வீம்பு பிடிக்கும் செழியன்... ராதிகா செய்யும் சூழ்ச்சி.. ஈஸ்வரியால் பாக்யாவுக்கு கிடைக்கும் அதிர்ச்சி

ஈஸ்வரி கேட்டரிங் திறப்பு விழாவிற்கு நான் வரமாட்டேன் என்று ஈஸ்வரி உறுதியாக கூறிக் கொண்டிருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியா தன்னுடைய கேட்டரிங் திறப்பு விழாவிற்கு அனைவரையும் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

பாக்யாவின் கேட்டரிங் திறப்பு விழாவிற்கு ஈஸ்வரி நான் வரமாட்டேன் என்று கூறி பாக்யாவிற்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.

செழியனும் நானும் வரமாட்டேன் என்று சொல்ல அதற்கு ஜெனி, செழியனை மிரட்டுகிறார்.

கோபப்படும் ஈஸ்வரி

கோபப்படும் ஈஸ்வரி

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசொட்டின் ஆரம்பத்தில் பாக்யா தன்னுடைய கேட்டரிங் திறப்பு விழாவை ஞாயிற்றுக்கிழமை வைத்துக் கொள்ளலாம் என்று வீட்டில் அனைவரிடமும் சொல்லிக் கொண்டிருக்க, அவருடைய மாமனார் சரி என்று சொல்ல ஈஸ்வரி அதற்கு நீயே முடிவு பண்ணிட்டியா? நான் வரமாட்டேன் என்று கோபப்படுகிறார்.

ஈஸ்வரியின் பிடிவாதம்

ஈஸ்வரியின் பிடிவாதம்

பாக்கியா கேட்டரிங் திறப்பு விழாவில் மாமா நீங்க ஒரு விளக்கு ஏத்தணும், அத்தை ஒரு விளக்கு ஏத்தணும், ராஜசேகர் சார் ஒரு விளக்கு ஏத்தணும், பிறகு எனக்கு கேட்டரிங் ஆர்டர் தந்த எம்டி ஒரு விளக்கு ஏத்தணும் என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி நான் வரமாட்டேன். என்னை வச்சு எதுவும் பிளான் பண்ணிக்காதீங்க என்று கோபத்தோடு கூறுகிறார். அதற்கு பாக்கியா நீங்க இல்லாம எப்படி அத்தை என்று வருத்தப்படுகிறார். அப்போது ராமமூர்த்தி அவ வருவ நீ அமைதியா இருமா என்று சொல்கிறார். ஈஸ்வரியின் எதிரே இருந்த அமிர்தா ஈஸ்வரியை சமாதானம் செய்ய அதற்கு ஈஸ்வரி மேலும் கோபப்பட்டு அமிர்தாவை திட்டுகிறார்.

ராதிகாவுக்கு பல்பு

ராதிகாவுக்கு பல்பு

அடுத்ததாக ராமமூர்த்தி கோபியின் வீட்டிற்கு வந்து இனியாவிடம் உன்னுடைய அம்மா நாளைக்கு கேட்டரிங் திறப்பு விழா வச்சிருக்காங்க என்று சொல்ல, அதைக் கேட்டு ராதிகா ஷாக் ஆகி பிறகு தன்னுடைய எம்டிக்கு போன் போட்டு ஓப்பனிங் பங்க்ஷன் நடக்கப்போவது உங்களுக்கு தெரியுமா? என்று கேட்க அவர் ஆமாம் உங்களையும் கூப்பிட்டார்களா? என்று கேட்டு ராதிகாவுக்கு அதிர்ச்சி கொடுக்க, இல்லை சார் இதற்கு முன்பு இப்படி நடந்தது இல்லை. இது எதற்காக? இப்படி எல்லாம் செய்ய வேண்டும். அங்கே கூட்டம் கூடினால் நன்றாக இருக்காது என்று ராதிகா சொல்ல, அது அவங்களோட விருப்பம் அவங்க செஞ்சுட்டு போகட்டும் என்று எம்டி கூற ராதிகா கடைசியில் ஏமாற்றம் அடைகிறாள்.

ராஜசேகரின் பாராட்டு

ராஜசேகரின் பாராட்டு

அடுத்து இனியா பங்ஷனுக்கு என்ன டிரஸ் போட்டுகிறது என்று தாத்தாவிடம் பேசிக் கொண்டிருக்க அப்போது கோபி நீ எல்லாம் போக வேண்டாம் என்று கூறுகிறார். அதற்கு இனியா ஞாயிற்றுக்கிழமை தானே டாடி, நான் போயிட்டு வருகிறேன் என்று சொல்லி சமாதானம் செய்தாலும், கோபி முடியாது நீ போகக்கூடாது என்று உறுதியாக கூறுகிறார். அதே நேரத்தில் பாக்யா ராஜசேகருக்கு நேரில் சென்று அழைப்பு கொடுக்கிறார். அவர் தொடர்ந்து பாக்கியாவை பாராட்ட அதற்கு எல்லாம் காரணம் நீங்க தான் என்று பாக்யா ராஜசேகர் இடம் சொல்ல, இல்லை உங்களுடைய திறமையினால் நீங்கள் ஜெயித்திருக்கிறீர்கள். நீங்கள் இன்னும் வெற்றி பெறுவீர்கள் என்று பாராட்டி, நான் வருகிறேன் என்று அனுப்பி வைக்கிறா

ஃபங்ஷனுக்கு அழைப்பு

ஃபங்ஷனுக்கு அழைப்பு

அடுத்ததாக பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசில் டீச்சர் கேட்கும் கேள்விகளுக்கு ஓரளவு பதில் சொல்ல, பழனிச்சாமி பாக்கியாவை பாராட்டுகிறார். பிறகு தான் கொண்டு வந்த அதிரசத்தை அங்கிருக்கும் அனைவருக்கும் கொடுத்துவிட்டு தன்னுடைய கேட்டரிங் திறப்பு விழாவிற்கு அனைவரும் வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார். அனைவரும் நாங்கள் கண்டிப்பாக வருவோம் என்று கூறுகிறார்கள்.

மிரட்டும் ஜெனி

மிரட்டும் ஜெனி

அடுத்த நாள் காலையில் திறப்பு விழாவிற்காக அனைவரும் கிளம்பி கொண்டு இருக்க அப்போது செழியனிடம் பாக்கியா நீ வரவில்லையா? என்று கேட்க, அதற்கு செழியன் என்னிடம் யாரும் சொல்லவில்லை என்று சொல்ல, ஜெனி நான்தான் உன்னிடம் சொன்னேனே என்று சொல்ல, பிறகு பாக்யா நான் சொல்லிருக்க வேண்டும் நேற்று வேலையில் மறந்து விட்டேன். நீ கண்டிப்பா வரணும் என்று கூப்பிட, நான் வரமாட்டேன் என்று கோபமாக சொல்லிவிட்டு செழியன் சென்றுவிடுகிறார். பிறகு ஜெனி அவன் வருவான் நான் வர வைக்கிறேன் என்று பாக்கியாவிடம் சொல்லிவிட்டு, செழியனிடம் நீ வரவேண்டும் இது குழந்தையின் மீது சத்தியம் என்று சத்தியம் வாங்கி ஃபங்ஷனுக்கு வர சம்மதிக்க வைக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+