கோபிக்கு பழனிச்சாமி பற்றி தெரிய வந்த உண்மை.. மன்னிப்பு கேட்ட பாக்யா.. கோபத்தில் ராதிகா
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பழனிச்சாமி பொண்ணு பார்க்க வந்தது பாக்கியா இல்லை என்ற ரகசியம் தெரிஞ்சு சந்தோஷப்படுகிறார்.
கோபி பழனிச்சாமிடம் பேசியதற்கு பாக்யா மன்னிப்பு கேட்டதற்கு பழனிச்சாமி பெருந்தன்மையாக பேசுகிறார்.
பாக்யாவிற்கு திருமணம் இல்லை என்பதை தெரிந்த கோபி சந்தோஷப்பட்டதை பார்த்து ராதிகா கோபத்தில் சண்டை இடுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ஜூன் 19ஆம் தேதிக்கான எபிசோட்டில் ஆரம்பத்தில் பழனிச்சாமி பொண்ணு பார்க்க வந்த விஷயத்தை பற்றி கோபி, ஈஸ்வரியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது இதெல்லாம் சரியில்லை வளர்ந்த பிள்ளைகளை வைத்துக்கொண்டு கல்யாணம் பண்றது தப்புன்னு நீங்க எனக்கு சொன்னீங்க. ஆனா நீங்க மட்டும் இப்போ இப்படி மாற்றி பேசலாமா என்று கோபி கேள்வி கேட்கிறார்.
அதைக்கேட்ட ஈஸ்வரி இதுல என்ன தப்பு இருக்கு பழனிச்சாமிக்கும் கல்யாணம் ஆகவில்லை, சந்திராவுக்கும் கல்யாணம் ஆகவில்லை. அதனால் அவர்கள் கல்யாணம் பண்றதுல என்ன தப்பு வரும்? இன்னும் அவங்க கல்யாணமே பண்ணல. அவங்களுக்கு எப்படி பிள்ளை வரும் என்று கேட்கிறார். இதை கேட்ட கோபி ஷாக் ஆகிறார்.
என்னது சந்திராவா அது யாரு? என்று கோபி கேட்க, அது உங்க அப்பாவோட தூரத்து உறவுக்கார பொண்ணு, அந்த பொண்ணை தான் பழனிச்சாமி பொண்ணு பார்க்க வந்தாரு என்று சொல்ல கோபி அதிர்ச்சியாகி சந்தோஷம் அடைகிறார்.பிறகு நானே இவங்க கல்யாணத்தை முன்னாடி நின்னு நடத்தி வைக்கிறேன் என்று சொல்ல அதைக் கேட்டு செழியனும் ஈஸ்வரியும் இவனுக்கு என்ன ஆச்சு என்று யோசித்து கொண்டு இருக்கின்றனர்.
பிறகு தனியா வந்த கோபி அப்பாடா பழனிச்சாமிக்கு நம்ம ஆளு கூட கல்யாணம் இல்லையா? அப்போ நம்ம ஆளு தப்பிச்சுட்டு என்று சொல்லி சந்தோஷமா டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து கோயிலுக்கு போயிட்டு வரும் ஈஸ்வரி இனியாவுக்கும் எழிலுக்கும் திருநீறு வைத்துவிட்டு பாக்யாவிடம் கொடுக்கிறார்.

பாக்யா அதை வாங்கிக் கொள்ள, இனியா எக்ஸாம் பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது ஈஸ்வரி இனியாவை உள்ளே வந்து படிக்க சொல்லி கூட்டிட்டு போகிறார். அதை தொடர்ந்து பழனிச்சாமி வீட்டிற்கு வரும் பாக்கியா பழனிசாமியின் அம்மாவிற்கு தான் கையால் செய்து சாப்பாட்டை கொடுத்து விட்டு பழனிசாமியிடம் கோபி பேசியதற்காக மன்னிப்பு கேட்கிறார்.
இனியா அப்பா இங்க வந்து பேசுனதுக்கு மன்னிச்சுக்கோங்க என்று சொல்ல, பழனிச்சாமி அவர் தப்பா எதுவும் பேசல உங்க வீட்டுக்கு வரக்கூடாது, உங்க கிட்ட பேச கூடாது என்று மட்டும் தான் சொன்னாங்க என்று சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications