கோபி போடும் புது நாடகம்..பாக்கியாவுக்கு எதிராக திரும்பும் இனியா..கோபத்தில் ராதிகா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்யாவும், ராதிகாவும் மீண்டும் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றனர்.

இனியாவுக்கு ஆதரவாக பேசுவது போல கோபி நடந்து கொண்டதை பார்த்தது இனியா மனம் மாறுகிறார்.

இனியா மீது கோபிக்கு இருக்கும் பாசத்தை பார்த்து ராதிகா திட்டுகிறார்.

Baakiyalakshmi Serial 2023 May 18th promo and Episode Highlights

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மே 18ஆம் எபிசோட்டின் ஆரம்பத்தில், கோபி ராதிகாவிடம் இனியா பெஸ்ட் ஸ்டூடண்டாக தேர்வானதை பற்றி பெருமையாக பேச உங்க பொண்ண பத்தி பேசும்போது மட்டும் உங்க முகம் பிரகாசமாக இருக்கு என்று ராதிகா திட்டுகிறார்.

பிறகு உங்களை யாருமே மதிக்கல உங்களை ஒரு வார்த்தை கூட கூப்பிடல, அப்படி இருக்கும் போது நீங்க எதுக்கு ஓடி வரணும்? உங்களுக்காக ஏங்குகிற மயூவை கண்டுக்க மாட்டீங்க என்று திட்ட கோபி இனியாவை பற்றி தொடர்ந்து பேச ராதிகா உங்களுக்கு இனியா மட்டும் தான் முக்கியம், எங்களை பற்றி கவலையே கிடையாது என்று கோபப்படுகிறார்.

கோபி உன்னிடம் சொன்னால் எப்படி ரியாக்ட் பண்ணுவேன்னு தெரியல அதனால் தான் சொல்லல என்று சொல்ல அப்போ உங்க பொண்ணு கூட பார்க்க கூடாதுன்னு சொல்ற அளவுக்கு நான் கொடுமைக்காரி ஆகிட்டேன். அப்படித்தானே என்று அதுக்கும் ராதிகா கோபப்படுகிறார்.

பிறகு கோபி எதுவாக இருந்தாலும் வீட்ல ரூம்ல போய் பேசிக்கலாம். இப்ப ரெண்டு பேரும் ஆபீசுக்கு கிளம்பலாம் என ராதிகாவை கொண்டு போய் ஆபீஸில் விடுகிறார். அப்போது பாக்கியாவும் அந்தப் பக்கமாக வர இருவரும் பார்க்காமல் ஒருவரை ஒருவர் மோதிக் கொள்கின்றனர். டீ மேலே கொட்டுகிறது.

Baakiyalakshmi Serial 2023 May 18th promo and Episode Highlights

உடனே ராதிகா கோவப்பட பாக்கியா மன்னிப்பு கேட்டு தரையை கிளீன் செய்கிறார். பிறகு ராதிகா கோபி ஸ்கூலுக்கு சென்ற விஷயங்களை நினைத்து பாக்கியாவிடம் நீங்க பிளான் பண்ணி கோபியை உங்க பக்கம் இழுக்கு திட்டம் போடுறீங்க என்று திட்டுகிறார்கள். அதற்கு பாக்கியா அவசியமே இல்லை. நீங்க நல்லா கதை எழுதுறீங்க. என்னை நீங்க நடிக்கிறாய் என்று சொல்றீங்க ஆனா யாருமே அதை சொல்றதில்ல. ஆனால் உங்க கற்பனை வளம் ஜாஸ்தியா இருக்கு என்று பதிலடி கொடுக்கிறார்.

மேலும் தன்னுடைய வாழ்க்கையை இழுத்து பிடிக்க நான் பல விஷயங்களை செய்தேன். ஆனால் அது முடியவில்லை நான் அதிலிருந்து வெளியே வந்த பிறகுதான் சந்தோசமாக இருக்கிறேன். இவ்வளவு நாளா ஒரு மூச்சு முட்டும் வாழ்க்கையைத்தான் வாழ்ந்து இருக்கேன் என இப்போதுதான் எனக்கு புரிந்து கொண்டேன். உங்க வாழ்க்கை நான் பறிக்க மாட்டேன். நீங்க பயப்படாம தைரியமாக வாழுங்க என்று பதிலடி கொடுத்துவிட்டு கிளம்புகிறார்.

Baakiyalakshmi Serial 2023 May 18th promo and Episode Highlights

அதன் பிறகு இனியா கிச்சனில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்க வீட்டுக்கு வரும் கோபி இனியா பக்கத்தில் உட்கார்ந்து ஸ்கூலில் நடந்த விஷயத்தை வீடியோவாக எடுத்த விஷயத்தை காட்டி பெருமைப்பட்டு கொண்டிருக்க, ஒரு பக்கம் பாக்கியாவும் மறுபக்கம் ராதிகாவும் நின்று இவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கின்றனர். பிறகு கிச்சனிலிருந்து பாக்யா வெளியே வர அங்கிருந்த ராதிகா பார்த்து கடுப்பாகி செல்கிறார்.

பிறகு இனியா தூங்க ரெடியான நேரத்தில் பாக்யா ஸ்போக்கன் இங்கிலீஷ் பிராக்டிஸ் செய்து கொண்டு இருக்க, இனியா கோபி பேசிய விஷயங்களை பற்றி சொல்ல பாக்கியா ஆறுதல் கூறுகிறார். அதனால் இனியா கோபமாகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+