நெஞ்சு வலியில் துடிக்கும் பாக்யா.. அமிர்தா கேட்ட கேள்வி.. அவமானப்படும் கோபி.. திடீர் திருப்பம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவுக்கு திருமணம் என்பது பற்றி ராதிகாவிடம் கோபி சொல்ல ராதிகா கோபப்படுகிறார்.
கல்யாணத்துக்கு முன்னாடி எழில் தன்னிடம் பாசமா இருந்த மாதிரி இப்ப இல்லை என்று பாக்கியா தனக்கு நெஞ்சு வலி வந்த மாதிரி நடிக்கிறார்.
அதற்கு அமிர்தா நீங்க இப்படி எல்லாம் யோசிக்கக்கூட மாட்டீங்கன்னு எனக்கு தெரியும் என்று பாக்யாவை பற்றி பேச பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஜூன் 16ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் கோபி ராதிகாவிடம் நான் ஒன்னு சொன்னா நீ ஷாக் ஆயிடுவ என்று பயமுறுத்தி, பிறகு பாக்யாவுக்கு கல்யாணம் சொல்ல, அதை ஆரம்பத்தில் ராதிகா நம்ப மறுக்க பிறகு உண்மையாகவே ராதிகாவுக்கு கல்யாணம் தான். எங்க அம்மா அப்பாவும் நாங்க சம்மந்தி ஆக போறோன்னு சந்தோஷத்துல இருக்காங்க என்று புலம்புகிறார்.
அதற்குப் பிறகு கோபியின் பதட்டத்தை பார்த்த ராதிகா சரி பாக்யாவுக்கு கல்யாணம் ஆனாலும் பரவாயில்லை. நீங்க எதுக்கு இப்படி வருத்தப்படுறீங்க? அப்போ உங்களுக்கு இன்னும் பாக்யா மீது காதல் இருக்கிறதா? என்று கேட்க அப்படியெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. அவ யார கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கு என்ன என்பது போல கோபி நடித்துக் கொண்டிருக்கிறார்.
பிறகு என் மனசு முழுக்க நீ மட்டும் தான் இருக்க என்று ராதிகாவை சமாதானப்படுத்தி தூங்குகிறார். அப்போது தூக்கத்திலும் பாக்கியா பழனிச்சாமிக்கு காபி கொடுப்பது போல கனவு கண்டு அலறி எழுந்து கொள்கிறார். பிறகு பழனிச்சாமியை திட்டிக்கொண்டே தண்ணீர் குடிக்க பாட்டில் எடுக்க அங்க தண்ணீர் இல்லாததால் கீழே வருகிறார்.

கீழே பாக்கியா பட்டுப்புடவையில் தலை நிறைய பூ வைத்து காலையில் இருந்த மாதிரியே அதே மேக்கப் உடன் தூங்குவதை பார்த்து கோபி புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா எழுந்து கோபியை பார்த்து பயந்து கத்த நான்தான் நான்தான் என்று கோபி சொல்ல பாக்கியா கோபியை திட்டுகிறார்.
பிறகு மாடிக்கு மீண்டும் வந்த கோபி கட்டிலில் உட்கார்ந்து புலம்பி கொண்டிருப்பதை பார்த்து ராதிகா எழுந்து உட்கார்ந்து, கோபியையே பார்த்துக் கொண்டிருக்க திரும்பி பார்த்த கோபி ராதிகாவை பார்த்து அதிர்ச்சி அடைய உங்களுக்கு பாக்யாவுக்கு கல்யாணம் என்று சொன்னதை ஏத்துக்க முடியல. அதனால தான் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று ராதிகா திட்ட, என் மனச கிழிச்சு காட்டுனா கூட அதுல ராதிகா தான் இருக்கும் என்று கோபி சமாதானப்படுத்துகிறார்.
பிறகு அடுத்த நாள் காலையில் எல்லோரும் டிபன் சாப்பிட வர, அப்போ எல்லோரும் பாக்கியா பரிமாறிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் எழில் அமிர்தாவிடம் ஒரு காபி வேண்டும் என்று சொல்ல, அதைக் கேட்டு பாக்கியா நெஞ்சை பிடித்துக் கொண்டு ஐயோ நெஞ்சு வலிக்குது என்று கத்துகிறார். எழில், அமிர்தா இருவரும் பதறி போய் கேட்க, என்கிட்ட காபி கேட்ட என் பையன் கல்யாணத்துக்கு அப்புறம் மாறிட்டான் என்று பாக்கியா புலம்ப, இது நடிப்பு என்று எழில் கண்டுபிடித்து விடுகிறார்.
அதற்கு அமிர்தா இப்ப வந்த எனக்கு கூட தெரியும். நீங்க இந்த மாதிரி எல்லாம் தப்பா யோசிக்க மாட்டீங்கன்னு. உங்க பையனும் நீங்க இப்படி எல்லாம் நிஜத்தில் யோசிப்பீங்கன்னு நம்ப மாட்டாரு என்று சொல்ல, நான் எல்லாரும் ஈஸியா ஜட்ஜ் பண்ற மாதிரியா இருக்கேன் என்று பாக்கியா பாவமாக கேட்கிறார்.
அதைத்தொடர்ந்து அடுத்த நாள் காலையில் கோபி பழனிசாமி வீட்டிற்கு வர அங்கே பாடிகார்ட் வாசலில் நின்று கொண்டு இருக்க, அவர் மீது மோதி பிறகு நான் பழனிச்சாமியை பார்க்க வேண்டும் என்று சொல்ல, அவர் உள்ளே கூப்பிட்டுக்கொண்டு வருகிறார். பழனிச்சாமி ஆரம்பத்தில் வரவேற்று காபி குடிங்க என்று உபசரிக்க, ஆனால் கோபி எனக்கு அதெல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டு முகத்தைப் பார்த்து பேசுவதற்கு பயந்து திரும்பி நின்று பேசிக் கொண்டிருக்கிறார்.

நீங்க எதுக்கு என் மனைவி கிட்ட அடிக்கடி பேசுறீங்க? என்று கோபி கோபமாக கேட்க, அதற்கு பழனிச்சாமி யார் உங்கள் மனைவி நான் பார்த்தது இல்லையே என்று நக்கல் அடிக்கிறார். பிறகு பாக்யாவை தான் சொல்றேன், அவகிட்ட நீங்க எதுக்கு அடிக்கடி பேசுறீங்க என்று கேட்க, பழனிச்சாமி நாங்க கிளாஸ் ஒண்ணா படிக்கிறோம். மேலும் நாங்க ஃபிரண்ட்ஸ் அப்படி இருக்கும்போது பேசிக்காமல் எப்படி இருக்க முடியும் என்று எதிர் கேள்வி கேட்கிறார்.
சரி அதெல்லாம் இருக்கட்டும் பெண் பார்க்க எதுக்கு வந்தீங்க என்று கோபி மேலும் கேட்க ஒரு வீட்ல பொண்ணு இருந்தா பார்க்க வர தான் செய்வாங்க. அதுவும் அழகான பொண்ணு இருந்தா பார்க்கத்தான் செய்வாங்க என்று சொல்ல, கோபி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications