சொல்லி கூப்பிடுகிறார். அதை தொடர்ந்து கேண்டினில் ராதிகா தோசை கேட்டு காத்து இருக்க செல்வி தோசையை அடுத்த டேபிளுக்கு மாற்றி கொடுத்து விடுகிறார்.
இதனால் கடுப்பான ராதிகா அங்கேயே கத்துகிறார். அதோடு நான் வீட்டை விட்டு எப்போ போவேன்னு நீங்க நினைச்சுட்டு இருந்தீங்க தானே..? நீங்களும் எண்ணிக்கோங்க உங்களையும் இந்த கேண்டினை விட்டு சீக்கிரமா வெளிய அனுப்பாமல் விடமாட்டேன் என்று சபதம் போட்டு விட்டு செல்கிறார். இதனால் பாக்கியா அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications