இனியாவுக்கு ப்ரொபோஸ் செய்த சரண்... பாக்கியா எடுத்த முடிவு.. மாட்டிக்கொண்டு தவிக்கும் கோபி

பாக்கியலட்சுமி செய்தியலில் இனியாவுக்கு சரண் ப்ரொபோஸ் செய்திருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவிடம் தான் காதலிப்பதாக சரண் கூற இனியா அதிர்ச்சி அடைகிறார்.

பாக்கியா புதியதாக இங்கிலீஷ் கத்துக்கலாம் என கிளாசுக்கு செல்ல இருப்பதாக எழிலிடம் கூறுகிறார்.

பாக்கியாவை புகழ்ந்து பேசி கோபி ராதிகாவிடம் சிக்கிக் கொண்டிருக்கிறார்.

இங்கிலீஷ் கத்துக்கோங்க பாக்யா

இங்கிலீஷ் கத்துக்கோங்க பாக்யா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் ஆபீஸில் நடந்த விஷயங்களை பற்றி யோசித்துக் கொண்டிருந்த பாக்யா எழிலிடம் நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்று சொல்ல, என்னவென எழில் கேட்க? நான் இங்கிலீஷ் கத்துக்கட்டுமா என கேட்க, எழில் தாராளமாக கத்துக்கலாம். இதுல என்ன இருக்கு நானே உனக்கு சொல்லித் தருகிறேன் என்று சொல்ல, அதுவெல்லாம் வேண்டாம் நான் கிளாசுக்கு போகிறேன் என்று பாக்கியா சொல்கிறார். அதற்கு எழில் தன்னுடைய மக்களை கூட நான் இதை பற்றி இன்னும் அமிர்தாவிடமும், ஜெனி இடமும் கூட கூறவில்லை என்று பாக்கியா கூறுகிறார்.

புலம்பும் ஈஸ்வரி

புலம்பும் ஈஸ்வரி

அடுத்ததாக ஈஸ்வரி தூங்கிக் கொண்டிருக்கும்போது, ராமமூர்த்தி நிலா பாப்பாவை தூக்கிக் கொண்டு வந்து ஈஸ்வரியை எழுப்புகிறார். நிலா பாப்பாவை பார்த்த ஈஸ்வரி இவளை எதற்கு ரூமுக்கு கூட்டிட்டு வந்தீங்க என்று திட்ட, பெரியவங்களுக்குள் ஆயிரம் பிரச்சனை இருக்கும். அதை குழந்தைகிட்ட காட்டாத என்று ராமமூர்த்தி சொல்ல, நிலா பாப்பா நான் போகிறேன் என்று அம்மா என அழைத்தபடியே அங்கிருந்து கிளம்பி விடுகிறது. இவளுக்கு இருக்கிற வீராப்பு அவ அம்மாவுக்கு இருந்தா இந்தப் பிரச்சினையே இல்லை. நான் நினைச்ச மாதிரி ஒரு கல்யாணம் கூட நடக்கல என்று ஈஸ்வரி புலம்பி கொண்டிருக்கிறார்.

நிலா உடன் விளையாடும் செழியன்

நிலா உடன் விளையாடும் செழியன்

அடுத்ததாக நிலா பாப்பா செழியன் போன் பேசிக் கொண்டிருக்கும் இடத்திற்கு வருகிறார். அங்கே பெரியப்பா விளையாடலாமா என்று கேட்க? செழியன் குழந்தையோடு விளையாடிக் கொண்டிருக்கிறார். தான் வாங்கி வந்த பொம்மையை வைத்து விளையாட்டு காட்டிக்கொண்டிருக்க அப்போது எழில் அங்கே வருகிறார். எழிலை பார்த்ததும் செழியன் அமைதியாக இரு என்று சொல்லி, அந்த இடத்தில் இருந்து லேசாக நழுவி செல்கிறார். எழில் இதை பார்த்து கிண்டல் செய்கிறார்.

ப்ரபோஸ் செய்த சரண்

ப்ரபோஸ் செய்த சரண்

அடுத்ததாக இனியா மற்றும் சரண் இருவரும் டியூஷன் முடிந்து நடந்து வரும் போது சரண் எங்க வீட்டுக்கு நாளைக்கு வா என்று இனியாவை கூப்பிட, நான் வரவில்லை என்று சொல்ல, அப்போ நான் நாளைக்கு உங்க வீட்டுக்கு வருகிறேன் என்று சரண் சொல்ல, அதுவும் வேண்டாம் இப்ப சூழ்நிலை சரியில்லை என்று சொல்கிறார். மீண்டும் இருவரும் அவர்களுடைய வீட்டை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது நாளைக்கு கண்டிப்பா எங்க வீட்டுக்கு நீ வரணும் என்று சரண் சொல்ல, அதுவெல்லாம் முடியாது என்று சொல்ல, ஓ முறைப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டு வரேன்னு சொல்றியா? என சரண் கேட்க, இனியா ஷாக் ஆகி என்ன சொன்ன என்று கேட்க? இல்ல சும்மா சொன்னேன். எல்லா முறைப்படி ஒவ்வொன்னா நடக்கணும் இல்ல! முதல்ல ப்ரபோஸ் பண்ணனும், அதுக்கு அப்புறம் லவ் பண்ணும், அதுக்கப்புறம் காலேஜ் போகணும், வேலைக்கு போகணும், அதுக்கப்புறம் தானே திருமணம் செய்து நீ எங்க வீட்டுக்கு வருவாய் என்று சொல்ல இனியா அதிர்ச்சியாகிறார். மேலும் சரண், அதனால் அப்போ நான் முதல் கட்டத்தில் உன்னிடம் இப்ப ப்ரொபோஸ் பண்ணவா என்று கேட்க, இந்த மாதிரி பேசாம வா இல்லன்னா நீ கெளம்பு நான் நடந்து வரேன் என்று சொல்ல, சரண் பேசாமல் வரேன் என்ன சொல்லி இருவரும் நடந்து வருகிறார்கள்.

மாட்டிக்கொண்ட கோபி

மாட்டிக்கொண்ட கோபி

அடுத்த செழியன் மேலே உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது தண்ணீர் இல்லாததால் ஜெனி இடம் தண்ணீர் கேட்டுக் கொண்டிருக்க அதற்கு ஜெனி திட்டிக்கொண்டே இருக்க அமிர்தா போய்க் கொண்டு குடுங்க என்று கூறிக் கொண்டிருக்கிறார். பிறகு ராதிகா கோபியிடம் பாக்யாவுக்கு கேண்டன் ஆர்டர் கிடைத்த விஷயத்தை சொல்ல, கோபி பாக்யா ஆரம்பத்தில் எப்படி இருந்தா? இப்போ இவ்வளவு மாறி இருக்கிறால் இவளுக்குள்ளும் திறமை இருக்கிறது என்று பாராட்டிக் கொண்டிருப்பதை பார்த்து ராதிகா கடுப்பாகி கோபியை திட்டி விட்டு செல்கிறார். பிறகு கோபி உனக்கு இதெல்லாம் தேவைதான். ராதிகாவுக்கு ஆறுதல் சொல்கிறேன் என்று வந்து என்ன செய்து வைத்திருக்கிறார் என புலம்புகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+