சவாலில் ஜெயித்த பாக்கியா.. கோபத்தில் எழில்.. வீட்டை விட்டு கிளம்புவாரா கோபி? திடீர் திருப்பம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா சமையல் ஆர்டர் எல்லாம் முடித்துவிட்டு வீட்டிற்கு வர அனைவரும் சந்தோஷத்தில் அவரை வரவேற்கின்றனர்.
சிறிது நேரம் கழித்து கோபியும் ராதிகாவும் வீட்டிற்கு வந்து கோபி இனியாவிடம் பாசமாக இருப்பது போல நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இனியா சொன்ன வார்த்தையை கேட்டு கோபமான எழில் இனியாவை திட்டுகிறார். அதை தொடர்ந்து இன்றைய எபிசொட்டில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஜூலை 7ஆம் தேதி காலை எபிசோடு ஆரம்பத்தில் வீட்டில் எல்லோரும் பாக்கியா இன்னும் வரவில்லையே என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்க, அப்போது பாக்யாவும் செல்வியும் வீட்டிற்கு வருகின்றனர். செல்வி படையப்பா பாடலை சந்தோஷமாக பாடி பாக்யாவை வரவேற்றுக் கொண்டிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து எல்லோரும் வீட்டில் சந்தோஷமாக பாக்கியாவை வரவேற்று ஆர்டர் எப்படி முடிந்தது என்று கேட்டுக் கொண்டிருக்க, பாக்கியா அங்கு நடந்த எல்லாவற்றையும் சொல்ல எல்லோரும் பாக்கியவை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கே தான் செய்த பக்லாவை கொடுக்க அனைவரும் சாப்பிட்டு விட்டு பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.
பிறகு பாக்யா இனியாவிற்கு சாப்பாடு ஊட்டி விட்டு எக்ஸாம் எல்லாம் நல்லா எழுதுனியா என்று கேட்டு விசாரித்தபடி நான் இந்த நேரத்தில் உன்னை விட்டு போய் இருக்க கூடாது. என்னை மன்னிச்சிடு என்று மன்னிப்பு கேட்டு பேசிக் கொண்டிருக்கிறார். மேலும் நான் அங்க இருந்தாலும் உன்னோட நினைப்பாகத் தான் இருந்தேன். எப்படி எக்ஸாம் எழுதினியோ? என்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன்னு நான் நினைச்சுட்டே இருந்தேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது கோபியும், ராதிகாவும் வீட்டிற்கு வருகின்றனர். கோபி மட்டும் கீழே இருக்க, ராதிகா நான் மேலே போகிறேன் என்று கிளம்பி விட கோபி இனியாவிடம் எக்ஸாம் பற்றி விசாரிக்கிறார். இனியாவும் அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது தான் வாங்கி வந்த கிப்ட்டை இனியாவிடம் கொடுத்துவிட்டு நான் உன்னை பற்றி தான் ரொம்ப யோசிச்சுட்டே இருந்தேன் என்று கோபியும் பீல் பண்ணியபடி பேசிக் கொண்டிருக்கிறார்.
அதைப் பார்த்து கடுப்பான எழில் இனியாவை திட்டுகிறார். அதற்கு இனியா, எனக்கு டாடி மேல நிறைய கோபம் இருக்கு. ஆனா அவர் பேசும்போது என்னால் பேசாமல் இருக்க முடியல என்று சொல்ல, பாக்கியா நீ சின்ன பொண்ணு நீ டாடி கிட்ட பேசுறது தப்பு இல்லை என்று சொல்லி ஆறுதல் படுத்துகிறார். பிறகு செழியனும் வர செழியனும் பாக்யாவை பாராட்டுகிறார்.

அதைத்தொடர்ந்து பாக்கியாவுடன் சமையல் செய்தவர்கள் வீட்டுக்கு வருகிறார்கள். அவர்களிடம் பாக்கியா சம்பளம் தராமல் விட்டதற்காக மன்னிப்பு கேட்கிறார். அதற்கு அவர்களும் பரவாயில்லை அக்கா, உங்க பிரச்சனை முடிஞ்ச பிறகு தாங்க அதோடு வேறு எதுவும் ஆடர் வந்து இருக்கா? என்று கேட்க, பாக்யா ஆர்டர் வந்ததும் எல்லாரும் சேர்ந்து செய்யலாம் என்று சந்தோஷமாக கூறிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications