பாக்கியாவுக்காக கடைசியில் பழனிச்சாமி செய்த செயல்.. கோபத்தில் திட்டும் ஈஸ்வரி.. எதிர்பாராத முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செப்டம்பர் 18ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது.
அதில் பாக்கியாவை மாட்ட வைக்க வேண்டும் என்று கோபி போட்ட பிளானை கடைசி நேரத்தில் பழனிச்சாமி முறியடித்து விட்டார்.

இதனால் பாக்கியாவை போலீஸ் கைது செய்வார்கள் என்று காத்திருந்த கோபிக்கு அதிர்ச்சி கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் காபி ஷாப்பில் கோபி டீ குடித்துக் கொண்டிருக்கும் இடத்திற்கு பழனிச்சாமியும் வருகிறார். அப்போது கோபி தன்னுடைய நண்பரிடம் பாக்கியாவை பற்றி தப்பு தப்பாக பேசிக் கொண்டிருக்கிறார். அவா என்னை அவமானப்படுத்தியவா தானே? அதனால் போலீஸ் பிடிச்சிட்டு போகட்டும் ஜெயில்ல வைக்கட்டும் என்று கோபமாக பேசிக் கொண்டிருக்க அதை எல்லாம் பழனிச்சாமி கேட்டுக் கொண்டே இருக்கிறார்.
தொடர்ந்து வீட்டில் எங்கு தேடியும் லைசென்ஸ் கிடைக்காததால் என்ன செய்வது என்று தெரியாமல் எழில் அமிர்தா, ராமமூர்த்தி எல்லோரும் யோசித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்கியா எழிலுக்கு போன் பண்ணி லைசென்ஸ் கிடைக்குமா? என்று கேட்க அதற்கு எழில் எப்படியாவது உனக்கு எடுத்து அனுப்புகிறேன் என்று சொல்லுகிறார்.

அதே நேரத்தில் கோபி பழனிச்சாமி நிற்பதை பார்க்காமல் பாக்யாவின் ஒரிஜினல் லைசென்ஸை நான் தான் வீட்டிற்கு போய் எடுத்தேன். என்னிடம் ஒரு சாவி இருப்பது வீட்டில் யாருக்கும் தெரியாது என்று எல்லா ரகசியத்தையும் உடைத்துக் கொண்டிருக்கிறார். கூடவே கையில் வைத்திருந்த லைசென்ஸை உடைத்து கீழே போட இதை பார்த்துக் கொண்டிருந்த பழனிச்சாமி அதை எடுத்து சரி செய்து போட்டோ எடுத்து இனியாவிற்கு அனுப்புகிறார்.
மறுபக்கத்தில் லைசென்ஸ் வராததால் பொறுமை இழந்த போலீஸ் பாக்கியாவை வண்டியில் ஏற சொல்கின்றனர். அப்போது ஈஸ்வரியையும் இனியாவையும் பாக்கியா கிளம்ப சொல்கிறார். அந்த நேரத்தில் பழனிச்சாமி போட்டோவை இனியாவிற்கு அனுப்பி பாருங்கள் என்று சொல்ல இனியா போலீசுக்கு காட்ட, இதனால் அவர்கள் பாக்யாவை மன்னித்து விடுகிறார்கள்.
அப்போது பக்கத்தில் இருந்தவர்கள் பாக்யா மீது எந்த தப்பும் இல்லை. அந்த முதியவர் தான் வேகமாக வந்து காரில் விழுந்தாரு என்று சொல்ல, ஈஸ்வரி இதையெல்லாம் முதலில் சொல்ல மாட்டீங்களா? என்று திட்டுகிறார். பிறகு பாக்கியா எல்லாரையும் சமளித்துக் கொண்டு வண்டியை எடுத்து அங்கிருந்து கிளம்புகிறார். அதோடு கோபி அனுப்பிய காரை வேண்டாம் என்று ஈஸ்வரி அனுப்பி வைத்து விடுகிறார்.

அப்போது கோபி போன் பண்ணி எல்லாம் ஓகே தானே நீயும் பாட்டியும் வந்து கொண்டு தானே இருக்கீங்க என்று கேட்க, அதற்கு இனியா ஆமாம் டாடி ஒரு பிரச்சனை இல்ல, பழனிச்சாமி அங்கிள் லைசன்ஸ் போட்டோ எடுத்து அனுப்பிட்டாரு, இதனால் எல்லாம் பிரச்சனையும் சரியாயிடுச்சு என்று சொல்ல கோபி கோபப்பட்டு தன்னுடைய நண்பரிடம் பழனிசாமி பற்றி திட்டிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications