பழனிச்சாமியை அசிங்கப்படுத்த கோபி செய்த செயல்.. இனியா கேட்ட கேள்வி.. பிரச்சனை செய்யும் ராதிகா அம்மா
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் வீட்டுக்கு வந்த பழனிச்சாமியை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக கோபி சூழ்ச்சி செய்கிறார்.
அதை புரிந்து கொண்ட பழனிச்சாமி தான் வந்த காரியத்தை பற்றி பாக்கியாவிடம் சொல்ல பாக்கியா இன்ப அதிர்ச்சி அடைகிறார்.
அதைத் தொடர்ந்து கோபியின் வீட்டிற்கு ராதிகாவின் அம்மாவும் அண்ணனும் குடும்பத்தோடு வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஜூன் 22 ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் பழனிச்சாமி இனியாவுக்கு எக்ஸாம் என்பதால் 4000 மதிப்புள்ள பேனாவை வாங்கிக் கொண்டு வந்து கொடுக்க அந்த பேனாவை பார்த்து இனியா ரொம்பவே சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். இதை பார்த்த கோபி கடுப்பாகி மனதிற்குள்ளே திட்டிக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே தானும் பேனா வாங்கி வைத்திருக்கும் நிலையில் எனக்கு முன்னாடி இவன் முந்திக்கிட்டானே, என்னுடைய பொண்ணு மனசையும் மாத்த பாக்குறானா? என்று கோபி மனசுக்குள்ளே திட்டியப்படி இனியாவை ஸ்கூலுக்கு டைம் ஆகிவிட்டது வா போகலாம் என்று கூப்பிட, பழனிச்சாமி மரியாதைக்காக கோபி இடம் வணக்கம் சார் என்று சொல்ல கோபியும் வணக்கம் என்று கூறுகிறார்.
அதைத்தொடர்ந்து இனியா பழனிசாமி தனக்கு வாங்கி தந்த பேனாவை கோபியிடம் சந்தோஷமாக காட்ட, அதை வாங்குவது போல வாங்கி கீழே போட்டு உடைத்து விடுகிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சியடைய இனியா கோபியை திட்டுகிறார். அதற்கு கோபி நான் தெரியாமல் செய்து விட்டதாக கூறி நானும் உனக்கு பேனா வாங்கி வைத்திருக்கிறேன் என்று கூறி புதிய பேனாவை கொடுக்கிறார்.
அந்த பேனாவை பார்த்து இனியா சந்தோஷப்பட்டு பிறகு அனைவரிடமும் சொல்லிவிட்டு ஸ்கூலுக்கு கிளம்புகிறார். அந்த நேரத்தில் காரில் ஏறும் போது கோபி இனியா விடம் இனிமேல் யார் எது தந்தாலும் வாங்க கூடாது என்று அட்வைஸ் கொடுக்கிறார். அதற்கு இனியா எதற்காக இப்படி சொல்றீங்க என்று கேள்வி கேட்க, கோபி இல்ல அது மேனஸாக இருக்காது என்று கூறி சமாளித்து இனியா மனசை மாத்த பார்க்கிறார்.
அதைத்தொடர்ந்து பழனிச்சாமிடம் நடந்ததுக்காக பாக்யா மன்னிப்பு கேட்கிறார். பழனிச்சாமி அதற்கு பரவாயில்லை என்று சமாளித்துவிட்டு நான் வந்தது இங்கே இரண்டு விஷயத்துக்காக தான். ஒன்று இனியாவுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு பேனா கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், இன்னொன்று ஒரு கல்யாணம் ஆர்டர் வந்து இருக்கு 5000 பேருக்கு சமைக்கணும் என்று சொல்ல, பாக்கியா 5000 பேருக்கு சமைக்கணுமா. அப்படி என்றால் அங்கேயே தங்கி சமைக்கணுமே.

இப்போதைய சூழ்நிலையில் வீட்டில் இருக்கிறவர்களை விட்டுட்டு அப்படி போறது எனக்கு ரொம்பவே கஷ்டம், அதுபோல என் கூட இருக்கவங்களும் அவங்க குடும்பத்தை விட்டுட்டு வரணுமே இந்த ஆர்டர் வேண்டாம். இனியாவிற்கு எக்ஸாம் வேற இருக்கு நான் எந்த நேரத்தில் அவ கூட இருக்கணும் என்று சொல்ல அதற்கு பழனிச்சாமியும் சரி என்று கூறுகிறார்.
அதைத் தொடர்ந்து ஈஸ்வரியும் ஜெனியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ராதிகாவின் அம்மா ராதிகாவின் அண்ணனையும், அண்ணியையும் கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வருகிறார். இவர்களைப் பார்த்த ஈஸ்வரி கடுப்பாகி என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறார்.
அப்போது கோபியையும் ராதிகாவையும் கூப்பிட்டு வச்சு ராதிகாவின் அம்மா ராதிகாவின் அண்ணன் அண்ணியிடம் இது நம்ம மாப்பிள்ளையோட வீடு தான். மாப்பிள்ளை வீடுன்னா வேற யாரோ வீடு இல்ல இது நம்ம மாப்பிள்ளையோட பெயரில் இருக்கிற வீடு என்று ஈஸ்வரியை வெறுப்பேற்றும் விதமாக பேசிக் கொண்டிருக்க, கோபமான ஈஸ்வரி நிறுத்து என்று திட்டுகிறார். அதைப் பார்த்த ஜெனி ஈஸ்வரியை சமாதானப்படுத்துகிறார். அவர்கள் மாடிக்கு சென்று விடுகிறார்கள்
அதைத்தொடர்ந்து கிச்சனில் பாக்கியா சமையல் செய்து கொண்டிருக்கும் போது ராதிகா எனக்கு கெஸ்ட் வந்து இருக்காங்க கிச்சனை கொஞ்சம் விட முடியா? என கேட்க, நாங்களும் சமைத்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று ஈஸ்வரி ராதிகாவை கண்டமேனிக்கு திட்டுகிறார். இந்த நேரம் ராதிகாவின் அம்மா கீழே வந்து போலீஸ் சொன்னதெல்லாம் உங்களுக்கு நினைவில்லையா? என்று ஈஸ்வரியை மிரட்டுகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications