ஆரம்பத்தில் செய்த உதவிக்கு நன்றி கூறிய பாக்கியா.. மனம் மாறிய ராதிகா.. அவமானப்படுத்தும் ஈஸ்வரி
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபி இனியா இனி தன்னோடு வரமாட்டாரோ என்று பயந்து கொண்டு இருக்கின்றனர்.
தன்னை அவமானப்படுத்திய ராதிகாவிடம் இங்கிலீஷில் பேசி பாக்கியா ராதிகாவுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.
அமிர்தாவின் குடும்பத்தினரை ஈஸ்வரி அனைவர் முன்னிலையிலும் அசிங்கப்படுத்துகிறார்.

தவிக்கும் கோபி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 10ஆம் தேதிக்கான எபிசோடு ஆரம்பத்தில், பாக்கியா கேன்டீன் திறப்பு விழாவில் எல்லோரும் விளக்கேற்ற ராதிகா இதை பார்த்து அப்சட் ஆகிறார். அதே நேரத்தில் கோபி தனது நண்பரிடம் இனியா திறப்பு விழாவுக்கு போனது பற்றி புலம்பிக் கொண்டிருக்கிறார். இனியா தன்னோடு வராமல் தன்னை விட்டு போய் விடுவாளோ என்று பயமாக இருக்கிறது. என் போனை கூட எடுக்க மாட்டேங்குற, இனியா இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று கூறுகிறார்.

அதிர்ச்சி கொடுத்த இனியா
ஒரு கட்டத்தில் இனியா போனை எடுக்க கோபி நான் வந்து உன்னை கூட்டி போகிறேன் என்று சொல்ல, அதற்கு இனியா வேண்டாம் நான் இவங்களோட வீட்டுக்கு போயிட்டு அப்புறமா வரேன் என்று சொல்லி போனை வைத்து விடுகிறார். இதனால் அதிர்ச்சியாகும் கோபி மீண்டும் நண்பரிடம் புலம்பிக்கொண்டே இருக்கிறார். அதே நேரத்தில் தனியாக நின்று கொண்டிருக்கும் ராதிகாவிடம் பாக்யா வந்து பேசுகிறார்.

நன்றி கூறிய பாக்கியா
பாக்கியா ராதிகாவிடம் பங்க்ஷனுக்கு வந்ததற்கு நன்றி கூறி, நான் இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு முக்கியமான காரணம் நீங்கள் தான் என்று கூறுகிறார். அதற்கு ராதிகா அதிர்ச்சியாக நான் கேட்டரிங் ஆரம்பிக்கும் போது தனக்கு மிஷின் வாங்க பணம் கொடுத்த விஷயத்தை சொல்லி நன்றி கூறுகிறார். அதற்கு நீங்க நடிக்கிறீங்களா? என்று ராதிகா கேட்க, நான் எதுக்கு நடிக்கணும் உண்மையை தான் சொல்கிறேன். நான் என்றைக்கும் நன்றி மறக்க மாட்டேன் என்று கூறுகிறார்.

சமாதானம் செய்யும் பாக்யா
அப்போது எனக்கு ஒன்னு மட்டும் புரியல கோபி உங்கள விட்டுட்டு வந்துட்டாரு. ஆனா அவருடைய குடும்பம் மொத்தமும் உங்க கூடவே இருக்கிறது. இது எப்படி உலகத்துல எங்கேயும் இது மாதிரி நடக்காது என்று ராதிகா கேட்க, அதற்கு பாக்கியா நான் 25 வருஷமா அவங்க கூட வளர்ந்துட்டேன். அவங்களால என்ன பிரிஞ்சு போக முடியாது என்னால் அவங்கள பிரிஞ்சு இருக்க முடியாது. அதுதான் உண்மை என்று கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது சாப்பிட வாங்க என்று பாக்கியா ராதிகாவை கூப்பிட ராதிகா சாப்பிடாமல் கிளம்ப ரெடி ஆகிறார்.

வெறுப்பாகும் ராதிகா
அப்போது கோடீஸ்வரன் வந்து சாப்பிடுங்க ராதிகா என்று கூப்பிட ராதிகா மறுப்பு சொல்ல முடியாமல் வந்து சாப்பிடுகிறார். சாப்பாடு அருமையாக இருக்கிறது என்று பாக்யாவை பாராட்டியபடியே கோடீஸ்வரன் இந்த சாப்பாடு நீங்க மிஸ் பண்ண பாத்துட்டீங்க என்று கூறுகிறார். ராதிகாவும் வேறு வழி இல்லாமல் சாப்பிடுகிறார். அப்போது பாக்கியா குடும்பத்தோடு சந்தோஷமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கடுப்பாகி ராதிகா எழுந்து செல்ல, அப்போது ராதிகாவிடம் எப்படி இங்கிலீஷில் பேச வேண்டும் என்று ஜெனி மற்றும் அதில் அமிர்தாவிடம் பாக்கியா கேட்டுக் கொண்டிருக்க ஜெனி பல வார்த்தைகளை சொல்லிக் கொடுக்கிறார் .

ராதிகாவுக்கு கிடைத்த பதிலடி
அடுத்ததாக பாக்யா, ராதிகாவுக்கு ரோஸ் கொடுத்து இந்த ஃபங்ஷனுக்கு வந்ததற்கு நன்றி. இன்றிலிருந்து நல்ல டேஸ்டியான சாப்பாடு உங்களுக்கு கிடைக்கும் என இங்கிலீஷில் சொல்லி வியக்க வைக்கிறார். அதோடு இங்கிலீஷ் ஒரு லாங்குவேஜ் தான் அது இல்லாம என்னால் பிசினஸ் பண்ண முடியும். ஆனால் எப்போ ஒருத்தர் நமக்கு தெரியாத விஷயத்தை வைத்து நம்மளை அடிக்க முயற்சி பண்றாங்களோ அப்ப அவங்களுக்கு அதற்கான வாய்ப்பு கொடுக்ககூடாது. நான் இங்கிலீஷ் கத்துகிறேன் என்று சொல்கிறார். இதை பார்த்து அதிர்ச்சியான ராதிகா பாக்யா கொடுத்த பூவை வாங்கி குப்பை தொட்டியில் போட்டு விட, பாக்கிய பீல் பண்ணுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications