பாக்யாவின் லைசன்ஸை திருடிய கோபி.. பழனிச்சாமி கொடுத்த அதிர்ச்சி.. எதிர்பாராத திருப்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் செப்டம்பர் 16ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் பாக்யாவை பழிவாங்க வேண்டும் என்று கோபி பாக்கியாவின் லைசென்ஸை திருடி வைத்துக்கொண்டு தன்னுடைய நண்பரிடம் இது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் அங்கு பழனிச்சாமியும் வந்துவிட எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்யா லைசென்ஸை காணவில்லை என்று ராமமூர்த்தி இடம் சொல்லி வீட்டில் இருக்கிறதா? என்று தேடிப் பார்க்க சொல்ல, ராமமூர்த்தியும் அமிர்தாவும் அவசரமாக வீட்டிற்கு கிளம்பி போகின்றனர். இதை பார்த்த கோபி இவர்கள் அவசரமாக கிளம்புவதை பார்த்தால் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு என்று புரிந்து கொண்டு இனியாவிற்க்கு போன் பண்ணி கேட்கிறார்.

அப்போது இனியா விஷயத்தை சொல்ல அதை கேட்டு கோபி கடுப்பாகி ஈஸ்வரியிடம் ஃபோனை கொடுக்க சொல்கிறார். பிறகு ஈஸ்வரி பேசும்போது லைசன்ஸ் வீட்ல இருக்கு அதை எடுக்க உங்க அப்பா போறாரு அவர் கொண்டு வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்ல, அதற்கு கோபி நான் ஒரு வண்டி அனுப்பி வைக்கிறேன். அதில் நீங்களும் இனியாவும் வீட்டுக்கு வந்துடுங்க என்று சொல்கிறார்.
அதைத் தொடர்ந்து கோபி தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு பாக்யா வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறார். அப்போது ராதிகா போன் செய்ய, நான் அப்ப அங்க தான் வந்தேன். ஆனா இப்போ எனக்கு ஒரு சின்ன வேலை அதான் கிளம்பி போகிறேன் என்று சொல்லி சமாளித்துவிட்டு பிறகு பாக்கியா தன்னிடம் செலவுக்கு காசு இருக்கா என்று கேட்டு அவமானப்படுத்தியதை நினைத்து பார்க்கிறார்.

அப்படியே பாக்கியா வீட்டிற்கு வந்ததும் வீட்டில் யாரும் இல்லாததால் அவர் வைத்திருந்த சாவியை வைத்து ரூமை திறந்து பாக்கியாவின் லைசன்ஸை திருடிக் கொண்டு போகிறார். கோபி போன பிறகு அமிர்தா வீட்டிற்கு வந்து லைசென்ஸை தேடி பார்த்து அது எங்கேயும் கிடைக்கவில்லை என்று பாக்யாவிடம் சொல்ல அவர் அதிர்ச்சி அடைகிறார்.
அதைத்தொடர்ந்து கோபி அனுப்பி வைத்த கார் இனியாவையும், ஈஸ்வரியையும் கூட்டிட்டு அந்த காரில் வீட்டுக்கு போங்க என்று சொல்கிறார். அதே நேரத்தில் கோபி தன்னுடைய நண்பனை சந்தித்து பாக்கியாவுக்கு நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லி இப்போது பாக்கியாவை ஜெயிலில் அடைக்க போறாங்க என்று சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு பழனிச்சாமியும் வருகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications