அம்மா பாசத்தில் கோபி..ராதிகாவிற்கு கிடைத்த அதிர்ச்சி..இனி எடுக்கப் போகும் அதிரடி முடிவு..?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோபி குடித்துவிட்டு எழிலுக்கு போன் செய்த நிலையில் எழில் வர முடியாது என்று கூறி இருக்கிறார்.

ஈஸ்வரி கோபியை கூட்டிட்டு வர செழியனை கூட்டிக்கொண்டு செல்கிறார்.

தெருவில் கீழே விழுந்து கிடந்த கோபியை ஈஸ்வரி வீட்டிற்கு கூட்டி வரும் போது அம்மா சென்டிமென்ட் பாட்டு பாடி கோபி பீல் பண்ணுகிறார்.

Baakiyalakshmi Serial 2023 May 25th to 30th promo Highlights

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மே 24ஆம் தேதியில் இருந்து 30 ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இதில் ராதிகா இனி இவரை இப்படியே விட்டால் சரிப்பட்டு வராது என்று கோபிக்கு போன் போடுகிறார்.

அதே நேரத்தில் குடித்துவிட்டு வண்டி ஓட்ட முடியாமல் தெருவில் விழுந்து கிடந்து கொண்டு எழிலுக்கு போன் செய்த நிலையில் எழில் தான் கூட்டிட்டு வர போக மாட்டேன் என்று கூறிவிட்டதால் ஈஸ்வரி செழியனை கூட்டிக்கொண்டு கோபியை தேடி செல்கிறார்.

தெருவில் அங்கே இங்கே காணாமல் தேடிக் கொண்டிருந்த ஈஸ்வரி கடைசியாக ஓர் இடத்தில் காரின் அருகில் கோபி விழுந்து கிடப்பதை பார்த்து கூட்டிக்கொண்டு வருகின்றனர். அப்போது அம்மா என்று அழைக்காத நாளில்லையே எனும் பாடலை போட்டு கோபி அம்மாவின் மீது தன்னுடைய பாசத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் ராதிகா போன் மேல் போன் பண்ணிக் கொண்டிருக்க அதை கோபி எடுக்காததால் கடும் கோபத்தில் இருக்கிறார். இந்த நிலையில் இனி ராதிகா என்ன முடிவெடுக்க போகிறார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. ஏற்கனவே வீட்டை விட்டு ராதிகா அவருடைய வீட்டிற்கு சென்று விட்டதால் இனி மீண்டும் திரும்பி வர மாட்டார் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

Baakiyalakshmi Serial 2023 May 25th to 30th promo Highlights

இந்த நிலையில் ஈஸ்வரி ராதிகாவை டைவர்ஸ் செய்து விட்டு மீண்டும் நம்முடைய வீட்டிலேயே இருந்து விடு கோபி என்று கோபியிடம் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் கோபி குடித்துவிட்டு மறுபடியும் அம்மாவோடு சேர்ந்து இருப்பதால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

அதே நேரத்தில் தான் இந்த வீட்டை விட்டு வெளியே வந்தது தப்பு என்று ராதிகா மீண்டும் தன்னோடு மயூவையும் கூட்டிக்கொண்டு பாக்கியா வீட்டிற்கு போகப் போகிறார் என்றும், இனிதான் கோபிக்கு பெரிய பிரச்சனை இருக்க போகிறது என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+