முதல் மதிப்பெண் பெற்ற இனியா.. பாக்யாவுக்கு கிடைத்த அவமானம்.. உணர்வு பூர்வமான தருணம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இனியாக்கு 12th ரிசல்ட் வந்துவிட்டது. அதில் ஸ்கூல் ஃபர்ஸ்ட் மார்க் எடுத்திருக்கிறார்.
அதே நேரத்தில் பாக்யா சமையல் ஆர்டருக்கு போன இடத்தில் சமைப்பதற்கு லேட் ஆகிவிட்டதால் வீட்டிற்கு வர முடியாமல் தவிக்கிறார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஜூலை 19ஆம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியா தான் சமையல் ஆர்டர் எடுத்த இடத்திற்கு தன்னுடன் சமைப்பவர்களை கூட்டிக்கொண்டு போகிறார். அங்கே பாக்யாவை கண்டதும் அவர்கள் சின்னதாக நிச்சயதார்த்தம் வைத்திருக்கிறோம் 11 மணிக்கு எல்லாம் சாப்பாடு பரிமாறனும் உங்க சாப்பாட்டை கல்யாணம் வரைக்கும் மறக்கக்கூடாது என்று சொல்ல, பாக்கியா நான் சூப்பரா செய்து விடுவேன் என்று கூறுகிறார்.

அதே நேரத்தில் வீட்டில் இனியா அம்மாவை இன்னும் காணவில்லையே ரிசல்ட் வருவதை நினைத்தால் பயமாயிருக்கு என்று புலம்பி கொண்டு இருக்க, அப்போது வீட்டில் இருக்கும் அனைவரும் இனியாவை சமாதானப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.இனியா சாமி கும்பிட்டபடி இருக்க எழில் ரிசல்ட் பார்க்கும்போது இனியா 600க்கு 596 மார்க் வாங்கி இருப்பதாக சொல்ல அனைவரும் இனியாவை கட்டிப்பிடித்து தங்களுடைய வாழ்த்துக்களை சொல்கின்றனர்.
தொடர்ந்து இனியா பாக்கியாவுக்கு போன் செய்ய அங்கே பாக்யாவிற்கு சிக்னல் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் பாக்யாவும் அங்கிருந்து அனைவரிடமும் போனை வாங்கி இனியாவிற்கு ட்ரை பண்ணி பார்க்க யாருடைய போனிலும் சிக்னல் இல்லாமல் இருக்கிறது. அதனால் ஊர் முழுக்க போனை கையில் கொண்டு சென்று சிக்னல் இருக்கிறதா என்று தேடிக் கொண்டிருக்க சமையல் ஆர்டருக்கு கூப்பிட்ட திருமண வீட்டார் பாக்கியாவை திட்டுகின்றனர்.

அடுத்ததாக இனியாவிற்கு ஸ்கூலில் இருந்து போன் பண்ணி நீங்க தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் ஆக செலக்ட் ஆகி இருக்கீங்க என்று சொல்லி இனியாவிற்கு வாழ்த்துக்களையும் கூறிக்கொண்டு பேரன்ஸை உடனடியாக கூட்டிட்டு ஸ்கூலுக்கு வாங்க என்று சொல்ல இனியா ரொம்பவே சந்தோஷப்படுகிறார்.
அந்த நேரத்தில் பாக்யாவிடம் பந்தியை ஆரம்பிக்கலாமா என்று கல்யாண வீட்டினர் வந்து கேட்க, ஆரம்பிக்கலாம் என்று சொல்லி, எல்லாவற்றையும் எடுத்துச் கொண்டு செல்கிறார். பிறகு இனியாவிடம் ஒரு முறையாவது பேசணும் என்று போன் எடுத்து பாக்கியம் முயற்சி செய்கிறார். போன் மீண்டும் சிக்னல் கிடைக்காததால் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications