பண விஷயத்தில் கிடைத்த அவமானம்.. காலேஜுக்கு கிளம்பும் பாக்கியா.. இனியா கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஜூலை 28ஆம் தேதி 29ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் பாக்யா காலேஜ் படிக்காததால் லோன் கேட்க போன இடத்தில் அவமானம் கிடைக்கிறது.
இதனால் இனி காலேஜ் படிக்கலாம் என்று பாக்கியா முடிவெடுக்க அதற்கு இனியா எதிர்பாராத பதில் கூறுகிறார்.

பாக்கியலட்சுமி சீரியல் பலதரப்பட்ட ரசிகர்களால் பாராட்டப்பட்டு கொண்டிருக்கிறது. பாக்யாவின் அடுத்தடுத்த முயற்சிகளும் அதில் அவர் ஜெயிப்பதும் பலரையும் கவர்ந்திருக்கிறது. பாக்யா ஜெயிப்பதை பலர் தாங்களே ஜெயித்தது போன்று பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.
பாக்கியலட்சுமி, குடும்பத் தலைவியாக தன்னுடைய குழந்தைகள் மற்றும் கணவனை பார்த்துக்கொண்டு வீட்டை நிர்வகித்துக் கொண்டிருக்கும் போது அடுத்தடுத்த அவமானங்களும் அலட்சியங்களும் வாங்கிக்கொண்டு அதை சகித்துக் கொண்டு இருந்த நிலையில் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்று பாக்யா செய்ய தொடங்கிய ஒவ்வொரு செயலிலும் ஆரம்பத்தில் பல பிரச்சனைகளை தாண்டி வெற்றி பெற்றிருந்தார்.
ஏற்கனவே கோபி மற்றும் ராதிகாவிடம் பாக்கியா விடும் சவால்களை ஒவ்வொரு முறையும் பல போராட்டங்களுக்குப் பிறகு செய்து முடித்து அதில் வெற்றி பெறும் போது அடுத்த பிரச்சினை தொடங்கி விடுவது வாடிக்கைதான். அந்த வகையில் தான் தற்போது கோபி மற்றும் ராதிகாவுக்கு பணத்தை கொடுத்து வீட்டை விட்டு வெளியேற்றி இருந்த நிலையில் பாக்கியாவிற்கு புது பிரச்சனை வந்திருக்கிறது.
அதாவது தற்போது வெளியான ப்ரோமோவில், பாக்கியா ஒரு பேங்குக்கு சென்று "ராஜசேகர் சார் சொன்னார். நீங்க சுய தொழில் பண்ணுற பெண்களுக்கு லோன் கொடுக்கறதா" என்று லோன் கேட்டு தன்னுடைய பைலை கொடுக்க, அந்த லோன் ஆபிசர் "எல்லா டாக்குமெண்ட்டையும் சரிபார்த்துவிட்டு எல்லாம் ஓகே ஆனா நீங்க டிகிரி படிச்ச சர்டிபிகேட் மட்டும் இல்லை" என்று சொல்ல, அதற்கு பாக்கியா நான் காலேஜ் படிக்கல சார் என்று சொல்கிறார்.
பனிரெண்டாம் வகுப்பு வரைக்கும்தான் படித்திருக்கேன் என்று சொல்ல, அதற்கு பேங்க் ஆபிஸர் அப்போ என்னால ஒன்னும் செய்ய முடியாது. இங்கே டிகிரி படித்து முடித்து சுய தொழில் செய்யும் பெண்களுக்கு மட்டும்தான் லோன் வழங்கப்படுகிறது என்று சொல்லி திருப்பி அனுப்புகிறார்.

இதைத் தொடர்ந்து இரவு இனியா தூங்கிக் கொண்டிருக்கும்போது பாக்கியா இனியாவை எழுப்பி," நான் காலேஜ்க்கு போனா எப்படி இருக்கும்?" என்று கேட்க, அதற்கு இனியா, "படிக்கிறேன்னு மட்டும் வந்துராதமா" என்று சொல்ல, எந்த வயதிலேயும் படிக்கலாம்னு எல்லாரும் சொல்றாங்கல்ல என்று, கேட்க அதற்கு இனியா அதுக்காக இப்ப வரேன்னு சொல்றியா? என்று கேட்க, ஆமா என்று பாக்கியா கண்ணை காட்டுகிறார்.
இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் இனி பாக்யாவும் இனியாவும் ஒரே காலேஜில் படிப்பது போன்று கதை வரப்போகிறது என்று தெரிகிறது. ஏற்கனவே இதன் படித்தான் கோபி இனியா காலேஜ் அட்மிஷன் வாங்கிய விஷயத்தில் பாக்கியாவை தொடர்ச்சியாக அவமானப்படுத்தி இருக்கிறார். இந்த நிலையில் இனி என்னவெல்லாம் பிரச்சனைகளும் திருப்பங்களும் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications