பாக்கியாவை அசிங்கப்படுத்திய ராதிகா... பழனிச்சாமி செய்த செயல்.. வியந்து போன கல்யாண வீடு
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பழனிச்சாமி இடம் பேசியதற்காக பாக்யா கோபியிடம் சண்டை இடுகிறார். அதை பார்த்து ராதிகா கோபியிடம் கோபப்படுகிறார்.
பாக்கியா சாப்பாடு சர்வ் செய்யும் போது ராதிகா அவமானப்படுத்த அதை பார்த்து பீல் பண்ணும் பழனிச்சாமி பாக்கியாவுக்காக இறங்கி வேலை செய்கிறார்.

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை நான்காம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் கோபி பாக்கியாவிடம் வந்து ஏய்... என்று கத்த, பாக்கியா பதிலுக்கு ஏய்.. உங்க மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? என்று கேள்வி கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார். பொண்ணுக்கு எக்ஸாம் நடந்துட்டு இருக்கு இந்த நேரத்துல இப்படி ஊரை சுத்திக்கிட்டு இருக்க? அந்த பழனிச்சாமியோட பேசாதன்னு நான் உனக்கு பலமுறை சொல்லிட்டேன். ஆனா நீ அதை கேட்கவே இல்லை என்று கோபி மிரட்டி கொண்டிருக்க, நான் யார் கூட பேசணும், பேச கூடாதுன்னு முடிவு பண்றதுக்கு நீங்க யாரு என்று பாக்கியா ஷாக் கொடுக்கிறார்.

மேலும் உங்களை விட எனக்கு அதிகமா கோவப்பட தெரியும். இதுக்கு மேல இந்த மாதிரி ஏதாவது பண்ணுனீங்க நடக்கிறதே வேற, நான் எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன் என்று எச்சரிக்கை விடுத்து விட்டு கிளம்பி போகிறார். அப்போது அங்கே இதையெல்லாம் பார்த்துவிட்ட ராதிகா கோபி பின்னாடி போய் நிற்க திரும்பி பார்க்கும் கோபி ராதிகாவை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
அப்போ செல்வி வந்திருக்காங்கனு நான் சொன்னதும் பாக்கியா வந்திருப்பா என்று அவளை பார்க்க ஆசை ஆசையா ஓடி வந்துட்டீங்களா? என்று ராதிகா பிரச்சினை செய்ய இல்ல இங்க அந்த பழனிச்சாமியும் வந்து இருக்கான். என் பொண்ணுக்கு பரீட்சை இருக்கு அதை விட்டுட்டு இங்க அவன் கூட ஊர் சுத்த வந்துட்டா என்று பேச மயூக்கு தான் எக்ஸாம் இருக்கு அதை எல்லாம் நீங்க நினைச்சு பார்க்க மாட்டீங்களா? என்று ராதிகா திட்டி விட்டு இனி இப்படி எல்லாம் பண்ணிட்டு இருந்தீங்கனா, கல்லை தூக்கி தலையில் போட்டு விடுவேன்னு சொல்லிட்டு கிளம்புகிறார்.

பிறகு அடுத்ததாக இருவரும் ஃபங்ஷனுக்கு செல்ல அங்கு ராதிகாவின் உறவினர் பாக்யாவை கூப்பிட்டு இவர்களுக்கு ஜூஸ் கொடுக்க சொல்கிறார். ராதிகா பாக்யாவிடம் நக்கலாக பேசி அவமானப்படுத்துகிறார். இதை பார்த்த பழனிசாமி பாக்யாவுக்காக உதவி செய்ய அங்கு வரும் சுதாகர் இதை எல்லாம் நீங்க செய்ய வேண்டியது தானே? என்று கேட்க, பிறகு பாக்யா பழனிச்சாமிடம் இருந்து ஜூசை வாங்கி சென்று கொடுக்கிறார். கோபி ராதிகா முன்பு பாக்யாவின் சமையலை சுதாகர் பாராட்ட இருவருடைய முகமும் மாறுகிறது.

மறுநாள் காலையில் பாக்கியா எல்லோருக்கும் காபி கொடுத்துக் கொண்டிருக்க கோபி மற்றும் ராதிகாவுக்கும் பாக்கியா காபி கொடுக்க, காபியின் வாசனையை பார்த்து கோபி ரசித்துக் கொண்டு இருக்க அதை பார்த்து ராதிகா கடுப்பாகிறார். எதிர் சீட்டில் அமர்ந்திருந்த சுதாகர் கோபி, ராதிகா மற்றும் பாக்யாவின் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டே இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications