பாக்கியா கொடுத்த ஷாக்கில் ஓடிய ராதிகா.. கோபத்தில் ஈஸ்வரி எடுத்த முடிவு..? பாராட்டும் பழனிச்சாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா இனியாவை திட்டியதை கேட்டு ஈஸ்வரி ராதிகா மீது கோபத்தில் இருக்கிறார்.

பாக்கியா சுடிதார் போட்டு கொண்டு வந்து ராதிகாவுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.

நிலா பாப்பாவின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக பாக்கியா தன்னுடைய நண்பர்களை வீட்டிற்கு அழைத்திருக்கிறார்.

குவியும் புகைப்படங்கள்

குவியும் புகைப்படங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மார்ச் 24ஆம் தேதிக்கான எபிசொட்டின் ஆரம்பத்தில் பாக்யா சுடிதாரில் கீழே இறங்கி வர ஈஸ்வரி, செழியன் என எல்லோரும் பாக்கியாவை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். பிறகு எழில் போட்டோவை எடுக்க பாக்யா செல்வியோடு சேர்ந்து பல போஸ் கொடுத்து பல புகைப்படங்களை எடுத்துக்கொண்டு ஆபீசுக்கு கிளம்புகின்றனர்.

ராதிகாவை திட்டும் ஈஸ்வரி

ராதிகாவை திட்டும் ஈஸ்வரி

பாக்கியா வெளியே சென்ற பிறகு ராமமூர்த்தி முகம் அசந்து போய் இருப்பதை கவனித்த ஈஸ்வரி என்ன ஆச்சு அங்க வீட்டில் ஏதேனும் பிரச்சனையா? என்று கேட்க ராதிகா வீட்டில் நடந்த விஷயங்களை ராமமூர்த்தி சொல்கிறார். இனியா அந்த சரண் பையன் உடன் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை பார்த்து ராதிகா தனக்கு தான் உரிமை இருக்கிறது என்று திட்டிக் கொண்டிருக்கிறார். என்று சொல்ல அவ யாரு இனியாவை கண்டிக்க, இனியாவை கண்டிக்க அவ அம்மா இருக்கா. நீங்க இனியாவை கூட்டிட்டு இங்க வந்துடுங்க என்று சொல்கிறார்.

ராதிகாவுக்கு கிடைத்த ஷாக்

ராதிகாவுக்கு கிடைத்த ஷாக்

அதற்கு ராமமூர்த்தி அப்படியெல்லாம் கூட்டிட்டு வர முடியாது. இனியாவா மனம் மாறி இங்கே வரணும் என்று கூறுகிறார். பிறகு ராதிகா கேண்டீனுக்கு வந்து பார்க்கிறார் அப்போ அங்கே யாரும் இல்லாமல் இருக்க சுடிதார் போட சொன்னதும் என் முன்னாடி அசிங்கப்பட வேணான்னு சொல்லாம கொள்ளாம ஓடிட்டாங்க போல என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஒவ்வொருத்தராக சுடிதாரில் அங்கே வந்து ஷாக் கொடுக்கின்றனர்.

மிரட்டும் செல்வி

மிரட்டும் செல்வி

செல்வி திடீரென்று ராதிகாவின் பின்னாடி இருந்து குதிக்க, ராதிகா பயப்படுகிறார்.... பிறகு எனக்கு ரொம்ப நாளா சுடிதார் போடணும்னு ஆசை, ஆனா யாராச்சும் ஏதாவது சொல்லுவாங்கன்னு போடாம இருந்தேன். ஆனா உங்களால போட்டுட்டேன் ரொம்ப தேங்க்ஸ் மேடம் என்று சொல்ல, ராதிகா டென்ஷன் ஆகிறார். அதன் பிறகு நாங்கள் எல்லோரும் சுடிதார் போட்டுட்டோம் அக்கா தான் பாவம். நான் போட மாட்டேன் என்று கூச்சப்பட்டுட்டு இருக்கு. அதுக்காக நீங்க கேண்டின் காண்ட்ராக்டை கேன்சல் பண்ணிடாதீங்க ப்ளீஸ் என்று ராதிகாவிடம் கெஞ்சுகிறார்.

ஏமாந்த ராதிகா

ஏமாந்த ராதிகா

இப்ப கூட அக்கா உங்களுக்கு பயந்துகிட்டு தான் ஒளிஞ்சிகிட்டு இருக்கு என்று செல்வி சொல்ல, ராதிகா செல்வி சொன்னதை நம்பி பாக்கியா புடவைய்ல் தான் வருவார் என்று எதிர்பார்த்து இருக்கிறார். அப்போது மறைந்திருந்த பாக்யா அங்கே சுடிதாரில் வந்து ஷாக் கொடுக்கிறார். ராதிகா அருகே வந்த பாக்கியா எப்படி இருக்கு மேடம் என கேட்க, ராதிகா கோபத்தில் தவிக்கிறார். சுடிதார் போட சொன்னா இவங்க கேண்டினை விட்டுட்டு ஓடிடுவாங்கன்னு நினைச்சீங்க ஆனா நாங்க ஓடல என பதிலடி கொடுக்கிறார்.

ஓடவைத்த பாக்கியா

ஓடவைத்த பாக்கியா

பிறகு பாக்கியா வாக்கிங் போகும் போது, சுடிதார் போட்டுட்டு போறவங்க ஈஸியா நடந்து போவாங்க. எனக்கும் ஆசையா இருக்கும். ஆனா எங்க வீட்ல அதெல்லாம் போட முடியாது. ஏன்னா எங்க அத்தை ரொம்ப ஸ்ட்ரீட். ஆனா நீங்க சுடிதார் போட சொன்னதும் அதை அவங்க கிட்ட சொன்னதும் டக்குனு ஓகே சொல்லிட்டாங்க. ரொம்ப தேங்க்ஸ் மேடம் என்று சொல்லி ராதிகாவை வெறுப்பேத்துகிறார். அதுமட்டுமல்லாமல் அடுத்து எங்களுக்கு வேற என்ன டாஸ்க் கொடுக்கலாம் என்று யோசிங்க நீங்க சொல்ற விஷயத்தால் எங்களுக்கு நல்லது நடந்தா சந்தோஷம் தான என்று சொல்கிறார். பாக்கியா பேசியதை கேட்டு கடுப்பான ராதிகா பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து ஓடுகிறார்.

மாஸ் காட்டிய பாக்யா

மாஸ் காட்டிய பாக்யா

அதற்குப் பிறகு பாக்யா ஞாபக மறதியில உடை மாற்றாமல் நேராக ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் வந்துவிட அவரை சுடிதாரில் பார்த்து அனைவரும் அசந்து போய் பாராட்டுகின்றனர். பழனிச்சாமி என்ன பாக்யா மேடம் பொண்ணு மாதிரி வந்து உட்கார்ந்துட்டு இருக்கீங்க என்று கேட்க பாக்கியா வெட்கப்படுகிறார். பிறகு எழுந்து போய் நின்று எல்லோரிடமும் இன்னைக்கு ஈவினிங் என்னுடைய பையனோட பொண்ணுக்கு பர்த்டே செலப்ரேஷன் வச்சிருக்கோம். நீங்க எல்லோரும் கண்டிப்பா வரணும் என்று அழைப்பு வைக்கிறார். அங்கிருந்த சிலர் என்னது உங்களுக்கு மூணு வயசுல பேத்தி இருக்காங்களா? என்று வியப்பாக கேட்கின்றனர். அதற்கு பாக்யா சிரித்தபடியே ஆமாம் எல்லோரும் வந்துடுங்க என சொல்ல, கண்டிப்பாக வருவோம் என்று பழனிசாமியும் கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+