பாக்யாவை போராடி காப்பாற்றிய பழனிச்சாமி.. கடைசியில் கிடைத்த அதிர்ச்சி.. ராதிகா கேட்ட வார்த்தை
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவை பழனிச்சாமி மண்டபத்தில் நடந்த பிரச்சனையில் இருந்து காப்பாற்றி கூட்டிக்கொண்டு வருகிறார்.
ஆனால் இனியா தன்னுடைய ஃபங்ஷனுக்கு கூட பாக்யவால் வர முடியவில்லை என்று கோபத்தில் அனைவர் முன்னாடியும் அவமானப்படுத்துகிறார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஜூலை 22ஆம் தேதி எபிசோடு ஆரம்பத்தில் பழனிசாமி பாக்யாவிற்காக மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசுகின்றார். பாக்யாவிற்கு சமையல் தெரியாது என்று அங்கிருந்தவர்கள் பாக்யாவை திட்ட, ஏற்கனவே போன மாதம் தான் பாண்டிச்சேரியில் எம்எல்ஏ வீட்டு கல்யாணத்தில் பாக்கியா சமைத்ததை பற்றி பெருமையாக பேசுகிறார்.
பிறகு மாப்பிள்ளையின் அம்மா அப்பாவிடம் ஒரு நாள் தெரியாமல் நீங்கள் சமையலில் சொதப்புவது இல்லையா? இதுவெல்லாம் ஒரு விஷயம் என்று நீங்க கல்யாணத்தை நிறுத்திவிட்டால் இந்த பொண்ணோட மனசு எவ்வளவு கஷ்டப்படும் என்று கல்யாண பொண்ணை பற்றி பேச அங்கிருந்த அனைவரும் ஒரு வழியாக சமாதானம் அடைகின்றனர்.
பிறகு பாக்யா இனியா பற்றி விசாரிக்க ராமமூர்த்தி அவள் ஸ்கூல் பெஸ்ட் வந்து இருக்கா என்று சொல்ல, பாக்யா மகிழ்ச்சியில் குதிக்கிறார். அதே நேரத்தில் மறுபக்கம் இனியாவுக்கு காலனியில் பாராட்டு விழா நடத்திக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்கியா மேடத்தால் அவருடைய மகளின் பங்ஷனுக்கு கூட வர முடியவில்லை என்று பாக்கியாவிடம் தேர்தலில் தோற்ற நபர் பேசி இனியாவை மேலும் கோபப்படுகிறார்.
அப்போது கோபி என்னுடைய மகள் இவ்வளவு மார்க் எடுத்தது எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கு தெரியுமா? என்று இனியாவிடம் பேசிக் கொண்டிருக்க ராதிகாவும் நீ அதிகமாக மார்க் எடுத்தது தெரிஞ்சதும் உங்க அப்பா எவ்வளவு சந்தோஷப்பட்டார் என்று தெரியுமா? என்று சொல்லு இனியா மகிழ்ச்சி அடைகிறார். அந்த நேரத்தில் பாக்கியா மண்டபத்திற்கு ஓடி வருகிறார். அப்போது அங்கிருப்பவர்கள் பாக்கியா முன்னாடியே உங்க மகள் பங்ஷனுக்கு கூட சீக்கிரமா வர மாட்டீங்களா என்று கேட்கின்றனர்.
அதைத் தொடர்ந்து பாக்கியா இனியாவின் தோளைத் தொட்டு பேச முயற்சி செய்ய, அதற்கு இனியா என்கிட்ட பேசாத என்று பாக்யாவை திட்டிவிட்டு டாடி நீங்க வந்ததிற்கு ரொம்ப தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு கீழே வந்த பிறகும் பாக்யா பேச வர, அப்போதும் இனியா என்கிட்ட பேசாத என்று எல்லாரும் முன்னாடியும் அவமானப்படுத்தி விட்டு செல்ல அவர் பின்னாடியே எல்லோரும் போகின்றனர்.

அப்போது பழனிச்சாமி இனியா உங்களை ரொம்ப எதிர்பார்த்தா. நீங்க வரலைங்கற கோவத்துல தான் இருக்குறா. கவலைப்படாதீங்க எல்லாம் சரியாகும் என்று பாக்கியாவை சமாதானப்படுத்த, அதைப் பார்த்த ராதிகா இவர்தான் பழனிச்சாமியா என்று கேட்க அதற்கு கோபி கோவத்தோடு இவர்தான் என்று சொல்கிறார் இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications