அமிர்தாவுக்கு கிடைத்த அதிர்ச்சி.. ஈஸ்வரி சொன்ன வார்த்தை.. இனி நடக்கப் போவது இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் செப்டம்பர் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

இதில் தனக்கு போன் செய்த கோபியை ஈஸ்வரி அவமானப்படுத்தி பாக்கியாவை பற்றி பெருமையாக பேசுகிறார்.

Baakiyalakshmi Serial 2023 September 11th to 16th promo full update

அதே நேரத்தில் ஈஸ்வரி வார்த்தையை கேட்டு பாக்கியா அதிர்ச்சியடைகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் சற்றும் எதிர் பார்க்காத பல திருப்பங்கள் அதிரடியாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் கடந்த வாரம் அமிர்தாவின் முதல் கணவர் கணேசன் மீண்டும் உயிரோடு வீட்டிற்கு வந்திருந்தார். இந்த நிலையில் இனி என்ன நடக்க போகுமோ என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது.

Baakiyalakshmi Serial 2023 September 11th to 16th promo full update

அதே நேரத்தில் வீட்டிற்கு வந்த கணேசன் அமிர்தா எங்கே என்று கேட்க அதற்கு அவருடைய அம்மாவும் அப்பாவும் அமிர்தா சென்னைக்கு போயிருக்கிறார். வரதுக்கு ரெண்டு மூணு நாலு ஆகும். ஆனால் நீ வந்திருக்கிறதை பற்றி இப்போ சொன்னால் அவள் அதிர்ச்சி ஆகிவிடுவார். வீட்டுக்கு வரட்டும் அதற்கு பிறகு உன்னை பற்றி சொல்லலாம் என்று சமாதானப்படுத்தி வைத்திருந்தனர். அதே நேரத்தில் அமிர்தா எழிலோடு எடுத்த புகைப்படங்களையும் வீட்டில் மறைத்து வைத்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஈஸ்வரி காணாமல் போனதை தெரிந்து கொண்ட கோபி பெரிய அளவில் அதிர்ச்சியாகி ராதிகாவின் ஆபீசுக்கு வந்து சண்டை போட்டு இருந்தார். இந்த நிலையில் ராதிகா உங்களுக்கு உங்க அம்மா உங்க குடும்பம் தான் முக்கியம்னா அப்படியே போயிருங்க வீட்டு பக்கம் வந்துராதீங்க என்று ராமமூர்த்தி முன்பு திட்டி இருந்தார். அதே நேரத்தில் அமிர்தாவிடமும் குழந்தையை கொண்டு இங்கே வேலைக்கு வரக்கூடாது என்று ராதிகா மிரட்டி பிரச்சனை செய்திருந்தார்.

Baakiyalakshmi Serial 2023 September 11th to 16th promo full update

இந்த நிலையில் நின்று கோபி ஈஸ்வரிக்கு மீண்டும் போன் செய்து எங்கே இருக்கீங்க என்று விசாரிக்க, அதற்கு ஈஸ்வரி நாங்க காட்டுக்குள்ள தான் இருக்கோம் என்று சொல்ல, அதற்கு கோபி என்னது மறுபடியும் காட்டுக்குள்ளையா? ஏதாவது மிருகங்கள் எதுவும் வந்து விடப் போகுது என்று பயப்பட, அதற்கு அப்படி வந்தாலும் பரவாயில்லை என்று ஈஸ்வரி சொல்ல, ஏன் அப்படி என்று கோபி கேட்க அதான் பாக்கியா இருக்காளே! நான் பாக்கியா கூட எங்க வேணாலும் போவேன் என்று ஈஸ்வரி சொன்னதும் கோபி அதிர்ச்சி அடைகிறார்.

அதற்கு கோபி, உனக்கு தேவை...டா, உனக்கு தேவை தான்.. என்று தனக்கு தானே திட்டிக் கொண்டு இருக்க அதைத் தொடர்ந்து எல்லோரும் ஹோட்டல் அறையில் இருக்கும் போது ஈஸ்வரி ஆம்பளைங்க துணை இல்லாமல் எங்கேயும் போனது இல்ல, இனி நாமளும் இப்படி எங்கேயாவது அடிக்கடி கிளம்பி போயிட்டு வரலாம் என்று சொல்ல அதற்கு அதிர்ச்சியான பாக்கியா, அத்தை நீங்க என் அத்த தானா? என்று கேட்க, அதற்கு ஈஸ்வரி சிரித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது.

Baakiyalakshmi Serial 2023 September 11th to 16th promo full update
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+