முதல் கணவரை சந்தித்த அமிர்தா.. எழில் சொன்ன வார்த்தை.. அதிர்ச்சியில் பாக்யா.. பரபரப்பின் உச்சம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செப்டம்பர் 12ஆம் தேதிக்கான எபிசோடு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது.

அதில் அமிர்தாவின் முதல் கணவர் அமிர்தாவை நேரில் பார்க்க வேண்டும் என்று தன்னுடைய வீட்டில் பிரச்சனை செய்து கொண்டு இருக்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 September 12th episode full update

அதே நேரத்தில் அமிர்தா தன்னுடைய முதல் கணவர் கணேசனை நேரில் பார்த்ததும் அவர் தன்னை விரட்டி வருவது போன்று கனவு கண்டு பயப்படுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் இனியாவை சுற்றி சில ஆண்கள் நின்று கொண்டு தொந்தரவு செய்ய, அப்போது பாக்கியா இனியாவிற்கு முன்பு நின்று அவர்களை திட்டி விட்டு இனியாவை கூட்டிக்கொண்டு தைரியமாக அந்த இடத்தை விட்டு போக இனியா பாக்யாவை பெருமையாக பார்க்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 September 12th episode full update

அப்போ பாண்டியன் ஸ்டோர் முல்லை.. இப்போ எதிர்நீச்சல் குணசேகரன்.. ஒரே ஒற்றுமை.. வருத்தத்தில் ரசிகர்கள்
பிறகு எல்லோரும் ரூமில் இருக்கும்போது ஈஸ்வரி ஆண்கள் துணையில்லாமல் நாம மட்டும் வந்திருக்கிறது ஜாலியா தான் இருக்கிறது. இனி இப்படி ஒரு மாதத்திற்கு ஒருமுறை வந்து போகணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது ஈஸ்வரி பேசுவதை பார்த்து அதிர்ச்சியான பாக்கியா நீங்களா? அத்தை அப்படி பேசுறது என்று நம்ப முடியாமல் கேட்கிறார்.

அப்போது செல்வியும் நீங்க வெளியே போகும் போது என்னையும் கூட்டிட்டு போகணும் என்று சொல்ல எல்லோரும் சேர்ந்து சிரித்துக் கொண்டிருக்கின்றனர். மறுபக்கம் அமிர்தாவின் முதல் கணவர் கணேசன் வீட்டுக்குள்ளேயே இருக்க ஒரு மாதிரியா இருக்கு. எங்கயாவது போயிட்டு வரலாமா? அமிர்தா ஊருக்கு போயிட்டு வருவோமா? என்று கேட்க, அதற்கு அவருடைய அம்மா, அமிர்தாவின் அம்மாவும் அப்பாவும் எங்க இருக்காங்கன்னு எங்களுக்கு தெரியாது. போன் நம்பர் இல்லை என்று சொல்லி சமாளிக்கின்றனர்.

Baakiyalakshmi Serial 2023 September 12th episode full update

ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத கணேசன் நீங்க என்கிட்ட எதையோ மறைக்கிறீங்க. எதுக்காக அமிர்தாவை அனுப்பி வச்சீங் அவா என் பொண்டாட்டி என்று கேட்க, அதற்கு கணேசனின் அம்மா, எங்களை மாதிரி தான் அவங்க அம்மாவும் அப்பாவும் நீ உயிரோட இல்லன்னு நினைச்சு கூட்டிட்டு போயிட்டாங்க. இப்ப அவங்க ஊர்லயே இல்லை. சென்னையில் இருக்காங்க என்று சொல்லி நம்ம அவளை தேடி கண்டுபிடிக்கலாம் என்று சமாளித்து கணேசனை தூங்க வைக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து அமிர்தா வீட்டில் தூங்கிக் கொண்டிருக்க அப்போது அமிர்தா தனியாக நடந்து கொண்டிருப்பது போன்றும் அங்கு கணேசன் தனியாக நின்று கொண்டு முதலில் சந்தோஷமாக பேசும் கணேசன் பிறகு கோபத்தோடு தன்னை துரத்துவது போன்று கனவு காண்கிறார். பிறகு அதிலிருந்து திடுக்கென்று விழித்து தண்ணீரை எடுத்து குடிக்கும் போது தண்ணீர் பாட்டில் கீழே விழுந்து விடுவதால் எழில் எழுந்து என்னவென்று கேட்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 September 12th episode full update

தற்போது அமிர்தா கணேசனை கனவில் கண்ட விஷயத்தை சொல்ல, எழில் அதெல்லாம் ஒன்றும் இருக்காது நீ பயப்படாமல் தூங்கு என்று அமர்ந்தாவை தூங்க வைக்கின்றார். பிறகு விடிந்ததும் இனியா கிளம்பிட்டு இருக்க, பாக்கியா எல்லாம் எடுத்து வச்சுட்டியா? என்று தேடிக்கொண்டே தனது பர்ஸை காணவில்லை என்று தேடுகிறார். அதை தொடர்ந்து ஈஸ்வரியும், செல்வியும் தேடிக் கொண்டிருக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+