மீண்டும் வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்யும் கோபி.. மனம் மாறும் இனியா.. பாக்கியா எடுத்த திடீர் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபி மீண்டும் பாக்கியா வீட்டிற்கு வந்து எனக்கு பிடித்ததை தான் இனியா படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்.

ஆரம்பத்தில் இனியா கோபி சொன்னதை தான் கேட்பேன் என்று கூறியிருந்த நிலையில், கடைசியில் பாக்கியா கேட்டு பேச்சைக் கேட்டு மனம் மாறுகிறார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

 Baakiyalakshmi Serial 2023 July 25th Episode full update

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 25ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் பாக்யா வீட்டிற்கு வரும் கோபி ஆரம்பத்தில் தயங்கி வாசலில் நின்று கொண்டிருக்க அப்போது இனியா வாங்க டாடி என்று கூப்பிட, வீட்டிற்குள் வந்து நீ பிபிஏ படி அதுதான் உன் ஃபியூச்சருக்கு நல்லது என்று சொல்ல, இனியா நான் அண்ணன் மாதிரி விஸ்காம் தான் படிக்க போறேன் என்று சொல்கிறார்.

ஆனாலும் கோபி பிபிஏ தான் படிக்க வேண்டும் என்று கட்டாயமாக சொல்லிவிட்டு கிளம்ப இனியா அதிர்ச்சியில் இருக்கிறார். பின்னர் குழம்பத்தில் நான் என்னதான் செய்வது என்று சொல்லிக் கொண்டிருக்க அதற்கு பாக்கியா உனக்கு பிடிச்சதை படி, டாடி சொல்றதுக்காக எல்லாம் நீ முடிவெடுக்காத என்று சொல்கிறார். அதை தொடர்ந்து ஜெனியும், அமிர்தாவும் இனியாவிடம் உனக்கு பிடித்ததை படி என்று சொல்கின்றனர்.

ஆரம்பத்தில் வேண்டாம் நான் அப்பா சொன்னதையே படிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்த இனியா பிறகு எல்லோரும் சொன்னதை கேட்டு மனம் மாறி ஓகே நான் எனக்கு பிடிச்ச விஸ்காம் படிக்க போறேன் என்று சொல்ல, எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். அதைத்தொடர்ந்து பாக்யா கேண்டின்க்கு வருகிறார். அங்கே அமைதியாக இருப்பதை பார்த்து செல்வி பாக்யாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது நீயும் காலேஜ்ல சேர்ந்திரு அக்கா. அப்போதான் நீயும் படிச்சிருக்கே என்று கோபிக்கு காட்டலாம். நீயும் ஸ்டைலா வந்துடுவ, அங்க உனக்கு பாய் பிரண்டும் கிடைப்பாங்க என்று சொல்ல, பாக்கியா "ஆமா என் வயதுக்கு இது ஒன்னு தான் குறைச்சல். நல்லவேளை அத்தை இல்லாமல் போயிட்டாங்க. அத்தை இருந்திருந்தால் என்ன பண்ணுவாங்க தெரியுமா? என்று கேட்க, அதற்கு செல்வியும் பயந்தது போல நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதை தொடர்ந்து வீட்டிற்கு வந்ததும் அப்ளிகேஷன் ஃபார்ம் வாங்கி இனியாவிற்கு பிடித்த விஸ்காம் பாமை நிரப்பி கொண்டு இருக்கின்றார். அப்போது எல்லோரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க, அங்கே கோபி பிபிஏ அப்ளிகேஷன் ஃபார்ம் கொண்டு வந்து இருக்கேன் என்று சொல்ல, இனியா நான் விஸ்காம் தான் படிக்க போறேன் என்று சொல்ல, கோபி நோ அது படிக்க வேண்டாம். நீ பிபிஏ தான் படிக்கணும் என்று கட்டாயப்படுத்துகிறார். அப்போது இனியாவிற்காக சப்போர்ட்டுக்கு வந்த எழிலையும் செழியனையும் திட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+