கிச்சனை இரண்டு பண்ணிய ராதிகா..வீட்டை விட்டு போக சொன்ன கோபி..வெடித்த புது பிரச்சனை
சென்னை: பாக்கியாவை முதல் முறையாக சுடிதாரில் பார்த்த கோபி அதிர்ச்சி அடைகிறார்.
ராதிகா கிச்சனில் தனியாக அடுப்பு வைத்து சமையல் செய்கிறார்.
கோபி ராதிகாவை வீட்டை விட்டு போக சொல்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மே 4ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் குடிபோதையில் உட்கார்ந்து ஜெனியிடம் பேசிக் கொண்டிருக்க, அப்போது பாக்கியா சுடிதாரில் வீட்டு வாசலில் வந்து நிற்க அதை பார்த்து கோபி ஜெனியிடம் ஏதோ ஒரு சின்ன பொண்ணு வந்து இருக்கு, அது உன்னோட கிளாஸ் மட் போல என்று சொல்ல ஜெனி ஷாக் ஆகிறார்.

பிறகு பாக்யாவும் ஜெனியும் பேசுவதை பார்த்து அதிர்ச்சியான கோபி டைவர்ஸ் பண்ணிட்டு நாம சந்தோஷமா இருக்கலாம்னு பார்த்தா, இவ சந்தோஷமா இருக்கா, நான் குடிச்சிட்டு புலம்பிட்டு இருக்கேன். இவள் மார்டன் மங்கையாக மாறிட்டா என்று புலம்பி கொண்டிருக்கிறார்.
பிறகு பாக்கியா, ஜெனி, செல்வி எல்லோரும் கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்க அப்போது சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கி வரும் ராதிகா கிச்சனில் தனியாக இன்டக்சன் அடுப்பு வைத்து சப்பாத்தி போட்டு செல்வியை நக்கல் அடிக்கிறார். பிறகு ஈஸ்வரியை கூட்டி வந்த செல்வி இங்கு என்ன பண்ணுறா என்று ஈஸ்வரி கேட்க, தெரியலையா அத்தை சமைக்கிறேன் என்று சொல்ல, நான் உனக்கு அத்தை கிடையாது என்று ஈஸ்வரி சொல்ல, என் புருஷனுக்கு அம்மான்னா எனக்கு அத்தை தானே என்று ராதிகா பதில் கொடுக்கிறார்.
பிறகு நான் உன்னை இங்கே எதுவும் எடுக்க கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல என்று சொல்ல, இது எல்லாம் நான் வாங்கி வந்த பொருள் என ராதிகா பதிலடி கொடுக்க, பாக்கியா இதையெல்லாம் பெருசாக எடுத்துக் கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பி ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்கிறார். அடுத்து கோபி ரூமில் இருக்க, அங்கு வரும் இனியா அவரது புக்கை எடுக்க வந்ததாக சொல்ல, கோபி உனக்காகத்தான் நான் இங்கே இருக்கிறேன். டாடி உனக்கு ஒரு போன் வாங்கி தரேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

ஆரம்பத்தில் இனியா சரியாக பேசாமல் இருக்க அப்போது அங்கே ராதிகா வருவதை பார்த்ததும் ராதிகாவை வெறுப்பேற்றுவது போல பேசிவிட்டு போகிறார். ராதிகா அவ என்கிட்ட பேசல, என சண்டை போட்டுக்கொண்டு பிறகு சப்பாத்தி கொடுக்க, கோபி ஊட்ட சொல்லி சாப்பிடு இருவரும் படுத்துவிட, ராதிகா மயூ என்னை ரொம்ப மிஸ் பண்றா, அவளை நானும் மிஸ் பண்றேன். நீ அங்கே போய்விடு என்று சொல்ல ராதிகா கடும் கோபம் ஆகிறார்.
நீங்களும் என்னை துரத்துவதிலேயே இருக்கீங்க என ராதிகா சண்டை போட, கோபி நாம ரெண்டு பேரும் அங்க போயிடலாம்னு தான் சொன்னேன் என சமாளிக்கிறார். ராதிகா எனக்கு கோபமா வருது எனக்காக நீங்க ஏதாவது பண்றீங்களா? என்று திட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications