ஃபங்ஷனுக்கு வந்த கோபியை அவமானம் செய்த எழில்.. ராதிகாவை பற்றி வெளிச்சத்துக்கு வந்த உண்மை
பாக்யாவின் கேட்டரிங் திறப்பு விழாவிற்கு கோபி வந்து இருப்பதை பார்த்து ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.
சென்னை: பாக்யாவின் கேட்டரிங் திறப்பு விழாவிற்கு வந்த ராதிகாவை பாக்கியா வரவேற்று அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
இனியாவிற்காக கோபியும் பாக்யாவின் பங்க்ஷனுக்கு வந்திருக்கிறார்.
கோபியை ஃபங்ஷனில் பார்த்த ராதிகா கடுப்பாகி திட்டுகிறார்.

கோபிக்கு கிடைத்த அவமானம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மார்ச் 9ஆம் தேதிக்கான எபிசொட்டின் ஆரம்பத்தில் இனியாவின் வற்புறுத்தலினால் கோபி ராதிகாவின் கேட்டரிங் திறப்பு விழாவிற்கு வந்திருக்கிறார். அங்கே இனியாவை வரவேற்ற எழில் கோபியை பார்த்ததும் இவரை இங்கு யாரு கூப்பிட்டது.. எதற்காக இவர் வந்திருக்கிறார் என்று கேட்கிறார். அதற்கு டேய் குழந்தை என்னை யாரும் எங்க அழைக்கவும் இல்லை. நான் நீங்க அழைத்தாலும் வரவேண்டாம் என்று தான் இருந்தேன். என்னுடைய குழந்தை இனியாவிற்காக தான் இப்போது நான் இங்கே வந்து இருக்கிறேன் என்று கூறுகிறார். பிறகு இனியா நான் உள்ளே சென்று வருகிறேன் என்று கிளம்பி போய் விடுகிறார். கோபி தனியாக வெளியே நின்று கொண்டிருக்கிறார்.

மிரட்டும் ராதிகா
அதே நேரத்தில் சரியாக அங்கே வரும் ராதிகா என்ன கோபி இங்கே நிற்கிறீங்க என்று கேட்க? இனியா காரில் இருந்து குதித்து விடுவேன் என்று என்னை மிரட்டினாள் அதனால் தான் வந்தேன் என்று சொல்ல, நீங்க ஏன் வெளியே நிக்குறீங்க? நீங்களும் உள்ளே போங்க, ஏற்கனவே நான் யாரோட ஃபங்ஷனை பார்க்க கூடாது என்று நினைத்தேனோ அங்கேயே வந்து நிற்க வேண்டிய நிலைமை ஆயிடுச்சு, நீங்களும் வாங்க என்று கூறுகிறார். அடுத்ததாக கேட்டரிங் உள்ளே வந்த கோடீஸ்வரனை பாக்கியா அழைத்து சென்று அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறார்.

ராதிகாவின் சூழ்ச்சி தெரிந்து விட்டது
அடுத்ததாக உள்ளே வரும் ராதிகாவை பார்த்து அனைவரும் கோபப்பட பாக்யா மட்டும் ஓடி சென்று அவரையும் வரவேற்று அவருக்கு பொக்கே கொடுக்கிறார். ராதிகா வேண்டாம் என்று மறுத்தாலும் அவருக்கு இனிப்பு கொடுத்து இருக்கிறார். பிறகு அங்கே வரும் ராஜசேகரை வரவேற்று அனைவரிடமும் அறிமுகப்படுத்தி இருக்க, ராஜசேகர் கோடீஸ்வரனிடம் இவங்களுக்கு ஆர்டர் கொடுக்க உனக்கு இவ்வளவு நாளா என்று சொல்ல, அது நான் கொடுப்போம் என்று தான் சொன்னேன் ராதிகா தான் அதற்கு மறுத்துவிட்டார். எல்லாம் ராதிகாவால் தான் இப்படி ஆனது என்று அனைவர் முன்னிலையிலும் போட்டுக் கொடுக்க ராதிகா அதிர்ச்சி ஆகிறார்.

ஈஸ்வரி வந்தாச்சு
பிறகு கோடீஸ்வரன் எனக்கு வேறு ஒரு இடத்தில் பங்க்ஷன் இருக்கிறது இங்கே பங்க்ஷன் ஆரம்பிக்கலாமா? ஆரம்பித்து விட்டால் நான் கிளம்பி விடுவேன் என்று சொல்ல, பாக்கியா அப்போதும் ஈஸ்வரி வந்துவிடுவார் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார். அதே நேரத்தில் வீட்டில் தனியாக இருக்கும் ஈஸ்வரி நடந்த நிகழ்வுகளை எல்லாம் நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது அனைவரும் பங்க்ஷனை தொடங்குவோம் என்று சொல்ல அதே நேரத்தில் அங்கு ஈஸ்வரி வருகிறார்.

அவமானப்படுத்திய ஈஸ்வரி
வெளியே நின்று கொண்டிருந்த ராதிகா ஈஸ்வரியை வாங்க அத்தை என்று வரவேற்க, நான் உன்னை பார்க்க வந்த மாதிரி நீ என்னை வரவேற்கிற? நான் என்னுடைய மருமகள் கேட்டரிங் திறப்பு விழாவிற்கு வந்து இருக்கிறேன். நீ எதற்காக என்னை வரவேற்கிறா? இதை சாக்கா வச்சு என்கிட்ட வந்து பேசலாம்னு நினைக்கிறியா? அது நடக்காது என்று திட்டி விட்டு உள்ளே செல்கிறார். பிறகு அனைவரும் ஈஸ்வரியை பார்த்ததும் சந்தோஷப்பட்டு ஈஸ்வரியை விளக்கு ஏற்ற வைக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications