குழந்தையை வைத்து பிரச்சனை செய்யும் ஈஸ்வரி..கோபிக்கு விழுந்த அடி.. கண் கலங்கும் அமிர்தா
சென்னை: எழில் மற்றும் அமிர்தா சீக்கிரமாக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஈஸ்வரி திட்டுகிறார்.
அமிர்தாவுக்கு சப்போர்ட்டாக பேசிய பாக்கியாவை ஈஸ்வரி திட்டுவதை பார்த்து ராதிகா சந்தோஷப்படுகிறார்.
பிறகு ராதிகா இனியா முன்னாடியே கோபியை அடித்து விடுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மே 3ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் அனைவரும் ஹாலில் உட்கார்ந்து இருக்க நிலா பாப்பா டான்ஸ் ஆடி கொண்டிருப்பதை பார்த்து எல்லோரும் சந்தோஷப்பட்டு ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது ஈஸ்வரி கல்யாணம் ஆகி அஞ்சு மாசம் ஆகிட்டு இன்னும் எதுவும் விசேஷம் இல்லையா என்று கேட்க, நீங்க மார்டன் பாட்டின்னு நினைச்சேன் ஆனா இப்படி கேக்குறீங்களே? என ஜெனி சொல்ல, அப்படி எல்லாம் இல்ல கல்யாணம் முடிஞ்சா இதை எல்லாரும் எதிர்பார்க்கிறது தான். கண்டிப்பா எழிலுக்கும் அமிர்தாவுக்கும் ஒரு குழந்தை வேணும் என்று சொல்ல எழில் எனக்கு தான் நிலா பாப்பா இருக்காளே என்று சொல்கிறார்.
என்னதான் இருந்தாலும் உனக்கு அமிர்தாவுக்கும் ஒரு குழந்தை பிறக்கணும். உங்க ரெண்டு பேருக்கும் ஒரு குழந்தை இருந்தா தான் உங்களுக்குள்ள ஒரு அன்பு அதிகரிக்கும் என்று ஈஸ்வரி சொல்ல, அமிர்தா முகம் சோகமாக மாறுகிறது. பிறகு நான் ரூமுக்கு போகிறேன் என்று அமிர்தாவும் கிளம்பி போய்விட ஈஸ்வரியும் தனியாக ரூமுக்கு போகிறார்.
ஈஸ்வரி இடம் பாக்கியா அத்தை நீங்க இப்படி பேசி இருக்க கூடாது. அந்த பொண்ணு முகம் வாடி போச்சு. குழந்தை பெத்துக்கிறது அவங்களோட இஷ்டம் அதை நம்ம இப்பவே சொல்ல கூடாது. அவங்க கொஞ்ச நாள் சந்தோஷமா இருந்துட்டு போகட்டும் என்று சொல்ல, நீ அமிர்தாவுக்கு சப்போர்ட்டுக்கு வரியா என்று ஈஸ்வரி பாக்யாவை திட்டி விடுகிறார். இதை எல்லாம் வெளியே இருந்து ராதிகா பார்த்து கொண்டிருக்கிறார்.
ரூமை விட்டு வெளியே வந்த பாக்யாவை பார்த்து ராதிகா நக்கலாக சிரித்தபடி இதுவரைக்கும் என் மருமக தான் இந்த உலகத்திலே ரொம்ப நல்லவன்னு பேசிட்டு இருந்த உங்க மாமியாரே உங்களை இன்னைக்கு திட்டிட்டாங்க என்று கிண்டல் செய்து கொண்டிருக்க, அப்போது அங்கே வரும் ஈஸ்வரி நீ இவ்வளவு நேரமா வேலை பார்த்தது போதாதா? இப்பவும் வேலை பார்க்கணுமா? போய் படு இதை காலையில் பார்த்துக்கொள்ளலாம். உடம்பை கெடுத்துக்காத என்று பாக்கியாவுக்கு ஆதரவாக பேசிவிட்டு போகிறார்.

பிறகு பாக்கியா பாத்தீங்களா? இதுதான் எங்க அத்தை. அவங்க கிட்ட கோபமும் இருக்கும், பாசமும் இருக்கும் அவங்களுக்கு எப்படி காட்டணும்னு தெரியாது. மனசுல பட்டதை உடனே பேசிடுவாங்க. எனக்கு இந்த குடும்பத்தில் இந்த உரிமையும் பாசமும் இருக்கு அது போதும். ஆனால் உங்களுக்கு தான் எதுவுமே இல்லை என்று அவமானப்படுத்திவிட்டு செல்கிறார்.
அதே நேரத்தில் கோபி இனியாவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க மயூ எனக்கு தூக்கம் வருகிறது என்று சொல்ல, பக்கத்திலே படு என்று கோபி சொல்ல மயூ படுத்துகிறார். லைட் ஆப் பண்ண வேண்டாமா என்று ராதிகா கேட்க, நாங்க படிச்சிட்டு இருக்கோம்லா, படிப்பு தான் முக்கியம் என்று சொல்ல, ராதிகா படுத்து தூங்குவது போல நடித்து கோபியை அடித்து விடுகிறார்.
கோபி வலியில் துடித்தபடி கத்தி விட, பிறகு ராதிகா தெரியாம கைப்பட்டு விட்டது என்று சொல்ல, கோபிக்கு ராதிகா தன்மீது கோபத்தில் இருப்பது புரிந்து விடுகிறது இப்படி மாட்டிக்கிட்டியே கோபி என்று தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி போட்ட பிளான்.. செக் வைத்த ரோகிணி! அடித்து விரட்டிய மீனா! சந்தோஷத்தில் முத்து -
சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு நடந்த நிச்சயதார்த்தம்.. விஜயாவை சிக்க வைத்த ஸ்ருதி.. முத்துக்கு தெரிந்த விஷயம் -
இதுவும் கடந்து போகும்.. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் மறுபக்கம்.. நீயா நானாவில் கண் கலங்கிய அம்மா -
பரிதாப நிலையில் “எங்கேயும் காதல்” பட பாடகர்.. கேபிஒய் பாலா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.. கலங்க வைத்த காட்சி -
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications