அப்போ பாண்டியன் ஸ்டோர் முல்லை.. இப்போ எதிர்நீச்சல் குணசேகரன்.. ஒரே ஒற்றுமை.. வருத்தத்தில் ரசிகர்கள்
சென்னை: சின்னத்திரையில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்து கொண்டிருந்த சில நடிகர்கள் திடீரென்று இறந்து விடுவதால் ரசிகர்கள் பெரும் துயரத்தில் இருக்கின்றனர்.
அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்திருந்தார்.

அதேபோல சில வருடங்களுக்கு முன்பு பாண்டியன் ஸ்டோர் சீரியலின் முல்லை கேரக்டரில் பிரபலம் அடைந்த வி.ஜே சித்ராவும் திடீரென்று மரணம் அடைந்திருந்தார். இந்த நிலையில் இருவருடைய மரணத்தை குறித்தும் அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மரணம் என்பது எல்லோருக்கும் பொதுவானது தான். ஆனால் அது நமக்கு நெருக்கமானவர்களுக்கோ, நமக்கு பிடித்தவர்களுக்கு வரும்போது அதை எல்லோராலும் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அந்த மாதிரி தான் தற்போது சீரியலில் ஒரு சில நடிகர்களை தங்கள் வீட்டில் ஒருவர் போல பல ரசிகர்கள் பார்த்து பழகி விடுகிறார்கள். அவர்களுடைய திடீர் இழப்பை தாங்க முடியாமல் தொடர்ச்சியாக ரசிகர்கள் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு திடீரென்று மரணம் அடைந்த வி ஜே சித்ராவின் மறைவு அவருடைய ரசிகர்களால் எப்போதும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒருவராக இருந்த முல்லை- கதிர் கேரக்டர் தான் அதில் முல்லையாக விஜே சித்ரா நடித்து வந்தார். இவருடைய நடிப்பு அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தது.
ஆரம்பத்தில் விஜேவாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய சித்ரா பல போராட்டங்களுக்கு பிறகு தான் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்து பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருடைய அன்பையும் பெற்றிருந்தார். ஆனால் சற்றும் எதிர்பார்க்காமல் ஒரே நாளில் அவர் மரணம் அடைந்து விட்டார். அதற்குப் பிறகு அவருடைய கேரக்டரில் பல நடிகைகள் மாறி மாறி நடித்து வந்தாலும், விஜே சித்ராவை போல யாராலும் வர முடியாது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இப்போதும் அதேபோலத்தான் எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்துவிற்கும் நடந்திருக்கிறது. மாரிமுத்துவும் ஒரு உதவி இயக்குனராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இயக்குனராக இரண்டு படங்களை இயக்கியும் இருந்தார். ஆனால் அந்த படங்களும் பெரிய அளவில் அவருக்கு வெற்றி கொடுக்கவில்லை. தொடர்ந்து சின்ன சின்ன கேரக்டரில் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அதில் எல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் எதிர்நீச்சல் சீரியலில் அவருக்கு கிடைத்தது. முதல் முறையாக சீரியல் நடித்தாலும் சின்னத்திரை ரசிகர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.
2கே கிட்ஸ்களையும், ஆண்களையும் கூட சீரியல் பார்க்க வைத்த பெருமை நடிகர் மாரிமுத்துவிற்கு சேரும் என்பது பலருடைய அசைக்க முடியாத நம்பிக்கை. ஆனால் அந்த புகழின் உச்சத்தில் இருக்கும்போது அவருக்கு எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்திருக்கிறார். இந்த நிலையில் இனி எந்த நடிகர் வந்து குணசேகரன் ஆக நடித்தாலும் மாரிமுத்துவின் முகம் தான் எங்களுக்கு நினைவு வரும் என்று அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதுபோல இவர்கள் இருவருக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை என்றால் பல போராட்டங்களுக்குப் பிறகு ஒரு கேரக்டரின் அங்கீகாரத்தோடு அதிகமான ரசிகர்களின் அன்பை பெற்று இருந்தனர். ஆனால் அதில் அதிக நாட்கள் நீடிக்க முடியாமல் ஆகிவிட்டது. அது போல நடிகர் மாரிமுத்துவும் சரி, விஜே சித்ராவும் சரி அவருடைய சக நடிகர்களிடமும் ரசிகர்களிடமும் அதிகளவில் அன்போடு பழகி இருக்கின்றனர். சீரியலில் இவர்களுடைய கேரக்டரை தாண்டியும் நிஜ வாழ்க்கையில் பலருடைய பாசத்தையும் வென்றிருக்கின்றனர். அதனால்தான் அவர்களுடைய மரணத்தைக் கேட்டு பல கோடி மக்கள் கதறி அழுதி இருக்கின்றனர்.
-
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications