பாய்ண்ட் எடுத்துக் கொடுக்கும் பழனிச்சாமி.. மாஸ் காட்டும் பாக்கியா.. அடுத்தடுத்து அவமானப்படும் ராதிகா

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா முன்பு பாக்கியா இங்கிலீஷில் பேசி ராதிகாவை மிரள வைக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மார்ச் 7ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

இங்கிலீஷ் பேச தெரியவில்லை என்று அவமானப்படுத்திய ராதிகா முன்பு பாக்யா இங்கிலீஷில் பேசி மாஸ் காட்டுகிறார்.

கேட்டரிங் திறப்பு விழாவில் செய்த சூழ்ச்சிகள் எல்லாம் ராதிகாவுக்கு ஃபெயிலியர் ஆக மாறிவிட்டது.

பாக்கியாவிற்கு கிடைத்த வாய்ப்பு

பாக்கியாவிற்கு கிடைத்த வாய்ப்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவை விட்டு கோபி விலகி ராதிகாவை திருமணம் செய்து பிறகு பாக்கியா பல்வேறு போராட்டங்களை சந்தித்து வருகிறார். அடுத்தடுத்து வீட்டிலும், சமுதாயத்திலும் பல பிரச்சனைகள் பாக்யாவுக்கு வந்து கொண்டிருந்தாலும் தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக பாக்யா போராடிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது பாக்யாவிற்கு ராதிகாவின் ஆபீஸில் கேட்டரிங் ஆர்டர் கிடைத்திருக்கிறது. ஆர்டரை கேன்சல் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே ராதிகா முதல் முறை எம்டி இடம் கூறி அதை தடுத்து நிறுத்தி விட்டார்.

அவமானப்படுத்திய ராதிகா

அவமானப்படுத்திய ராதிகா

இந்த நிலையில் மீண்டும் ராதிகாவின் ஆபீஸில் உணவு பிரச்சினை ஏற்பட்ட நிலையில், எம்டி புதியதாக டெண்டர் விட வேண்டும் என்று கூறி அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, பாக்யா அந்த அதற்கு அப்ளை செய்து தற்போது டெண்டரையும் பிடித்திருக்கிறார். பாக்யாவிற்கு இந்த ஆர்டர் கிடைக்கக் கூடாது என ராதிகா எவ்வளவோ முயற்சிகள் செய்தார். ஆனால் அதை எல்லாம் எம்டி கேட்காத நிலையில் பாக்யாவை அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்த வேண்டும் என்று இங்கிலீஷில் கேள்வி கேட்டு இங்கிலீஷ் தெரியாமல் இவர் எப்படி இங்கே கேட்டரிங் நடத்த முடியும் என்று அவமான செய்தார்.

பழனிச்சாமியின் அறிமுகம்

பழனிச்சாமியின் அறிமுகம்

அந்த நேரத்தில் ராதிகாவின் எம்டி பாக்கியாவின் சமையல் திறமை தான் வேண்டும். அவருக்கு நன்றாக சமைக்க தெரிகிறது அதனால் அவருக்கே இந்த ஆர்டர் கொடுக்கிறேன் என்று கூறி ராதிகாவுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்தார். பாக்கியா அந்த இடத்தில் வெற்றி பெற்று இருந்தாலும், தான் இதை விட்டு விடக் கூடாது என்று நினைத்து ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் சேர்ந்து இருக்கிறார். தற்போது அங்கே பழனிச்சாமி கேரக்டரில் நடிகர் பசுபதி அறிமுகமாகி இருக்கின்ற நிலையில் பழனிச்சாமி பாக்கியாவின் ஒவ்வொரு முயற்சியையும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்.

அவமானப்படுத்தும் ஈஸ்வரி

அவமானப்படுத்தும் ஈஸ்வரி

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில், ஞாயிற்றுக்கிழமை கேட்டரிங் திறப்பு விழா வைத்திருக்கும் பாக்கியா தன்னுடைய ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசில் உள்ள அனைவரையும் அதற்கு அழைத்திருக்கிறார். அதுபோல தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அனைவரும் கேட்டரிங் திறப்பு விழாவிற்கு வந்திருக்கும் நிலையில், ராதிகாவும் அங்கே வந்திருக்கிறார். அங்கே வரும் ஈஸ்வரியை ராதிகா வாங்க அத்தை என்று வரவேற்க, நான் உன்னை பார்க்க வந்த மாதிரி நீ என்னை வரவேற்கா? நான் என்னுடைய மருமகள் கேட்டரிங் திறப்பு விழாவிற்கு வந்திருக்கிறேன் என்று அவமானம் செய்கிறார்.

மாஸ் பண்றீங்க பாக்யா

மாஸ் பண்றீங்க பாக்யா

அதைத்தொடர்ந்து பாக்யாவிடம் பழனிச்சாமி நீங்க போய் ராதிகாவிடம் இங்கிலீஷில் பேசுங்க என்று சொல்லி அனுப்ப, தைரியமாக ரோஜாவை கையில் எடுத்துக்கொண்டு பாக்கியா பழனிச்சாமி கொடுத்த தைரியத்தில் ராதிகாவிடம் ரோஸை நீட்டி, இங்கிலீஷில் வரவேற்பு செய்கிறார். இதை பார்த்து அதிர்ச்சியான ராதிகாவிடம், சொடக்கு போட்டு தெரியாத விஷயங்களை வச்சு ஒருத்தங்க நம்மள அடிக்கிறாங்கன்னா அவங்களுக்கு அந்த வாய்ப்பை கொடுக்கக்கூடாது. சரிதானே? என்று கெத்தாக பாக்கியா பேசியிருக்கிறார். இந்த பிரமோ தற்போது அதிகமான ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+