பாக்கியாவிடம் திருமணத்தைப் பற்றி பேசிய பழனிச்சாமி அம்மா..கோபிக்கு கிடைத்த அதிர்ச்சி..திடீர் திருப்பம்
சென்னை: கோபி பாக்கியாவை பழனிச்சாமி வீட்டில் பார்த்து அதிர்ச்சி அடைந்து சந்தேகப்படுகிறார்.
பழனிசாமியின் அம்மா பழனிச்சாமிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று பாக்கியாவிடம் வருத்தப்படுகிறார்.
பழனிச்சாமியின் அம்மாவின் பிறந்தநாளை பாக்கியா கிராண்டாக கொண்டாடலாம் என கூறுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இன் மே 10ஆம் தேதிக்கான எபிசோட்டில் பாக்கியா மற்றும் அவரது தோழி இருவரும் மூன்று நாட்களாக பழனிச்சாமி ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசுக்கு வராத நிலையில் என்ன ஆச்சு என்று தெரியாமல் குழம்பி போய் அவருக்கு போன் செய்து விசாரிக்கின்றனர்.
அப்போது பழனிச்சாமி அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று காரணத்தால் வரவில்லை என்று சொல்ல பாக்யாவும் அவரது தோழியும் பழனிச்சாமி வீட்டுக்கு செல்ல முடிவெடுத்து அவரிடம் அட்ரஸ் கேட்கின்றனர்.
பிறகு வீட்டிற்கு வந்த இருவரையும் பழனிச்சாமி வரவேற்று அம்மாவிடம் அழைத்துச் செல்ல, பழனிச்சாமிக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று அவருடைய அம்மா பாக்யாவிடம் வருத்தப்பட பாக்யா கண்டிப்பா கூடிய சீக்கிரம் நடக்கும் நீங்க திரும்ப எழுந்து நடப்பீங்க என்று தன்னம்பிக்கையாக பேசுகிறார்.

அடுத்ததாக பழனிச்சாமி இருவரையும் உட்கார வைத்து சாப்பாடு பரிமாறிக் கொண்டிருக்க, அப்போது அம்மா உடைய பிறந்தநாளுக்கு உங்க சொந்தக்காரங்க எல்லோரையும் கூப்பிடுங்க, உங்களுக்காக எவ்வளவு பேர் இருக்காங்க என்பது தெரிந்தால் அவங்க பாதி குணம் ஆயிடுவாங்க என்று ஐடியா கொடுக்க, இதுவும் நல்லாதான் இருக்கு என்று பழனிச்சாமி அப்படியே செய்வதாக கூறுகிறார்.
பிறகு இருவரும் வீட்டுக்கு கிளம்ப பாக்யாவின் தோழி பேக்கை உள்ளேயே வச்சுட்டேன் என அதை எடுத்துட்டு வர உள்ளே வருகிறார்கள். பாக்யா மற்றும் பழனிச்சாமி என இருவரும் வாசலில் நின்று சிரித்து பேசிக் கொண்டிருக்க அப்போது அந்த வழியாக கோபி வருகிறார்.
பாக்கியாவும் பழனிச்சாமியும் பேசுவதை பார்த்து அதிர்ச்சியான கோபி இதுதான் இவனுடைய வீடா? அப்போ பாக்கியா இங்க தான் அடிக்கடி வந்துட்டு போறாளா? எல்லாரும் கோபி தப்பு பண்றாங்க, ஆனா பாக்கியா தப்பு பண்றது இல்லை என்று சொல்றாங்க ஆனால் பாக்கியா பண்ற தப்பு எதுவும் வெளியே தெரிய மாட்டேங்குது என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications