உயர் பதவியில் ராதிகா.. அம்மா பேச்சால் "மனம் மாறும்” அமிர்தா.. பாக்யாவுக்கு வந்த புது பிரச்சனை
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவிற்கு அவர் எதிர்பார்த்தபடியே ப்ரோமோஷன் கிடைத்துவிட்டது என்று சொல்ல கோபி அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.
அதேபோல இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அமிர்தாவின் அம்மா சொன்னதை கேட்டு அமிர்தா மனம் மாறுகிறார்.

அதே நேரத்தில் பதவி உயர்வு பெற்ற ராதிகா இனி பாக்யாவை பாடாய்படுத்த போகிறார்.
விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஜூலை 17ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசில் இருக்கும் பழனிச்சாமி தன்னுடைய போனில் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் கிளாசில் சின்சியராக பாக்கியா படித்துக் கொண்டே இருக்கிறார்.

அதை பார்த்து பழனிச்சாமியும் பாக்யாவின் தோழியும் பாக்கியாவை கிண்டல் செய்து கொண்டு இருக்க, அப்போது வரும் டீச்சர் ஆரம்பத்தில் அவர்களுக்கு டெஸ்ட் சொன்னதை மறந்து விட பழனிச்சாமி அதை நினைவுபடுத்தி விடுகிறார். பிறகு டெஸ்ட் வைக்கப்படுகிறது. அப்போது பாக்கியா நல்லபடியாக பரிட்சை எழுதுகிறார்.
இதைத்தொடர்ந்து வழக்கம் போல பாக்கியாவை பழனிச்சாமி பாராட்டிக் கொண்டே இருக்கிறார். பாண்டிச்சேரியில் அத்தனை பேருக்கு சாப்பாடு செய்து விட்டு படிக்கவும் செய்து இருக்கிறீர்களே? என்று பாராட்டிக் கொண்டிருக்கிறார்.
அதை தொடர்ந்து வீட்டில் அமிர்தாவிடம் அவருடைய அம்மா வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் உன்னிடம் நல்லபடியா இருக்காங்களா? நல்லா பார்த்துக்கிறார்களா? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

எல்லோரும் தன்னிடம் நன்றாக பேசுவதாக சொல்லிக் கொண்டிருக்க அப்போது அவர் உங்களுக்கு என்று இன்னும் ஒரு குழந்தை வேண்டாமா? என்று கேட்டு, நீ இன்னொரு குழந்தை பெற்றுக் கொண்டால்தான் இந்த வீட்ல உனக்குனு ஒரு உரிமை இருக்கும் என்று ஏத்தி விடுகிறார். இதைக் கேட்டு அமிர்தா யோசிக்கிறார்.
அடுத்ததாக ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றார். அப்போது பாக்கியா நான் எக்ஸாமுக்கு வேலை செய்து கொண்டு இருக்கும்போதே படித்துக் கொண்டே தான் இருந்தேன். சமைக்கும் போது படிச்சதை எல்லாம் நினைவுப்படுத்தி பார்ப்பேன் என்று சொல்ல அனைவரும் பாராட்டுகின்றனர்.

அதைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த எழிலிடம் அமிர்தா நாம இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்வோமா? என்று அமிர்தா கேட்க, அதற்கு எழில் நமக்கு நிலா மட்டுமே போதும். அப்படி சொல்லித்தானே கல்யாணம் பண்ணிக் கொண்டோம். நாம நிலாவை நல்லபடியா வளர்க்கணும். யார் என்ன சொன்னாலும் நீ கவலைப்படாத, நிலா பாப்பா மட்டுமே நமக்கு போதும் என்று சொல்ல, அமிர்தா என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறார்.
பிறகு ராதிகா தனக்கு ப்ரமோஷன் கிடைத்திருப்பதாக சொல்லி தன்னுடைய அம்மாவுக்கும், கோபிக்கும் இனிப்பு கொடுத்து மகிழ்ச்சி அடைய, அப்போ சம்பளமும் அதிகரிச்சுடுச்சா என்று கோபி கேட்க, ஆமாம் என்று சொன்னதும் கோபி பாராட்டுகிறார். ஆனால் முகம் மாறிவிடுகிறது. பிறகு நான் வெளியே போயிட்டு வருகிறேன் வேலை இருக்கு என்று சொல்லி கிளம்ப, ராதிகா குடிக்க போறீங்களா? குடிச்சிட்டு வந்தால் அப்புறம் நடக்கிறதே வேற என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications