முற்றிய ராதிகா, கோபி சண்டை.. உடைபட்ட பொருள்..சூழ்ச்சி செய்யும் ஈஸ்வரி..பாக்கியாவின் திடீர் முடிவு
சென்னை: இரவு முழுக்க இனியா பேசிய வீடியோவை கோபி பார்த்துக் கொண்டிருக்க அதனால் கடுப்பாகும் ராதிகா கோபியின் ஃபோனை போட்டு உடைக்கிறார்.
இனியாவை சமாதானம் செய்வதற்காக கோபி தன் கையால் காபி போட்டு கொடுப்பதை பார்த்து மேலும் ராதிகா கோபம் ஆகிறார்.

இனியாவை வைத்து கோபி மற்றும் ராதிகாவை பிரித்து விட வேண்டும் என்று ஈஸ்வரி ப்ளான் போடுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மே19ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் இரவு ராதிகா படுத்து தூங்கிக் கொண்டிருக்க அப்போது கோபி போனை வைத்து இனியா பேசியதை பார்த்துக் கொண்டிருக்கிறார். ராதிகா திடீரென்று முழித்து பார்த்து லைட் போட்டதும் கோபி தூங்குவது போல நடிக்கிறார்.
பிறகு கோபி மீண்டும் வீடியோ பார்ப்பதை தொடர ராதிகா அப்போது எழுந்து உட்கார்ந்து கொண்டு கோபியை பார்த்துக் கொண்டிருக்க ஆனால் அதை கண்டுகொள்ளாமல் கோபி வீடியோவை பார்த்துக் கொண்டிருப்பதால் கடுப்பான ராதிகா போனை தூக்கிப்போட்டு உடைக்கிறார்.
இதனால் கோபம் அடைந்த கோபி உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதனால இனியா என் பொண்ணு இல்லைன்னு ஆகிடாது. நான் பாக்கி அதை விவாகரத்து பண்ணினதுனால எனக்கும் இனியாவுக்கும் இடையில் எதுவும் இல்லனு ஆகிடாது. எனக்கும் இனியாவிற்கும் இடையில் நீ வரணும்னு நினைக்காத என்று கோவப்பட்டு திட்டி விட்டு வெளியே செல்கிறார்.
அடுத்த நாள் காலையில் இனியா படித்துக் கொண்டிருக்கிறார். அப்போது கோபி உனக்காக காபி போட்டு கொண்டு வருகிறேன் என்று சொல்லி கிச்சனில் இருந்த பாக்கியா மற்றும் செல்வியை நகர சொல்லிவிட்டு காபி போட்டு இனியாவிற்கு கொடுக்க இனியா எனக்கு காபி பிடிக்காது ஆனால் உங்களுக்காக குடிக்கிறேன் நல்லா தான் இருக்கு என்று சொல்கிறார்.
அடுத்ததாக ராமமூர்த்தி ஈஸ்வரியும் சோபாவில் உட்கார்ந்து இருக்க பாக்யா கிச்சனிலிருந்து வர அப்போது மேலிருந்து கீழே இறங்கி வந்த ராதிகா இதை பார்த்து கடுப்பாகி மேலே சென்று விடுகிறார். பிறகு ஈஸ்வரி இனியாவிடம் கோபி உன்னிடம் தான் அதிகமாக பாசம் வச்சிருக்கான். இந்த பாசத்தை வச்சு நீ அவனை உன்னுடைய கண்ட்ரோல்ல கொண்டு வரணும்.
கோபி போடும் புது நாடகம்..பாக்கியாவுக்கு எதிராக திரும்பும் இனியா..கோபத்தில் ராதிகா\
அவன் எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு இங்கேயே இருப்பான் என்று சொல்லி கொடுத்துவிட்டு மாத்திரை போட கிளம்புகிறார். அப்போது பாக்கியா நீ எதுவும் பண்ணாம உன்னுடைய படிப்பில் மட்டும் கவனம் செலுத்து என்று இனியாவிற்க்கு அட்வைஸ் செய்கிறார்.
அடுத்ததாக கோபி ஆபீஸ்க்கு கிளம்ப ரூமுக்கு வர ராதிகா கோவமாக உட்கார்ந்து இருக்க, கோபியின் முக்கியமான பைல் ஒன்றை தூக்கி வைத்துக்கொண்டு நான் கோபமாக இருக்கிறேன் என்று சொல்ல, அதற்கு கோபி நான் தான் கோபமாக இருக்க வேண்டியது. நீ என்னுடைய ஃபோனையும் உடைத்து விட்டு நீ கோபமாக இருக்கிற மாதிரி நடிக்கிறியா என்று கோபப்படுகிறார்.

நீங்க என்னையும் மயூவையும் கண்டுக்க மாட்டேங்கறீங்க என்று ராதிகா சண்டை போட இப்படி அபாண்டமாக பேசாத என்று கோபி வாக்குவாதம் செய்கிறார் அதற்கு நீங்கள் முன்ன மாதிரி இப்ப இல்லை என்று ராதிகா சொல்ல நீ மட்டும் என்ன அப்படியேவா இருக்க என்று கோபி கோபமாக பேசிக் கொண்டிருக்க இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர் அப்போது ராதிகா நீங்க உங்க பொண்ணுக்காக என்னையும் மயிரையும் சீட் பண்ணிட்டு போனவர் தானே என்று சொல்ல கோபி ஷாக் ஆகிறார் இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications